சந்தைப் படுத்துவோம் சாதனை குவிப்போம்!

-தி.க. சந்திரசேகரன் விளம்பரங்களினால் நல்ல பயன்கள் விளையும் என்பது உண்மை. ஆனாலும் சில நேரங்களில் தவறான விளைவுகளும் ஏற்படுவது உண்டு. விளம்பரம் கொடுத்தவர் கொள்ளிக் கட்டையை எடுத்து தலையில் சொறிந்து கொண்ட நிலையும் ஏற்படலாம். விளம்பர நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ளாமல் தரும் விளம்பரங்கள் நிச்சயம் தொல்லையில் முடியும்.