மீட்பராகுங்கள்
– கிருஷ்ண வரதராஜன் எங்கே தொலைத்தீர்கள் உங்கள் தெய்வீக அழகை கவுன்சிலிங் கலையை கற்றுத்தரும் தொடர் குழந்தைகளின் முகத்தில் இருக்கிற அழகை, அதாவது கண்களில் இருக்கிற ஒளியை, அவர்களின் புன்னகையில் இருக்கிற உண்மையை, அப்படியே காப்பாற்றுவது எப்படி? வளர வளர அந்த கண்களில் இருந்த ஒளி எப்படி காணாமல் போகிறது? அந்த தெய்வீக பேரழகை அப்படியே … Continued
பொறுப்பா? பதவியா?
டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் இந்தியத் தொழில் வர்த்தக சபை கோவைக் கிளையின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். திரு. ம. கிருஷ்ணன் தலைமையிலான புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மத்தியில், கோவை பாரதீய வித்யாபவன் தலைவர் டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் ஆற்றிய நெறியுரையின் ஒரு பகுதி. தொழிலில் வெற்றி பெற்றவர்கள் எல்லோருமே சமூகத்தில் ஒரு … Continued
நிர்வாகி
– கிருஷ்ணன் நம்பி கதை வடிவில் விறுவிறுப்பான பிஸினஸ் பாடங்கள் மனித வளத்தை மேம்படுத்துவது எப்படி? காலையில் எழுந்திருக்கும்போதே, கமலம் கண்டிஷன் போட்டுவிட்டாள். “’இன்னிக்கு உங்க பொண்ணோட ஸ்கூல்ல வரச்சொல்லியிருக்காங்க. வந்திட்டு, அப்புறம் எங்க வேணும்னாலும் போங்க. சொல்லிட்டேன்.”” “”இப்ப மட்டும் ஏன் உங்க பொண்ணுன்னு சொல்ற.
மாத்தி யோசி
– அனுராஜன் ஏன் எல்லா குரங்குகளும் மனிதன் ஆகவில்லை குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்கிறது பரிணாம வளர்ச்சி தத்துவம். அப்படியெனில் ஏன் எல்லா குரங்குகளும் மனிதனாக பரிணமிக்கவில்லை? ஏன் பல குரங்குகள் குரங்குகளாகவே தேங்கிவிட்டன ? எல்லா மனிதர்களும் வெற்றிபெறத்தான் பிறந்திருக்கிறார்கள் என்றால், ஏன் எல்லோரும் வெற்றி பெறுவதில்லை என்பதை யோசித்த போதுதான் மேற்கண்ட கேள்வி … Continued
பிடித்துப் போனதில் பிடிவாதமாக இருங்கள்!
– மகேஸ்வரி சத்குரு பிடிவாதம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றுதான். என்ன, பிடித்தமான ஒன்றின் மீது பிடிவாதமாய் இருக்கவேண்டும். அவ்வளவேதான்! மாரத்தான் மிராக்கல் என்று ஒரு குறும்படம். அதில் மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடக்கிறது. 1, 157 என்ற எண்களுடன் இருவர் ஓடிக்கொண்டிருக்கின்றனர். 157 ஆம் எண் சிறுவன். 1ஆம் எண் இளைஞன். ஏற்கனவே பல போட்டிகளில் … Continued
வல்லமை தாராயோ
இந்த உலகில் ஏன் பிறந்தோம்? தி.க. சந்திரசேகரன் கொஞ்சம் ஆழமாக அமர்ந்து சிந்தித்தால் நாம் ஏன் இந்த உலகிற்கு வந்தோம் என்கிற கேள்விக்கு விடை கிடைக்கும். அந்த விடை கிடைக்காத வரையில் மேலே இருக்கிற நான் என்று சிந்திக்கும் போதுதான் எல்லா சிக்கலும் வருகின்றன. மேலோட்டமான நான் வருத்தத்திற்கு காரணமாக அமைகிறது.
அறிய வேண்டிய ஆளுமைகள்
மகிழ்ச்சி என்பது, எதிர்காலத்திற்காக நீங்கள் வைத்திருக்கும் திட்டமல்ல. நிகழ்காலத்திற்கான உங்களின் வடிவமைப்பு என்ற ஜிம்ரானின் வாசகம் ஒரு முழு புத்தகம் பேச வேண்டிய சிந்தனையைப் பேசிவிடுகிறது.
அஞ்சல் அட்டை ஒன்றில் ஆரம்பித்த வாழ்க்கை
– ரிஷபாரூடன் ஏப்ரல் மாதம். பெங்களூர் ஐ.ஐ.எஸ்-சில் இருந்த அந்தப் பெண்ணின் கண்களில் பட்டன குல்மொஹர் பூக்கள். முதுநிலை பொறியியல் வகுப்பில் இருந்த அந்த ஒரே பெண் தன் சக மாணவர்களுக்கு சளைத்தவரில்லை. சொல்லப் போனால் அவர்களையெல்லாம் முந்திக் கொண்டும் இருந்தார்.
விதைகளே இங்கு வேண்டப்படும்
– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த.இராமலிங்கம் அதிகாலையில் எழுவது, பழக்கப்படுவது வரை சிரமமானது. எழுந்து பழகிவிட்டால், அந்த பழக்கத்திற்கு நாம் அடிமையாகிவிடுவோம். வைகறைப் பொழுதுக்கு இணையான அழகும் இனிமையும், ஒரு நாளின் எந்தப் பொழுதுக்கும் கிடையாது. விடியற்காலையில் தொடர்ந்து நடைப் பயிற்சி மேற்கொள்பவர்களைக் கேட்டுப் பாருங்கள்… அந்தப் பொழுது எவ்வளவு சுகமானது என்று கூறுவார்கள்.
மார்க்கெட்டிங் மந்திரங்கள்
– சினேக லதா கேள்விக்கு என்ன பதில் இன்றைய மார்க்கெட்டிங் துறையை சவால் மிக்கதும் சுவாரஸ்யம் மிக்கதுமாக ஆக்கியிருப்பது எது தெரியுமா? வாடிக்கையாளர்கள் பார்வையாளர்களாக இருந்த நிலை மாறி, வாடிக்கையாளர்கள் கண்காணிப்பாளர்களாக மாறியிருப்பதுதான். நுகர்வோர் விழிப்புணர்வு என்பது வாடிக்கையாளர்களை எதையும் எளிதில் நம்பாத நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது.