புகைப்பிடித்தலுக்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கும் மத்திய அரசு, அடுத்துடுத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
புகைப்பிடித்தலின் மூலம் ஏற்படும் நோய்களின் கொடுமையை விளக்கும் புகைப்படங்களை சிகரெட் பெட்டிகளில் அச்சிடுவது பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆலோசித்து வரவதாகத் தெரிகிறது. இது பாராட்ட வேண்டிய முயற்சி.
புகையால் வரும் தீமைகளைப் படம்போட்டு விளக்க வேண்டிய நிலையில் படித்தவர்களும் இருப்பதுதான் வருத்தத்துக்குரிய விஷயம். நமது நலன் சார்ந்த அம்சங்களைப் பிறர் சொல்லியும் புரிந்துகொள்ளாத பாமரத்தன்மைக்கும் கல்வியறிவுக்கம் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.
கல்வி, மனதைப் பண்படுத்தி, மனிதனை மேம்படுத்தும் கருவியாய் அமைய, அடிப்படை மாற்றங்கள் அவசியம்.
Leave a Reply