எது சாதனை?
நமது நம்பிக்கை மாத இதழின் மெகா பயிலரங்கமான வெற்றிவாசல் விழாவில் ”சாதனை சுடர்” விருது பெற்ற லூகி அமைப்பின் தலைவர் திரு.ட. ஸ்ரீநிவாசன் நிகழ்த்திய ஏற்புரை.
இன்று காலை எனக்குள் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. விருதுகள் தேவையா? விருதுக்கான ஏற்புரைகள் தேவையா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.
பொதுவாகவே நாம் அனைவரும் பிறரின் பாராட்டுகளுக்காக ஏங்குகின்றோம். குழந்தை, பெற்றோரின் பாராட்டிற்கும், மாணவன், ஆசிரியர் பாராட்டிற்கும், ஏன் கடவுளுக்குக்கூட பக்தனின் பாராட்டு தேவைப்படுகிறது. பாராட்டுகள் மனிதனை உற்சாகப்படுத்தும். ஒருவருக்கு பாராட்டுக்கள், விருதுகள் மிகவும் நியாயமானதாக இருக்க வேண்டும்.
நியாயமானவர்களைப் போய்ச் சேர வேண்டும். நியாயமானவர்களால் வழங்கப்பட வேண்டும். அந்த வகையில் நமது நம்பிக்கை வழங்கும் இந்த விருது தகுதியானதுதான்.
இன்றைய வளர்ந்து வரும் பிரம்மாண்ட நிழலில் இளைஞர்கள் பாராட்டுகளுக்காக ஏங்குகின்றனர். ஆனால், முதியவர்களோ பாராட்ட முன் வருவதில்லை.
சாதனையாளன் என்பவன் யார்? சாதனையாளன் என்பவன் அவனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அவன் குடும்பத்தில் அவனைச் சார்ந்தோர், உற்றார் உறவினரின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், எதுவென்றால் அவன் தொழில் சார்ந்தவர்களை அவர்களது வாழ்வில் முன்னேற வைக்க வேண்டும். அந்த வகையில் இந்த விருதுக்கு நான் தகுதியானவன் என்பதில் பெருமிதம் அடைகின்றேன்.
ஏற்புரை எப்படி இருக்க வேண்டும் என்றால் ஏற்புரை அடக்கத்தோடும், அளவோடும் இருக்க வேண்டும்.
இந்த விருது எனக்கு தகுதியானது என்று மிகுந்த நம்பிக்கையோடு சொல்வேன். நமது நம்பிக்கை மாத இதழுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
Leave a Reply