-ம. முத்தையா
தனது பத்தாவது ஆண்டு விழாவையொட்டி, எகனாமிக் டைம்ஸ் இதழ், இன்ஃபோஸிஸ் திரு. நாராயணமூர்த்திக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக வெளியிட்ட விளம்பரம் இது:
விழித்தெழு இந்தியா! விழித்தெழு!
வேளை வந்துவிட்டது!
வேலைக்குப் போவதற்கல்ல…
மற்றவர்கள் உனக்காக வேலை செய்யும்படியாய் செய்வதற்கு!
பொறியியல் பட்டம் இருக்கிறது என்பதாலேயே
நீ பொறியாளர் ஆக வேண்டிய அவசியமில்லை;
எது உன் சிறப்பம்சம் என்று எண்ணுகிறாயோ அதைச் செய்;
அப்போதுதான் நீ எதை எண்ணுகிறாயோ அதில் சிறந்து விளங்குவாய்.
சொந்தமாக எதையாவது தொடங்கு.
அப்போதுதான் உன்னை யாரும் வேலையை விட்டு நீக்க மாட்டார்கள்.
நீயாக அதை விட்டு விலகிச் செல்லவும் முடியாது.
வெறும் பத்தாயிரம் ரூபாயில் கூடத் தொடங்கு.
அதற்குமேல் உனக்குத் தேவையில்லை.
பரிந்துரைகளோ, அரசியல்வாதிகளோ, காவல்துறையோ
உனக்குத் தேவையில்லை.
உனக்குத் தேவையெல்லாம் நீதான்.
இந்தப் பத்தாயிரம், பல கோடிகளாய் வளரும்.
இது நிஜம். உன்னால் இது முடியும்.
இந்த விளம்பரத்தை வாசித்துக் கொண்டிருக்கும்
எளிமையான – சராசரியான ஒரு மனிதனான உனக்கிது நிகழும்.
இது முன்பொரு முறை நிகழ்ந்தது.
எளிமையான – சராசரியான ஒரு மனிதனுக்கு!
விழித்தெழு இந்தியா – கனவு காணத் தொடங்கு.
Leave a Reply