பெர்லின் ஒலிம்பிக்ஸில் ஒரு விசித்திரமான தீர்ப்பு வெளிவந்தது. இரவு 10.30 மணிக்கு மேல் விளக்கொளி வெள்ளத்தில் நடந்த போல்வால்ட் போட்டியில் முதலாவதாக வந்தவரையும் நான்காவதாக வந்தவரையும் நடுவர்களால் இனங்காண முடிந்தது.
இருவருமே அமெரிக்க வீரர்கள். ஆனால் இரண்டாவது இடத்திலும் மூன்றாவது இடத்திலும் இரண்டு ஜப்பானியர்கள்.
இதில் யார் இரண்டாவது, யார் மூன்றாவது என்று தெரியவில்லை. எனவே குலுக்கல் முறையில் ஷுஹே நிஷிடா இரண்டாவது இடமென்றும் சுயோ ஒயே மூன்றாவது இடமென்றும் முடிவானது. அவர்கள் அதனை விரும்பவில்லை. ஜப்பான் வந்ததும் இரு பதக்கங்களையும் நேர்வாக்காக வெட்டினர். வெள்ளிப் பதக்கத்தின் ஒரு பகுதியை வெண்கலப் பதக்கத்தின் இன்னொரு பகுதியுடன் இணைத்தனர்.
இருவருக்குமே சமமான பதக்கம் இப்போது! நட்பில் ஜெயித்த பதக்கங்கள் அவை!
Githa
What I find so intrseeitng is you could never find this anywhere else.