ஏதாவது சொன்னால், “என்ன பெரிய புடலங்காய்” என்பது வழக்கம். இதற்கொரு காரணமுண்டு. சிலருக்கு, சின்ன வயதில் புடலங்காய் பிடிக்காது. வளர்ந்த பிறகும் அதே வெறுப்பு நீடிக்கும். நெருக்கமான யாராவது “சாப்பிட்டுப் பாருங்களேன்” என்று வற்புறுத்தியதும் சுவைத்துப் பார்த்தால் பிடித்துப் போகும்.
விழுங்கச் சிரமம் என்று நினைத்த புடலங்காய் விருப்பமானதாய் மாறும். இதேபோலத்தான் வாழ்வில் சில விஷயங்களை நம்மால் ஆகாது என்று நினைத்து விட்டிருப்போம். ஆனால் பின்னால் முயன்று பார்த்தால் அவை நமக்கேற்றதாகவும் நல்லவையாகவும் தெரியும். “என்ன பெரிய புடலங்காய்” என்று எதையும் தள்ளாதீர்கள். முயன்று பாருங்கள்.
KAMALAKANNAN
உங்களின் இந்த வார்த்தைகளுக்கு நான் மிகவும் சொக்கிப்போவேன்…
உளமார படைக்கப்படுகின்ற இந்த வரிகள் மனதில் மட்டும் அல்ல வாழ்க்கையிலும் பதிகின்றது
உங்களின் இந்த படைப்புகளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்…
natarajan
முயன்று பாருங்கள்.
natarajan
super