ஜுன் 2011 இதழில் துணை ஆட்சியர் திரு.ங.எ.ராஜமாணிக்கம் அவர்களின் பேச்சு, தூங்கும் நெஞ்சங்களை தட்டி எழுப்பும் தன்மையுடன் வெளிவந்தது அருமை. கல்யாணப் பரிசு தொடர் நமது தினசரி வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆசிரியருக்கு நன்றி!!
ஜெ.ச.நித்யா, மதுரை.
நமது துயரம்தான் உலகிலேயே பெரியது என்று நம்பி நாம் மயங்கும்போது ஒவ்வொரு கோட்டுக்குப் பக்கத்திலும் இன்னொரு பெரிய கோட்டை வரைந்து, நாம் பெரியதன்று. நம்முடையதைச் சிறியதாக்கி விசித்திரம் காட்டி விளையாடுகிறது வாழ்க்கை என்னும் வரிகளில் வாழ்வியல் நிர்மாணத்திற்கான வளமான வார்த்தைகளில் விவரித்த பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் நேர்காணல் மிக அருமை.
த.சூரியதாஸ், சிலட்டூர்.
ஜுன் மாத இதழில் வெளிவந்த ஆசிரியரின் ‘மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்’ கட்டுரை மிகவும் அருமை. மேலும் பணம் சம்பாதிப்பது முக்கியமல்ல மனிதாபிமானம் சம்பாதிப்பதுதான் முக்கியம் என்ற நம்பிக்கையை இந்த இதழ் வெளிப்படுத்தியுள்ளது. பக்கத்துக்குப் பக்கம் படிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.
மகாதேவன், சென்னை.
ஜுன் இதழில் திரு. இயகோகா சுப்பிரமணியம் அவர்களின் கட்டுரையில் அனுபவப் படிப்பின் மகத்துவம் பற்றி மிக அழகாக கூறப்பட்டுள்ளது. நம் குழந்தைகளை அவர்கள் படிப்பைக் கொண்டு ஒரு கௌரவப் பொருளாக எண்ணாது நம் தலைமுறையின் தலைவர்களாக கருதவேண்டும் என்ற கருத்து மிக அருமை.
க.செங்கோட்டையன், திருச்சி.
கிருஷ்ண. வரதராஜனின் கட்டுரை, இந்த மாதம் நடந்த எங்கள் திருமணப் பரிசாக இருந்தது. எப்படி எல்லாம் ஒரு குடும்பத்தில் சலனம் ஏற்படலாம். அவை எவ்வாறு தவிர்க்கலாம் அல்லது கையாளலாம் என்ற கருத்துக்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
அருள்பிரகாசம், இடிகரை.
Leave a Reply