கிரகங்கள் மாறுகின்றன? நீங்கள்??

– ரிஷபாருடன் கிரகப் பெயர்ச்சி பலன்களை நீங்கள் நம்புகிறீர்களோ! இல்லையோ! ஜாதகத்தை நம்புகிறீர்களோ இல்லையோ! உங்களுக்கு சாதகமான விஷயம் ஒன்று இதிலிருக்கிறது. கவனித்தீர்களா? மாற்றம் என்பதுதான் செய்தியாகிறது!! நீங்கள் மாறுகிறீர்களா? உதவாத குணங்களை மாற்றிக் கொள்கிறீர்களா? உறுதியான தீர்மானங் களுக்கு மாறிக் கொள்கிறீர்களா? கடைகளில்கூட பழையவற்றுக்கு புதியதை மாற்றிக் கொள்கிறார்கள். நீங்கள், பழைய சிந்தனைகளில் இருந்து … Continued

என் குரல் எல்லோருக்கும் கேட்பதில்லை

– ரிஷபாருடன் மிஸ்டர் மனசாட்சியுடன் பரபரப்பு நேர்காணல் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற குழப்பத்திற்கு அடுத்தபடியான குபீர் குழப்பம், மனசாட்சி என்று ஒன்று உண்டா இல்லையா என்பதுதான். இருபத்தோராம் நூற்றாண்டின் அதிரடி தலைமுறைக்கு அறிமுகமாக வேண்டிய சுவாஸ்ரயமான மனிதர், மிஸ்டர் மனசாட்சி. பெரும்பாலும் தலைமறைவாய் இருப்பதையே விரும்புகின்ற இவர், வெற்றியாளர்களுக்கு வழிகாட்டி என்பது மட்டும் நிச்சயம். … Continued

அஞ்சல் அட்டை ஒன்றில் ஆரம்பித்த வாழ்க்கை

– ரிஷபாரூடன் ஏப்ரல் மாதம். பெங்களூர் ஐ.ஐ.எஸ்-சில் இருந்த அந்தப் பெண்ணின் கண்களில் பட்டன குல்மொஹர் பூக்கள். முதுநிலை பொறியியல் வகுப்பில் இருந்த அந்த ஒரே பெண் தன் சக மாணவர்களுக்கு சளைத்தவரில்லை. சொல்லப் போனால் அவர்களையெல்லாம் முந்திக் கொண்டும் இருந்தார்.

தொலைந்த குழந்தையை தேடுங்கள்

– ரிஷபாருடன் ஒவ்வொரு மனிதனின் உள்மனதிலும் உறங்கிக் கிடக்கிறதொரு குழந்தை. அது கட்டாய உறக்கமென்றும் சொல்லலாம். கையாலாகா உறக்கமென்றும் கொள்ளலாம். விளையாட்டுக் குணம் முடங்கியபிறகு, வியாபாரக் கண்ணோட்டம் தொடங்கியபிறகு, தூங்கப் போனது அந்தக் குழந்தை.

யார்? தலைவர்

– ரிஷாபாரூடன் இளமைக்காலத் தேடல்களில் ஒன்று, தலைமைக்கான தேடல், தன்னை வழிநடத்த இன்னொருவர் வேண்டுமென எண்ணும் பருவம் இது. நடிகர்கள் தொடங்கி, அரசியல்வாதிகள் வரை பலராலும் ஈர்க்கப்படும் காலமிது.

பின்பற்றுதல் மனித இயல்பு

– ரிஷபாருடன் ” ஒரு தலைவர், குறிப்பிட்ட செய்தியொன்றை மக்களுக்குச் சொல்பவர் அல்ல – அவரே செய்தி” என்றார் வாரன் பென்னிஸ். “என் வாழ்வே என்னுடைய செய்தி” என்றார் காந்தியடிகள்.