கான்பிடன்ஸ் கார்னர் – 6

சியோல் ஒலிம்பிக்ஸில் படகுப்போட்டி. இரண்டாம் இடத்தில் வந்து கொண்டிருந்தார், கனடாவைச் சேர்ந்த லாரன்ஸ் லெமிக்ஸ். கடும் காற்றில் படகிலிருந்து விழுந்த சிங்கப்பூர் அணி வீரர்களை மீட்க தண்ணீரில் குதித்தார். இருவரையும் காப்பாற்றும் முன் பலரும் லாரன்ஸைக் கடந்து போயிருந்தனர்.

போட்டி முடிவில் லாரன்ஸ் லெமிக்ஸ் இரண்டாவதாக வந்ததாகவே அறிவிக்கப்பட்டார். நடுவர்கள் சொன்ன காரணம், “வெற்றிகரமான படகுவீரருக்கு இலக்கணம், ஆபத்தில் இருப்பவர்களை மீட்பதுதான்”.
மனிதாபிமானமே மகத்தான சாதனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *