எந்த ஒரு விஷயத்திலும் திறமை உள்ளவர் தன் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்வார். ஆனால், மாணவர்கள் மட்டும் தேர்வு எனும் தன் கற்றல் திறமையை வெளிப்படுத்த கிடைக்கும் வாய்ப்பை பயத்தோடு பார்ப்பது ஏன்?
(20ம் தேதிக்குள் உங்களின் சிறந்த பதில்களை அனுப்புங்கள். வெளியாகும் பதில்களுக்கு புத்தகங்கள், சிடிக்கள் பரிசு)
சென்ற மாத இதழில் கேட்கப்பட்ட கேள்வி
வாங்கிய புத்தகங்களை பலர் முழுமையாக படிக்காமலே அலமாரியில் அடுக்கி விடுவது எதனால்? அடுத்து வாங்கும் புத்தகத்திற்கும் அதே கதி நேராமல் தவிர்ப்பது எப்படி?
பரிசு பெற்ற பதில்கள்
புதிய புத்தகம் வாங்கியதும் ஒரு கால அட்டவணை தயாரித்து அதனைப்பின்பற்றி படிக்க வேண்டும். புது புத்தகம் வாங்கும் முன் முதலில் வாங்கியதைப் படித்து முடிப்பேன் என்று தீர்மானம் செய்ய வேண்டும்.
மோகனசுந்தரி – புதுப்பேட்டை, கிருஷ்ணகிரி.
எப்போழுதும் நம் கையில் புத்தகத்தை வைத்திருந்தால் அன்றாட அலுவல்களில் இடைஇடையே உள்ள சிறு சிறு நேரங்களையும், ரயில் பயணம், அல்லது காத்திருப்பது போன்ற நேரங்களில் புத்தகத்தை முழுமையாக படித்து முடித்துவிடலாம்.
ப. அபிநயா திட்டக்குடி.
படிக்க வேண்டிய புத்தகத்தை தொலைக்காட்சி பெட்டியின் மீது வைத்துவிட்டால் அறிவு வளர்க்கும் பயனுள்ள நுôல்கள் காத்திருக்கும்போது அறிவை சிதைக்கும் தொலைக்காட்சி பார்ப்பது தேவையா என்பதை அது உணர்த்தும்.
கவிஞர்.இரா.ரவி மதுரை.
புத்தகத்தை படித்தபின் மற்றவர்களுடன் அதுபற்றி பேசுதல், புத்தக ஆசிரியருக்கு விமர்சன கடிதம் எழுதல் போன்ற பழக்கங்கள் படிப்பதை துôண்டும்.
திவ்யபாரதி, உடுமலைப்பேட்டை.
நுôலைப் படிக்கும்போதே, பென்சிலால் நம்மை ஈர்த்த வரிகளை அடிக்கோடிடுதல் அல்லது ஒரு குறிப்பேட்டில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும்போது கருத்துக்கள் நினைவில் நிற்பதோடு தொடர்ந்து விடாமல் படித்துவிடவேண்டும் என்ற ஒரு பிடிப்பு உண்டாகும்.
அ.ஜாகீர் உசைன், துணை பேராசிரியர். எம்.ஏ.எம் பொறியியல் கல்லுôரி, திருச்சி.
Leave a Reply