ஒளிமயமான எதிர்காலம் : பணக்காரனாவது எப்படி?

– சுகி சிவம்

தொடர் 8

இரட்டையர்களில் இரண்டு வகை உண்டு. ஒட்டிப் பிறந்த இரட்டையர், ஒரே மாதிரி இரட்டையர் என்று இருவகை. ஒரே மாதிரி இரட்டையர்கள் முகம் போல அகமும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் பழகப்பழக இருவரும் நேர் எதிர் என்று கண்டு பிடித்த கதைகளும் உண்டு.


பார்க்க ஒரே மாதிரி பழக வேறுவேறு குணம் என்கிற இரட்டையர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தட்டுமா? சிக்கனம், கஞ்சத்தனம் என்பதே அவர்கள் பெயர்கள். ஒரே மாதிரியாக உலகத்தின் கண்களுக்கு இவை ர்ழ் இவர்கள் தெரிவதே பெரிய குழப்பத்தின் காரணம். இருவரும் நேர் எதிரானவர்கள். புரிய வைக்கிறேன்.

அமெரிக்காவின் பிரபலமான கோடீசுவரர் ஒருவரை ஒரு குழு சந்திக்கப் போனது. கல்விக்கூடம் கட்ட நன்கொடை கேட்டு கோரிக்கை வைத்தது. பேசிக்கொண்டே இருந்த பணக்காரர் பாதியில் எழுந்து போய் “விளக்குகள் அநாவசியமாக எரிகின்றன நிறுத்திவிட்டு வருகிறேன்” என்று அணைத்துவிட்டு வந்தார். கோரிக்கை வைத்த குழுவின் முகப்பிரகாசம் அணைந்து போனது. “பெரிய கோடீசுவரர்.. நிறைய கொடுப்பார் என்று நம்பி வந்தால்.. மகா கஞ்சர்.. விளக்குகளை அணைத்துவிட்டு வருகிறார். என்ன கொடுக்கப் போகிறார்” என்று தளர்ந்து போனார்கள்.
கதை போல் கோரிக்கையை ரசித்துக் கேட்ட கோடீஸ்வரர் நாலைந்து குறுக்குக் கேள்விகள் கேட்டார். நம்பிக்கை இன்னும் தகர்ந்தது. முடிவில் இந்திய ரூபாய்க்கு மூன்று லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலரை செக் எழுதி அவர் தந்தபோது அதிர்ச்சி அடைந்தனர். ஒருவர் வாய்விட்டு தம் சந்தேகத்தை வெளிப்படுத்தினார். “ஒரு விளக்கு எரிவதைக் கூட செலவாக நினைக்கும் குணம் உடைய தாங்கள் எப்படி இவ்வளவு நன்கொடை தர முன்வந்தீர்கள்” என்றார். கோடீஸ்வரரோ “வெரிசிம்பிள்.. இப்படி சேமித்து மிச்சம் வைத்ததால்தான் என்னால் நல்ல காரியங்களுக்கு கொடுக்க முடிகிறது” என்றார். ராக்ஃபெல்லர் வாழ்வில் நடந்த சம்பவம் இது. இவர் கஞ்சமா? சிக்கனமா? யோசியுங்கள்.

பல்லாயிரம் ரூபாய்க்கு மேல் ஒருநாள் வாடகை ஈட்டும் அழகிய பெரிய திருமண மண்டபத்தின் உரிமையாளர் அவர். திருமணம் நடக்காத ஆடி மாதத்தில் கூட எக்ஸிபிஷன் சேல்ஸ் என்று வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கும் மண்டப உரிமையாளராக அவர் இருந்து பணம் குவிக்க முடியும். ஆனால் அவரோ மகாத்மாகாந்தி விழா, வள்ளலார் விழா, கம்பன் விழாவுக்குத் தன் மண்டபம் இலவசமாகத் தரப்பட வேண்டும் என்று தந்தார். தன் காலத்திற்குப் பிறகு இந்தத் தருமம் நின்று விடக்கூடாது என்று உயிலாகவே எழுதி வைத்துவிட்டார். மாற்றப்பட முடியாத நிபந்தனையாகவே மண்டபத்தின் தலையெழுத்தாகவே அதனை ஆக்கிவிட்டார்.

இந்தக் கொடை உணர்வு மிக்க அமரர் அ.ய.ங என்ற புகழ்பெற்ற மெய்யப்ப செட்டியார் தன் பிடிமானத்தில் இருந்த பாரதி பாடல்களின் காப்புரிமையைத் தேசத்துக்கு இலவசமாகவே தந்தார். ஆனால் இந்தக் கொடையாளியின் கடைசிப் பேச்சு என்ன தெரியுமா? மருத்துவமனையில் உயிர் பிரியுமுன் அவர் சொன்ன வார்த்தை “அந்த பாத் ரூம்ல லைட் வீணா எரியுதேப்பா” அதை ஆஃப் பண்ணுங்க” என்றுதான். லட்சம் லட்சமாகக் கொடுக்க முடிந்த ஒருவர் ஒரு ரூபாய் சிக்கனம் பற்றி ஏன் யோசித்தார் என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.

அவசியமானால் எத்தனை லட்சம் வேண்டுமானாலும் செலவு செய்யலாம். ஆனால் அவசியம் இல்லாமல் பத்து பைசா கூட வீணாக விரயமாகச் செலவாகக் கூடாது. இது இளைய தலைமுறையில் எத்தனை பேருக்குப் புரிகிறது?

செல்ஃபோனே பள்ளிப் பிள்ளைகளுக்கு அவசியமா என்று தெரியவில்லை. ஆனால் அதில் விலையுயர்ந்த மாடல் வேண்டும் என்று வீம்பு பிடிக்கிறார்கள். சின்னச் சின்ன விஷயத்திற்குக் கூட டக்டக் கென்று செல்போன் பட்டனை அழுத்தும் சிறுபிள்ளைகள் எத்தனை பேர் தெரியுமா? ஒவ்வொரு தொடர்புக்கும் செலவாகும் என்று பெற்றோர் அறிவுறுத்தினால் “ஏன் இப்படி கஞ்சத் தனமாக இருக்கிறீர்கள்?” என்று எள்ளும் கொள்ளும் வெடிக்கிறார்கள். இது நியாயமா? அதுமட்டுமல்ல மணிக்கணக்காக நிஜமாகவே மணிக்கணக்காக நண்பர்களுடன் அரட்டை அடிக்க செல்ஃபோனைப் பயன்படுத்துவது சகிக்க முடிகிறதா?
“இஹப்ப் ண்ள் ம்ஹக்ங் ச்ர்ழ் ஸ்ரீர்ம்ம்ன்ய்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் ஹய்க் ய்ர்ற் ச்ர்ழ் ஸ்ரீர்ய்ஸ்ங்ழ்ள்ஹற்ண்ர்ய்” என்று புரிய வேண்டாமா?
அமெரிக்காவில் இளம்பிள்ளைகள் செலவு செய்வது போல் இந்திய இளம்பிள்ளைளும் செலவு செய்ய ஆசைப்படுகிறார்கள். ஆனால், இதற்கு இந்திய இளம்பிள்ளைகளுக்கு உரிமை இல்லை. பதினைந்து வயது முதல் அமெரிக்கப் பிள்ளைகள் பெற்றோர் செலவில் வாழ்வதில்லை. உழைத்துப் பிழைக்க வேண்டும். அதிலேயே படிக்க வேண்டும். இந்தியப் பிள்ளைகள் அப்படி உழைக்கிறார்களா என்ன? ஹோட்டலில் சர்வராக டஹழ்ற் பண்ம்ங் வேலை பார்க்க எத்தனை இளம்பிள்ளைகள், கல்லூரி மாணவர்கள் தயார் என்று மனசாட்சியோடு சிந்திக்கவேண்டும். பெற்றோராகவே இருந்தாலும் பிறர் நம் பொருட்டு செலவழிக்கும்போது சிக்கனமாக இருக்கவேண்டும் என்பது ஒரு பண்பாடல்லவா?

இந்தப் பண்பாட்டை இளம்பிள்ளைகள் உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும்.

மகாத்மா காந்தி ஒரு சின்ன பென்சில் துண்டு தொலைந்து போனால் கூட பெரிய அமர்க்களம் செய்து விடுவாராம். எங்கே? எங்கே? என்று வைரப் புதையலைத் தேடுவதுபோல ஆசிரமத் தொண்டர்கள் தேடிப்பிடித்து பாபுஜியிடம் பென்சிலை ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் தூங்க மாட்டார். தன் ரத்தத்தையே தேசத்திற்காகச் செலவழித்த வள்ளல் பாபுஜி என்ன கஞ்சரா? சிக்கனத்தை நுட்பமாக உணர்ந்த மாபெரும் வள்ளல் அவர். உயிர்மீது கூட பற்று வைக்காத ஒருவர் எப்படி கஞ்சனாக இருக்க முடியும்?

ஆடம்பரமான ஹோட்டல், ஆடம்பரமான உடைகள், புகழ்பெற்ற கடைகளில் உள்ள விலையுயர்ந்த பொருட்களை வாங்குதலே அவசியம், ஜம்பமாகச் செலவழிப்பதே கவுரவம் என்கிற மாயையிலிருந்து கண்டிப்பாக இளம் தலைமுறை வெளிவர வேண்டும். சினிமாவுக்கு மட்டும் எவ்வளவு செலவு செய்கிறார்கள் நமது குலக் கொழுந்துகள்.

ஏழ்மையிலிருந்து வசதியை எட்டிய சிவாஜிகணேசன் ரொம்பவும் சிக்கனமானவர். அவர் பிள்ளைகள் தடபுடலாகச் செலவு செய்வது பற்றி ஒருமுறை பேச்சுவந்தது. “நான் ஏழையின் மகன்.. அவர்கள் பணக்காரனின் பிள்ளைகள்.. என்ன செய்ய?” என்று சமாதானம் சொல்லிக் கொண்டார். நாட்டுக் கோட்டை நகரத்தார் குடும்பம் ஒன்றில் பிள்ளை பிறந்த நாள் தொடங்கி, படிப்பு முடியும் நாள்வரை ஆன செலவைப் பட்டியலிட்டு வளர்த்த மகன் கையில் கொடுத்த கணக்கான தந்தையை நான் அறிவேன்.

பேராசிரியர் பா.நமசிவாயம் கம்பன் விழாவில் பேசும்போது “கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை” என்ற பாடல் வரிகளை மாற்றி “கொடிது கொடிது வளமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வளமை” என்றபோது சபையே அதிர்ந்தது. (எல்லாம் வயசானவர்கள் சேட்டை. கம்பன் விழாவுக்கு இளசுகள் எங்கே வருகிறார்கள்?)
சம்பாதிப்பதால் மட்டும் எவனும் பணக்காரன் ஆகிவிட முடியாது. சேமித்து வைப்பதே முக்கியம். நிறைய சம்பாதித்து ஏழையாகச் செத்தவரும் உண்டு. கொஞ்சம் சம்பாதித்து பணக்காரனாக வாழ்ந்தவரும் உண்டு. எனவே, சிக்கனத்தைக் கஞ்சத்தனம் என்று அசிங்கப் படுத்த வேண்டாம்.

(தொடரும்…)

21 Responses

  1. Ananthi

    Sir, Enakku ungala romba pidikkum. nenga ennoda Inspiration Sir. Thank you

  2. Vasuki R

    Sir,

    Really superb lines from this topic. u r a fantastic writter to.

    Regards,
    VASUKI. R

  3. subbu

    sir,
    iam subbu eni varum namathu nambikailum ungalin thodarkal varuvathu emathu nambikaim. sir ungalayum irainbu sarayum orey meetingala parthu innum en mantaila niraya purinchukunam nan kantipa jaipan sir .ungaladuya speech ennai charge senchikitae irrukum
    thank you sir.

  4. D.Ravi

    பணம் தேவை. ஆனால், அதுவே வாழ்க்கை அல்ல. பல தலைமுறைகளுக்கு சம்பாதித்து வைத்தாலும், இறுதியில் அந்த பணம் கூட வரப் போவதில்லை. ஆனால், ஒன்று நிச்சயம் கூட வரும். நீங்கள் சம்பாதித்து வைக்கும் ‘அன்பு’. எனவே அதை நிறைய சம்பாதியுங்கள்

  5. k rangasany

    respected sir,

    each and every letters are very very inspirational to people like me who are in multilevel marketing. Key and secret words must chance the life of low moral group.

  6. k rangasany

    each and every letters are inspirational to the people like me who are in the multi level marketing. A lot can chance in life if u follow.

  7. muthulakshmi

    sir, unka pasi enaku romba pidikum sir.unka varthai eillaraium yochivaikum. eillarum

    esya purthukolvaka sir.thanks…………………………

  8. shanthi

    Neengal sollum oru oru vaarthaiyum enakum ennakul valarum en kulanthaikum oru aliyatha bokisam.nantri.

  9. nagarajan

    really amazing so far i was oothari….. from now i will try to avoid that habit,,,,,,, kindly give more advice for us i mean younger generation

  10. V.Padma

    each and every words gives inspiration. kadavul pola varthaigala manathil padiyura mathiri solraru. nan ivarathu books thedi thedi padipaen. thank u sir.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *