வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்களை அந்தப் பெண் கண்டு வந்தாள். ஆனாலும் மலர்ந்த முகத்தோடும் புன்னகையோடும் உலா வருவதே அவள் வழக்கம். அவளை நன்றாக தெரிந்தவர்கள், இத்தனை கவலைகளுக்கு மத்தியிலும் இப்படி இருப்பது எப்படி? என்று கேட்டபோது அந்தப் பெண் தந்த பதில் அருமையானது. “கடலில் எத்தனை தண்ணீர் இருந்தாலும் கப்பல் மிதக்கும். ஆனால்
கொஞ்சம் தண்ணீர் கப்பலுக்குள் வந்தாலும் உடனே மூழ்கும். நான் கப்பலைப் போல் இருக்கிறேன். கவலைகளை எனக்குள் நுழைய விடுவதில்லை”.
Leave a Reply