உழைக்கத் தெரிந்த உள்ளம்

– சீராளன் உலகின் மிகச்சிறந்த வெற்றியாளர்களின் உயர்வுக்குப் பின்னால் இடைவிடாத உழைப்பே காரணமாய் இருக்கிறது. இதை அடிமனதில் அடிக்கோடிட வேண்டும் என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். ஏன் தெரியுமா? அடுத்தவர்களின் உழைப்பை அண்ணாந்து பார்த்து “ஆஹா” என்று பாராட்டும் பலரும், அவரவர் உழைப்பு என்று வரும்போது அலட்சியம் காட்டுகிறார்கள்.