வாழ்வில் வெற்றி பெற, வளமாக வாழ, வருமானம் பெருக்கிக்கொள்ள நல்லதோர் வழிகாட்டும் “நமது நம்பிக்கை” இதழ் கண்டேன். டிசம்பர் இதழில் வெளியான அத்தனை படைப்புகளும் எங்களின் நெஞ்சிலே நம்பிக்கையை ஊட்டி – சாதிக்க வேண்டும் – சாதனையாளர் ஆகவேண்டும் என்கிற எண்ண உணர்வை தூண்டியது. பேரா.எம்.ராமச்சந்திரனின் “வல்லமை தாராயோ” வாழ்க்கை பாதையை காட்டியது. பாராட்டுக்கள்.
என்.சண்முகம், திருவண்ணாமலை.
2008 டிசம்பர் இதழ் சிறப்பாக இருந்தது. சாதனைச் சதுரங்கத்தில் ம. திருவள்ளுவர் காய் நகர்த்தும் விதம் அற்புதம். சுமதி அவர்கள் கட்டுரையில் என்னை மிகவும் கவர்ந்த வாசகம். “உங்கள் மீது கூறப்படும் விமர்சனம் உண்மையெனில், சொன்னவரின் கவனிக்கும் ஆற்றலை ரசிக்கலாம். அபாண்டமெனில் அவரின் கற்பனை ஆற்றலை ரசிக்கலாம்” அற்புத வரிகள்.
ஆனந்தன், ஆண்டிப்பட்டி.
நமது நம்பிக்கை மாத இதழ் மனித சமுதாயத்தற்கு கிடைத்த சிறந்த புத்தகம். மரபின்மைந்தன் முத்தையா அவர்களுக்கு தமிழ் சமுதாயம் கடமைப்பட்டுள்ளது. “கான்ஃபிடன்ஸ் கார்னர்” வளரும் சமூகத்திற்கு சிறந்த வழிகாட்டி.
இரா.இலக்குமணப் பெருமாள், மணப்பாறை.
நமது நம்பிக்கை! எனது வாழ்க்கையில் பெற்றதாயாக, தந்தையாக, ஆசானாக, சகோதரனாக, நண்பனாக உற்றதுணை புரிந்து வருகிறது. நம்பிக்கையின் வாசகராக ஆனபின்புதான் உள்ளம் முழுவதும் நம்பிக்கை வெளிச்சம் பரவியுள்ளது. ஆசிரியரின் “பார்வையாளராக இல்லாமல் பங்கேற்பாளராக இருங்கள்” எனும் வாசகம் உள்மனதில் உரமேற்றியது.
சாதனைச் சதுரங்கம். சரியான விளக்கம் தந்தது. மனதிற்குள் மாற்றம் நிகழ்ந்தது. நம்பிக்கை சினேகலதாவின் கட்டுரை சிந்தனையை தூண்டியது. வல்லமை தாராயோ! பேராசிரியர். எம்.ராமச்சந்திரன் அவர்களின் வரிகள் அனைத்தும் வைர(ôக்ய) வரிகள்! மற்றவர்கள் விரும்பும்படி மலரும் விதம் மணம் வீசியது! நம்பிக்கை நல்வழிக்கு நல்ல பாதை! தொடரட்டும் அதன் சேவை!
ஆர்.மாயாண்டி, பட்டமடை.
வருமானம் பெருக வளமான வழிகளைக் கடைப்பிடித்து எப்படி வாழ்வது என மரபின்மைந்தன் ஏழு வழிகளை எடுத்துக் கூறியது அருமை. நிலையான வெற்றிக்கு எந்தச் சூழ்நிலையிலும் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடாமல் நேர் மறைச் சிந்தனைகளுக்கு மட்டுமே இடம் கொடுத்து வாழ வேண்டும் என்பது சரியானதே.
தியாகராஜன், இலால்குடி.
Leave a Reply