உங்களை விளம்பரம் செய்யுங்கள்..!

– கிருஷ்ண வரதராஜன் உங்களை விளம்பரம் செய்வதில் முதலில் ஆர்வம் கொண்டிருந்தவர்கள் உங்கள் பெற்றோர்கள்தான். உங்களை இந்த உலகம் முழுக்க கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அடங்காத ஆர்வத்தை கொண்டிருந்தார்கள். நீங்கள் குழந்தையாக இருந்த தருணத்தில் இருந்து பார்ப்பவர்களிடம் எல்லாம் உங்களைப் பற்றி பெருமையாக பேசுவார்கள். ‘என்ன அழகா பாடுவான் தெரியுமா’ என்று பெருமை பொங்கப் … Continued

வாஸ்கோடாகாமாவிற்கு வழிகாட்டியது யார்?

– சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன் அச்சத்தோடுதான் எழுந்தேன். என்றாலும் எனக்குள் ஒரு எரிமலை வெடித்துச் சிதறியது. பேராசிரியர் இல.செ.கந்தசாமி அவர்களைப் பார்த்து, ”உங்களைப் போன்றவர்கள் வழிகாட்டுவார்கள் என்றுதான் நாங்கள் காத்துக் கிடக்கிறோம். திசை தெரியாத பறவைகளாகச் சுற்றித்திரிகிறோம். வழிகாட்டுதலுக்காக காத்துக் கிடந்து காத்துக்கிடந்து எங்களைக் கரையான் அரிக்கத் தொடங்கிவிட்டது. இனிமேல் யாருடைய வழிகாட்டுதலுக்காகவும் காத்துக்கிடக்கப் … Continued

பண்பாடு என்னும் அடையாளம்

-இயகோகா சுப்பிரமணியம் தேடி வருபவர் யாராய் இருப்பினும், நின்று வணங்கி இருக்கை கொடு; செல்லும்பொழுது வாயில்வரையிலும், சென்று சிரிப்புடன் விடைகொடு; புது டெல்லி. ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். எங்களது மிகப்பெரிய வாடிக்கையாளர்களில் அவரும் ஒருவர். அலுவலகத்தில் அவரைச் சந்திப்பதற்காக நேரம் கொடுத்திருந்தார். ஏதோ சில தவிர்க்க முடியாத காரணங்களால், நேராக எங்களை அவரது … Continued

அவரவர் கடமை

– வழக்கறிஞர் த. இராமலிங்கம் வேடிக்கையான ஜென் கதை ஒன்று உண்டு. மிகப் பெரும் பணத்துடனும் அதிகாரத்துடனும் இருந்த ஒருவருக்கு, அனைத்திலும் பற்று குறைந்து கொண்டே வந்தது. மனம் தத்துவ சிந்தனைகளில் ஈடுபட்டது. தனது சிந்தனைகளை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்பியவர், ”எங்கே போய் படிப்பது… யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது…?” என்றெல்லாம் பலரிடமும் விசாரித்தார்.

மார்க்கெட்டிங் மந்திரங்கள்..!

கர்வோர் மத்தியில் சில நம்பிக்கைகளும் உண்டு. சில மூட நம்பிக்கைகளும் உண்டு. ஆனால், அந்த மூடநம்பிக்கைகள் அறியாமையிலிருந்து பிறந்தவை அல்ல. அசாத்தியமான நம்பிக்கையில் பிறந்தவை. உதாரணமாக, ஒரே நேரத்தில் பலரையும் சோதனை போடுகிற பணியில் இருக்கும் காவலர்கள்கூட, ஒவ்வொருவரையும் பிரித்து மேய்ந்து அனுப்புவதில்லை. சிலரைப் பார்த்த மாத்திரத்தில் லேசாகப் பரிசோதித்து அனுப்பி விடுவார்கள்.

ஞாபக வேர்களுக்கு நீரூற்றுங்கள்

– ருக்மணி பன்னீர்செல்வம் பாஸ்டன் நகரத்தில் இருக்கும் அந்தப் பெண்கள் பள்ளிக்கு அன்றைய தினம் மிகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருந்தார். மாணவிகளும், ஆசிரியர்களும், ஏன் பள்ளியின் முதல்வரும்கூட அவருடைய உரையை கேட்பதற்காக மிக ஆவலாக அவரின் வருகையை எதிர் பார்த்திருந்தனர்.

LIC திரு P. ஸ்ரீனிவாசன் நேர்காணல்

திரு.ட.ஸ்ரீநிவாசன் எல்.ஐ.சி. முகவராக தனது பணியைத் தொடங்கி, இன்று பல்லாயிரக் கணக்கான எல்.ஐ.சி. முகவர்களுக்கும், வளர்ச்சி அதிகாரிகளுக்கும் வழிகாட்டியாக விளங்குபவர். எல்.ஐ.சி. முகவர்கள் தங்கள் தனித்திறனை மேம்படுத்திக் கொள்ளவும், தொழிலில் மிகப்பெரிய வெற்றிகளைக் குவிக்கவும் கமஎஐ என்கிற அமைப்பைத் தொடங்கி வழிநடத்தி வருபவர். மிகச்சிறந்த பேச்சாளர், ஆளுமைமிக்க தலைவர், பல்லாயிரக்கணக்கான முகவர்களின் முன்னோடி. அவருடன் ஒரு … Continued

வெற்றி வாசல்

எது சாதனை? நமது நம்பிக்கை மாத இதழின் மெகா பயிலரங்கமான வெற்றிவாசல் விழாவில் ”சாதனை சுடர்” விருது பெற்ற லூகி அமைப்பின் தலைவர் திரு.ட. ஸ்ரீநிவாசன் நிகழ்த்திய ஏற்புரை. இன்று காலை எனக்குள் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. விருதுகள் தேவையா? விருதுக்கான ஏற்புரைகள் தேவையா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.

எது உங்கள் சீட் பெல்ட்

– கனகலட்சுமி காற்றும் வெளிச்சமும்கூட புக முடியாத கடினமாக காட்டுப்பகுதியை வெகு சுலபமாக கடந்து சென்று, மிக அழகாக விளக்கி கொண்டிருந்தார் ஒரு சுற்றுலா வழிகாட்டி. இதை பார்த்து வியந்து போன ஒரு சுற்றுலாவாசி அந்த வழிகாட்டியிடம் வெறும் ஆபத்துகள் மட்டுமே நிறைந்துள்ள இந்த காட்டுப்பகுதியை முழுமையாக அறிந்து வைத்திருக்கிறீர்களே, இது எப்படி உங்களால் சாத்தியமானது … Continued

மனங்களில் முதலீடு

மனித நேய அறக்கட்டளை நிறுவி மகத்துவப் பணிகள் புரியும் திரு.சைதை துரைசாமி அடையாளம் தெரியாத ஒரு கிராமத்தில் தோன்றி ஏழ்மையான பொருளாதாரக் குடும்பச் சூழலில் பிறந்தேன். எந்தப் பின்புலமும் இல்லாமல் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணத்தையே வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டேன். அந்த இலட்சியம் எனக்கு என் பள்ளி பருவத்திலேயே தோன்றிய ஒன்று. சென்னைக்கு 1971ஆம் ஆண்டு … Continued