1. உங்கள் வாழ்வில் நீங்கள் உடனே செய்ய வேண்டிய விஷயம், உங்களை மேலும் மேலும் மேம்படுத்திக் கொள்வது.
2. பழைய தவறுகளின் சாம்பலில் இருந்துதான் புதிய திறமைகளும் புதிய பண்புகளும் உயிர்த்தெழ முடியும்.
3. தனித்து விடப்பட்டாலோ, எதிர்பார்த்தது நடக்காவிட்டாலோ யாரையும் பழி சொல்லாதீர்கள். இரண்டுக்குமே நீங்கள்தான் காரணம்.
4. உங்கள் தவறுகளால் சோர்ந்து போவதும் தவறு. அதற்கு அடுத்தவர்களைக் காரணமாக்குவதும் தவறு. இரண்டுமே உங்களை வளர விடாது.
5. எந்த ஒரு நல்ல விஷயத்தையும் தொடங்க எல்லா நேரமும் உகந்த நேரம். ஆனால் எந்த நல்ல விஷயத்தையும் கைவிட எந்த நேரமும் உகந்த நேரம் அல்ல.
6. உங்கள் நிகழ்காலத்தை நிர்ணயித்தது உங்கள் கடந்த காலம். அதே போல உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போவது உங்கள் நிகழ்காலம்தான்.
7. வாழ்க்கை ஏற்படுத்தும் சூழல்களை ஏற்க மறுப்பவர்கள் வாழ்க்கையையே நிராகரிப்பார்கள்.
8. உங்கள் கவலைகளைப்பற்றி அதிகம் யோசிக்காமல், உங்கள் வேலைகளைப் பற்றி யோசியுங்கள்.
9. உங்களுக்கான தடைகளிலேயே எது மிகவும் பெரியதோ அதைவிடப் பெரியவராக வாழ்வில் வளர்ந்திடுங்கள்.
10. வீழ்ச்சிகளுக்கு காரணம் சொல்பவர்களே விதியைக் காரணம் காட்டுகிறார்கள்.
Leave a Reply