கல்லுடைக்கும் வேலை அவனுக்கு. ஒரு வணிகரின் மாளிகையைக் கடந்து போகும் போதெல்லாம் பெருமூச்சு விடுவான். “நானும் வணிகனாய் இருந்தால் வசதியாய் வாழலாமே”. கொஞ்ச நாட்களில் வணிகன் ஆனான். ஓர் அதிகாரியைக் கண்டால் வணிகர்கள் பயந்தார்கள். அதிகாரி ஆக நினைத்தான். ஆகி விட்டான்.
பிறகு அந்த அதிகாரமும் போதவில்லை. மக்கள் வரி கொடுக்கவில்லை. மழை இல்லை என்றார்கள். மழைதான் உயர்ந்தது என்று கருதி தவம் செய்து மேகமானான். மேகத்தை காற்று கலைத்தது. காற்றாய் ஆனான். காற்று எல்லாவற்றையும் அசைத்தது… கல்லைத்தவிர. கல்தான் பலமானது என்று கருதிக் கல்லாய் ஆனான். அந்தக் கல்லை ஒருவன் உளி கொண்டு உடைக்கக் கண்டு மீண்டும் கல்லுடைக்கப் போனான். ” தன் தொழிலை பெருமிதத்தோடு செய்வதே சக்தி – அதிகாரம் – ஆளுமை எல்லாமே.”
Leave a Reply