மும்பையில் நடந்த சம்பவம் இது…. பெண்கள் அழகு நிலையம் ஒன்றிலிருந்து பெண்கள் வெளியே வரும்போதெல்லாம் சில இளைஞர்கள் கேலி செய்வதாக அதன் உரிமையாளருக்கு புகார் போனது. அவர் காவல்துறைக்குத் தெரிவிக்கவில்லை. அந்த இளைஞர்களைக் கூப்பிட்டு எச்சரிக்கவுமில்லை. தன் அழகுநிலையத்துக்கு வெளியே ஒரு பெரிய பலகை வைத்தார்: பேசும் பலகைகள்
“இங்கிருந்து போகும் பெண்களை கேலி செய்யாதீர்கள். அவர் உங்கள் பாட்டியாகக்கூட இருக்கலாம். அடையாளம் தெரியாமல் அவசரப்படாதீர்கள்”.
சிகை அலங்காரக் கடை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பலகையில் பொறிக்கப்பட்டிருந்த நயமான வாசகங்கள்:
“நாங்கள் தலையெடுக்க, உங்கள் தலையைக் கொடுங்கள்”.
நிறுவனம் ஒன்றில் அலுவலர்களை ஊக்கப்படுத்தவும், உண்மையை உணர்த்தவும் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையில் ஒரு வாசகம்:
“வெற்றி என்பது உங்களைத் தேடி வருகிற சொந்தமல்ல. நீங்கள் தேடிப்போக வேண்டும். ஆனால் நீங்கள் வெற்றி பெற்றதும் உங்கள் சொந்தங்கள் உங்களைத் தேடிவரும்”
Leave a Reply