புதுவாசல்
ஏன் நூற்றுக்கு நூறு இயக்கம்?
நம்பிக்கை – இதுதான் வெற்றியின் ரகசியம். சாதிக்க விரும்பும் ஒவ்வொரு மனிதனுக்கும் நம்பிக்கைதான் சுவாசமாக இருக்கும்.
நம்பிக்கையை வளரும் பருவத்திலேயே குழந்தைகளுக்கு ஏற்படுத்த தொடங்கப்பட்டதுதான் நூற்றுக்கு நூறு இயக்கம்.
வாழ்வில் வெற்றி பெறத்தேவையான தகுதிகளோடுதான் எல்லோருமே பிறக்கிறார்கள். அனைத்துத் தகுதிகள் இருந்தும் எல்லோரும் வெற்றி பெறுவதில்லையே. ஏன்? தாழ்வு மனப்பான்மையும் தாழ்ந்த சுயமதிப்பும்தான் இதற்குக் காரணம்.
மதிப்பெண்ணை வைத்து மட்டுமே மாணவர்களின் திறமை அளக்கப்படுவதால் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள் தாழ்வு மனப்பான்மையோடும் தாழ்ந்த சுயமதிப்போடுமே வளர்கிறார்கள். இதன் தாக்கம் அவர்கள் வாழ்க்கை முழுவதும் எதிரொலிக்கிறது.
எனவே மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுவதன் மூலமாக கல்வியிலும் வெற்றியாளர்களாக விளங்கச் செய்து இதன் மூலம் வளரும் பருவத்திலேயே அவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவது அவசியமாகிறது.
வளரும் பருவத்தில் கல்வியில் நூற்றுக்கு நூறு பெற்றுவிட்டால் அதே உற்சாகத்தில் அதே நம்பிக்கையில் அனைத்திலும் நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றுவிடுவார்கள்.
மாணவர்கள் இன்று மதிப்பெண் பீதியால் டென்ஷனைத்தான் சுவாசிக்கிறார்கள். கற்பதை இனிய அனுபவமாக்க இப்படி ஒரு வழிகாட்டுதல் அவர்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது.
மாணவர்களை நன்றாக படிக்க வைக்க… நற்பழக்கங்களை ஏற்படுத்த… ஆசிரியர்கள் அடிப்பது நின்றுவிட்டது, ஆனாலும் பெற்றோர்கள் அடிப்பதும், அடிப்பதை விடவும் அதிகம் வலியை ஏற்படுத்துகிற திட்டுதல், புறக்கணித்தல் போன்ற பழக்கங்கள் இன்னும் வீடுகளிலிருந்து முற்றிலும் நீங்கியபாடில்லை.
இதெல்லாம் மாணவர்களை மனதனவில் அதிகம் பாதிக்கிறது என்றாலும் தன் குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றி பெறாமல் போய்விடுவார்களோ? என்ற பெற்றோர்களின் பயம்தான் இப்படி எல்லாம் நடந்து கொள்வதற்கு காரணமாகிறது. குழந்தைகள் நிச்சயம் கல்வியில் மேம்படுவார்கள் என்று தெரிந்தால் பெற்றோர்கள் இவ்வளவு பதட்டமும் குழப்பமும் அடையமாட்டார்கள். இந்த நம்பிக்கை ஏற்படுத்தவே நூற்றுக்கு நூறு இயக்கம்.
நூற்றுக்கு நூறு இயக்கத்தின் நோக்கம்:
எல்லோருமே வெற்றியாளர்தான் என்பதை மாணவர்களுக்கு உணர வைப்பது நூற்றுக்கு நூறு இயக்கத்தின் இலக்கு. மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்துவது, அதிக மதிப்பெண் பெறும் வழி வகைகளை கற்றுத்தருவது, மாணவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த பெற்றோர்களுக்கு பயிற்சியளித்து ஒவ்வொரு பெற்றோரையும் அவரவர் குழந்தைகளுக்கு சுய முன்னேற்ற பயிற்சியாளராக்குவது ஆகியவையே நூற்றுக்கு நூறு இயக்கத்தின் செயல்திட்டங்கள் ஆகும்.
நீங்கள் எப்படி உதவலாம்?
நமது நம்பிக்கையின் நூற்றுக்கு நூறு பக்கங்களில் படிப்பதோடு நின்றுவிடாமல் அதை கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே நீங்கள் உதவ முடியும்.
உங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள செடி அதிக உயரம் வளர்ந்திருந்தால் அதிக பலன் தந்திருந்தால் நீங்கள் தோட்டக்கலை பற்றி மீட்டிங் எல்லாம் போட வேண்டாம், தோட்டம் வைத்திருக்கும் எல்லோரும் தானாகவே உங்களிடம் வந்து அதன் ரகசியம் கேட்பார்கள். எனவே நீங்கள் நூற்றுக்கு நூறு இயக்கத்திற்கு செய்ய வேண்டியது உங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள உங்கள் குழந்தைகளை உயரமாக வளர்ப்பது தான். மற்றவர்கள் வந்து கேட்கும்போது நீங்கள் நூற்றுக்கு நூறு பக்கங்களை காட்டினால் போதும், இன்னொரு தோட்டத்தில் இன்னொரு செடி உயரமாக வளர ஆரம்பிக்கும்.
எனவே, இந்த இனிய முயற்சிக்கு நீங்களும் கை கொடுங்கள்.
ஜாலியாகப் படிக்கலாம், ஈஸியாக ஜெயிக்கலாம் என்பதை அனைவருக்கும் சாத்தியமாக்குவது ஒரே நாளில் முடிவதல்ல; ஆனால் ஒரு நாளில் நிச்சயம் முடியும்.
என்றென்றும் அன்புடன்
கிருஷ்ண. வரதராஜன்.
நூற்றுக்கு நூறு இயக்கம்
www.centummovement.in
kumaresan
hallo krishna sir, super coverstory for student and all parents.so u can contine please
thank u
madheena manzil
thodara wendum umadu sevai
SAKTHIVEL.C
THIS FACILITY MAY EXTEND TO THE SMALL TOWNS.A NICE WORK.
siva
hallo krishna sir,am join your team
pushbaraj
Hello my dear sir,your service programs always better. I am a socialservice man. MY native cuddalore. my posting Dist. PRESIDENT-For NATIONAL HUMAN RIGHTS COMMITTEE. I Like u. I join your succesfulteam. mo:9488810760. Thank u.