வெற்றி என்பது எப்போதோ ஏற்படும் ஒன்றாயிருந்தால் போதாது. தொடர்ந்து நடப்பதாய் இருக்க வேண்டும். அத்தகைய வெற்றிக்கு வாழ்வை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் எட்டு வழிகளை வழங்குகிறார் எட் ஃபோர்மென்.
1. எதைப்பற்றி யோசிக்கிறீர்கள் என்பதை யோசியுங்கள். துன்பம், உடல்நலக்குறைவு, தோல்வி பற்றிய எண்ணங்கள் வரும்போதெல்லாம், உங்கள் எண்ண ஓட்டங்களை மாற்றுங்கள்.
2. எதிர்பாராமல் ஒரு வாய்ப்பு ஏற்பட்டால் அதனைத் தொடர்ந்து பின்பற்றி பயன்படுத்திக்கொள்ளுங்கள் எதேச்சையாக நிகழ்வதை முழுவதும் பயன்படுத்திக் கொள்ளும் புத்திசாலித்தனத்திற்குத்தான் இந்த உலகம் அதிர்ஷ்டம் என்று பெயர் கொடுத்திருக்கிறது.
3. நல்லது நடக்கும் என்று திடமாக நம்புங்கள். தீவிரமான நம்பிக்கைகள் பொய்க்க வழியே இல்லை.
4. தவறுகள் ஏற்பட்டால் அவற்றை சரியான கோணத்தில் பார்த்துப் பழகுங்கள். அதிலிருந்து படித்த பாடமென்ன, அந்தத் தவறு மீண்டும் நேராமல் பார்ப்பது எப்படி என்றெல்லாம் ஆராயுங்கள்.
5. செத்த பாம்பை அடிக்காதீர்கள். மீட்கவே முடியாத திட்டம் என்று ஒன்று முடிவாகிவிட்டால், அதில் பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்யாதீர்கள்.
6. மகிழ்ச்சி என்பது மனம் சார்ந்தது. உங்களுக்கு வழங்கப்பட்டிக்கும் வாழ்க்கையை முழு மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு அதனை மேம்படுத்தப் பாருங்கள். தன்னிரக்கம், தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றுக்கு எக்காரணம் கொண்டும் இடம் தராதீர்கள்.
7. தோல்வி என்பது, தங்களைத் தயார் செய்து கொள்ளாதவர்களின் விருப்பத் தேர்வு. திட்டமிடாமை, தயக்கம், செயல்படுவதில் சுணக்கம் எல்லாம் கொண்டவர்களுக்கே தோல்வி வருகிறது.
8. மகிழ்ச்சி – சோர்வு, இரண்டுமே எங்கிருந்தோ வந்து உங்களைத் தொற்றிக் கொள்கிற விஷயமல்ல. இரண்டுமே நீங்களாக உங்கள் வாழ்வில் உருவாக்கிக் கொள்கிற விஷயங்கள்தான். எதைப் படிக்கிறீர்கள், யாருடன் பழகுகிறீர்கள் என்பதையெல்லாம் பொறுத்தே இவை ஏற்படுகின்றன.
thu.sankar
mikavum arumai