பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள்

– கனக லஷ்மி இந்த மாதம் திரு. லேனா தமிழ்வாணன் நான் சென்னை தியாகராயர் நகர் ராமகிருஷ்ண பள்ளியில் படித்தேன். அப்போதே என் தந்தையின் பெயரால் அறியப்பட்டிருந்தேன். ஏறத்தாழ 1500 மாணவர்கள். என் பள்ளியில் இருந்த படிக்கட்டுகளை கடந்து தான் என்னுடைய வகுப்புக்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு முறை மேலே ஏறுகிறபோதும் நான் பல வகுப்புகளை … Continued

கலாம் 80 கொண்டாட வாங்க

அட்டைப்படக் கட்டுரை 2003 ஜுலை மாதம் காலை 8.40 மணி. தன் அலுவலக மேசையருகே அலறிய தொலைபேசியை எடுத்தார் திரு.பி.எம்.நாயர். அழைத்தவர் அவருடைய மேலதிகாரி. ”மிஸ்டர் நாயர்! நேற்றிரவு என்னால் தூங்க முடியவில்லை. என் படுக்கையறை மழையில் ஒழுகியது.” இதைக் கேட்டவுடன் அதிர்ச்சியில் உறைந்தார் நாயர். அவர் மனநிலையைப் புரிந்து கொண்டவர் போல், ”கவலைப் படாதீர்கள்! … Continued

உஷார் உள்ளேப்பார்

– சோம வள்ளியப்பன் வெற்றிக்கான, மகிழ்ச்சிக்கான பல்வேறு விஷயங்கள் நமக்கு உள்ளேயே இருக்கின்றன. அங்கே சரி செய்து கொண்டுவிட்டால் போதும். எல்லாம் சரியாக இருக்கும். உள்மன ஒழுங்கு, சிந்தனை நேர்த்தி, பார்வை மாற்றம் என்று எவ்வளவோ செய்யமுடியும். செய்தவர்கள் வென்றிருக்கிறார்கள். மனதின் மாபெரும் சக்தி பற்றியும் அது செய்யும் பல மாயங்கள் பற்றியும் உஷார் உள்ளே … Continued

தோல்வி என்பதே இல்லை

வெற்றி வெளிச்சம் – இயகோகா சுப்ரமணியம் உயர்வும் சரிவும் காணாத் தொழில்கள் நமது பூமியில் எதுவுமில்லை; உணர்ந்து தெளிந்து முனைந்தவர் தோற்ற சரித்திரம் இங்கே என்றுமில்லை. ” அவர் தொட்டது துலங்கும். தொட்ட தெல்லாம் பொன்னாகும்” என்று பொதுவாக வெற்றி பெற்றவர்களைப் போற்றிப் பாராட்டிக் கொண்டாடுவது உலக வழக்கம். வெற்றி பெற்ற மனிதர்களோடு நாம் போற்றும் … Continued

இனிமேல் உங்களுக்கு இரட்டைச் சம்பளம்

– சாதனா நிறுவனம் நடத்துகிறவர்கள் இந்த தலைப்பை பார்த்தவுடனே நிச்சயம் எனக்கு சாபம் விடுவார்கள். ஏனென்றால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இப்போது யாருக்கும் இல்லை. எல்லோரும் பணம் சம்பாதிக்க வேண்டும் வெறியில் இருக்கிறார்கள். 60 வயதில் தன் அப்பா சம்பாதித்ததை 20 வயதில் சம்பாதித்துவிட வேண்டும் என்ற வேகம் எல்லோரிடமும் இருக்கிறது. 40 … Continued

அனுபவ படிப்பால் கிடைக்கும் வெற்றி

-இயகோகா சுப்ரமணி விடுமுறைக்குப் பின் கல்லூரிகள் திறந்து, கல்லூரியில் இடம் பெறுவதற்காக மாணவர்களும், பெற்றோர்களும் அலை மோதிக் கொண்டிருக்கும் தருணம் இது. எல்லாத் தாய் தந்தையருமே தனது பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும். நிறைய சம்பளம் வாங்க வேண்டும், வளமாக வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள்.

மாற்றங்களின் பலம் மகத்தானது

– வினயா சாதாரண மனிதர்களுக்கும் சாதனை மனிதர்களுக்குமான வேறுபாடுகளைப் பலரும் பலவிதமாகப் பட்டியலிடுவார்கள். அவற்றில் முக்கியமான ஒன்று உண்டு. நாளை செய்ய வேண்டியதை நேற்றே செய்து முடித்தவர்கள் சாதனையாளர்கள். நான்கு நாட்களுக்கு முன்னர் செய்திருக்க வேண்டியதை இன்னும் செய்யாதவர்கள் சாதாரண மனிதர்கள். ஒரு கட்டிடத்தை உருவாக்கியவர்கள் காலத்துக்கேற்ற மாற்றங்களை அவ்வப்போது செய்து வருவதன் மூலம், நிகழ்காலத்துக்கு … Continued

புள்ளிகளை இணையுங்கள் பெரும்புள்ளிகளாய் ஆவீர்கள்..

– வினயா இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் என்ற கவிஞர் எழுதிய வரிகள் இவை. ஒரு மனிதன் தன்னுடைய வட்டத்தைப் பெருக்கிக் கொண்டே போகிற போது, அவனுடைய சக்திவட்டமும் பெருகி விரிகிறது என்பதை இந்தக் கவிதை வரிகள் சொல்லாமல் சொல்கிறது. தன்னை பிரபஞ்சத்தில் ஒரு துளியாகப் பார்ப்பவர்கள் சாதாரண மனிதர்கள். தங்களை பிரபஞ்சத்தின் ஒளியாகப் பார்ப்பவர்களே சாதனை மனிதர்கள்.

வாழ நினைத்தால் வாழலாம்

– மனநல நிபுணர் டாக்டர் ருத்ரன் மனம் உள்ளம் மூளை என்கிற மூன்று பாகங்கள் இருக்கின்றன. மனம் என்று நீங்கள் சொன்னது உடலில் எங்கே இருக்கின்றது? அது அறிவாக இருக்கிறதா? அது மின்சாரம் போல இருக்கிறது. ஃபேன் ஓடுவதும் அதனால்தான். அது உங்கள் கண்களுக்குத் தெரியாது. மூளை என்பது இயந்திரம். அது செயல்பட இரத்தம் தேவை. … Continued

தலைவராக தயாராகுங்கள்..!

– அத்வைத் சதானந்த் உங்களுக்கு பிடித்த தலைவர் யார்? என்று யாரைக்கேட்டாலும், தெரிந்தோ தெரியாமலோ அரசியல் தலைவர்களைத்தான் சொல்கிறார்கள். தலைவர் என்ற வார்த்தையே அரசியல் ஆகி விட்டது இன்று. அரசியல்வாதிகளில் இனி உன்னத மானவர்களை காண்பது என்பது அரிதாகி வருவதால் தலைவர் என்ற சொல்லுக்கான மகத்துவமும் மாறி வருகிறது.