மணமகள் பெயர் கேட்டி. வயது 21.
மணமகன் பெயர் நிக். வயது 23.
இருவருமே பள்ளிப் பருவத்தில் ஒன்றாகப் படித்தவர்கள்.
இருவருக்குமே உயிரைத் தின்னும் கொடிய நோய்கள்.
நெருங்கும் மரணத்திலும் வாழ்க்கை பற்றிய நம்பிக்கை
இவர்களைவிட்டு விலகவில்லை.
நாளுக்குப் பல மணிநேரங்கள் சிகிச்சை மேற்கொள்ள
நேர்ந்தாலும், தங்கள் மணவிழாவிற்கு மகிழ்ச்சியோடு
தயாரானார்கள்.
மணமகளின் அலங்கார உடைகளில் ஒன்றாக ஆக்சிஜன்
டியூப்பும் இருந்தது.
உலுக்கும் வலியில் அவ்வப்போது ஓய்வுகள் எடுத்துக்
கொண்டாலும் உற்சாகமாக மணவிழாவில்
பங்கேற்றனர் மணமக்கள். அமெரிக்காவில்
இந்த நம்பிக்கை ஜோடிகளின் திருமணம் நடந்தது
2005 ஜனவரி 11ல்.
நம் ஊர் கணக்குப் படி ஜனவரி 11ல், தை பிறக்கும்.
தை பிறந்தால் வழிபிறக்கும் என்று இவர்கள்
காத்திருக்கவில்லை. வலி பிறக்கிறதே என்று வாழ்வின்
அற்புதங்களைத் தள்ளிப் போடவுமில்லை.
திருமணம் நடந்து ஐந்தே நாட்களில் கேட்டி
மரணமடைந்தார்.
மகிழ்ச்சியாய் இருப்பதென்று தீர்மானித்தவர்களை
மரணம் என்ன செய்துவிடும்??
Leave a Reply