புதியதோர் உலகம் செய்வோம்

-இரா.கோபிநாத் விற்பனைத் துறையில் இருப்பவர்களுக்குச் சிம்ம சொப்பனமாக இருப்பது, வாடிக்கையாளர்கள் முன்வைக்கும் எதிர்ப்புகள்தான் . ஏதாவது சாக்குச் சொல்லி வாடிக்கையாளர், வாங்கும் முடிவைத் தள்ளிப் போட்டு விடுவாரோ என்ற பயம் எப்போதும் இவர்களை வாட்டுவது உண்டு. விற்பனை என்பது வாடிக்கையாளர் வாங்க முடிவு செய்தால்தான் நிறைவேறுமே அல்லாது விற்பனையாளர் விற்க முடிவெடுக்கும் போது அல்ல.