சுய வளர்ச்சியும் விஞ்ஞான வழிமுறைகளும்

– அ. சூசைராஜ் வருடங்களாக சுய முன்னேற்ற முயற்சிகள் செய்து வந்துள்ள எனக்கு, ஏன் விஞ்ஞான முறையில் சுயவளர்ச்சியை, மாற்றங்களை, தாக்கங்களை ஆராயக் கூடாது என்ற கேள்வி என்னுள் எழுந்தது. எனவே புதிய முயற்சியை மேற்கொண்டு, அவற்றில் நான் கண்டு கொண்ட சில அனுபவங்களை, நேரிடையான சத்தியத்தை பகிர்ந்துகொள்ள முன் வந்துள்ளேன்.

காலம் உங்கள் கையில்.

– சோம. வள்ளியப்பன் எல்லா வேலைகளும் ஒன்றல்ல. சிலவற்றை நேரம் சிலவழித்துப் புரிந்துகொள்ளவே தேவையில்லை. அவற்றில் போகும் நேரமெல்லாம் வீண். அதேசமயம், வேறு சில வேலைகள், புரிந்து கொள்ள வேண்டிய வேலைகள். காரணம், அதே வேலைகளை நாம் பின்னால் பலமுறை செய்யவேண்டிவரும்.

தலைமைப்பண்பு சிறந்திட….

1. சிக்கலை சரி செய்யுங்கள். பழிபோடுவதில் நேரம் செலவிடாதீர்கள். 2. என்ன வேண்டுமென்று சொல்லுங்கள். எப்படிச் செய்வதென்று அவர்கள் பொறுப்பில் விட்டுவிடுங்கள்!

செங்கோல்: திட்டம்

– இரா. கோபிநாத் சற்று நேரம் இணைந்திருந்த நிர்வாகவியல் Tracl-லிருந்து விலகித் தனி வாழ்க்கை Track-க்கு மாறிக்கொண்டு சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் நிர்வாகவியல் Track-க்கு வந்து இணைந்து கொள்வோம் வாங்க!

சிகரம் : உறுதி மட்டுமே வேண்டும்

07.09.08 ஞாயிறு அன்று கோவை குஜராத் சமாஜத்தில் உள்ள அ.த.பட்டேல் ஹாலில் “சிகரம்” பயிலரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் திரு. சோம. வள்ளிப்பன் கலந்து கொண்டார். “உறுதி மட்டுமே வேண்டும்” என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையிலிருந்து…….

திரைகடலோடு திரவியம் தேடு

– இயகோகா சுப்பிரமணியம் கடந்த ஜுலை மாத இறுதியில் ‘ஷாங்காய் நகரில் நடைபெற்ற பன்னாட்டுப் பஞ்சாலைத் தொழில் வர்த்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்ட நவீன “புடாங்” நகரத்தில், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பொருட்காட்சி மைதானமும், அரங்கங்களும் உலகத் தரத்தில் அமைந்திருந்தன.

வட்டத்துக்குள் சுழல்கிறீர்களா? வளர்க்கிறீர்களா..?

– ராதாகிருஷ்ணன் நம்மை நாமே அடிக்கடி கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகளில் இதுவும் ஒன்று. ஒரே தொழிலில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே வரும்போது வாழ்க்கை பரபரப்பாகத்தான் இருக்கும். ஒரு தொழிலில் தொடர்ந்து செயல்படுவது என்பதற்கும், ஒரே விதமாக செயல்படுவது என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. உதாரணமாக ஒரு ஜவுளிக்கடையை எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னடைவுகளை பிளந்து முன்னேறு

– மரபின் மைந்தன் ம. முத்தையா வாழ்வில் சில சம்பவங்கள் நமக்கு சவால்விடும் விதமாய் அமையும். அத்தகைய சவால்கள் வரும்போதெல்லாம் தொடை தட்டி எழுபவர்கள் சோதனைகளைக் கடந்து சாதிக்கிறார்கள். தொடை நடுங்கி நிற்பவர்கள் தோற்கிறார்கள். இது ஒற்றை வரி உபதேசமல்ல. உண்மையின் சாரம். நிகரற்ற சாதனையாளர்கள் வாழ்வில் நிரூபிக்கப்பட்ட சத்தியம்.

நமது பார்வை

தமிழகத்தில் உள்ள மின்வெட்டு பரவலாக ஏற்படுத்தியுள்ள அதிருப்தியும் அது தொடர்பாக எழும் விவாதங்களும் வளர்ந்து கொண்டே போகின்றன. இந்தியாவின் பல பகுதிகளில் இதே நிலைதான் என்று அரசு சொல்கிறது. தேசம் முழுவதும் மின்சாரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் சமச்சீரான விநியோகம் நிகழுமெனில் அதுவே நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.