யாரோ போட்ட பாதை…

– தி.க. சந்திரசேகரன் நாம் செல்ல வேண்டிய பள்ளிக்கூடம் நீங்கள் ஒரு நிறுவனத்திலோ அல்லது தொழிலிலோ அல்லது குடும்பத்திலோ இணைகிறீர்கள். ஆனால் அந்த சூழ்நிலை உங்களுக்குப் பிடிக்கவில்லை. என்ன செய்யலாம்?

வல்லமை தாராயோ : இனியொரு விதிசெய்வோம்

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், நமது நம்பிக்கை மாத இதழ் இணைந்து வழங்கும், வல்லமை தாராயோ தொடர் நிகழ்வு 20.07.2008 அன்று திருச்சியில் நடைபெற்றது. மனவியல் நிபுணர், மலேசிய சுயமுன்னேற்றப் பயிற்சியாளர் திரு. ராம். ரகுநாதன் ஆற்றிய எழுச்சியுரையிலிருந்து …

சர்வம் மார்க்கெட்டிங் மயம்!

– பேரா . சதாசிவம் பலவகையான நிறுவனங்கள் பல வகையான பொருட்களை சந்தையில் கொண்டு சேர்த்துள்ளது. பொருட்களை சந்தையிடும் போது நுகர்வோர் தாம் எதிர்பார்ப்பது என்ன என்பதையும் தனக்கு கிடைப்பது என்ன என்பதையும் தெளிவாக உணரமுடியும். ஆனால் பொருள்சார்ந்த அல்லது சாராத சேவை என்று வரும்போது நுகர்வோர்களை உணர வைப்பது மிகவும் கடினம்.

இனிமேல் இல்லை மனச்சோர்வு

– மரபின் மைந்தன் ம. முத்தையா அச்சத்தில் இருப்பவர்களில் தொடங்கி உலை கொதிக்கும் நேரத்தில் அரிசிக்கு வழி தேடுபவர்கள்வரை பலதரப்பினருக்கும் ஏதோ ஒரு மனச்சோர்வு ஏற்படத்தான் செய்கிறது. தனிமை – தோல்வி பற்றிய அச்சம் – தோற்ற வலியின் மிச்சம் – இழப்புகள் – ஏமாற்றம்… என்று எத்தனையோ புறக்காரணங்களைப் பட்டியலிடலாம்.

திசைக்கதவுகள்

இரவில் பாய்விரிப்பதற்குப் பதிலியாக ஊக்கத்தை விரித்து உறங்க வேண்டும்! முளைவிட்ட உழைப்பை அரைத்து அதிகாலையில் குவளை நிரப்பிக் குடி! பத்துவிரல் ரேகைகளில் மின்சாரம் பாயும்!

வல்லமை தாராயோ : வருவது தானே வரும்; வருவதுதானே வரும்!

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம், “நமது நம்பிக்கை” மாத இதழுடன் இணைந்து 17.08.2008 அன்று திருச்சியில் நடத்திய வல்லமை தாராயோ நிகழ்ச்சி வாசகர் வெள்ளமும் மழை வெள்ளமும் சங்கமித்த அபூர்வ சம்பவமாய் அமைந்தது. “நமது நம்பிக்கை” மாத இதழ் ஆசிரியர் திரு. மரபின் மைந்தன் முத்தையா, திரைப்படக் கலைஞர் திரு. டெல்லி கணேஷ் ஆகியோர் உரை … Continued

புதியதோர் உலகம் செய்வோம்

– தே. சௌந்தர்ராஜன் ஒரு மனிதனுக்கு நீண்ட நாட்களாக ஓர் ஆசை. சொர்க்கம் எப்படி இருக்கும், நரகம் எப்படி இருக்கும்? என்பதைத் தன் உயிர் உள்ளபோதே தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே அந்த ஆசை. இந்த பூத உடல் மண்ணில் மாயும் முன், இந்த கட்டை வேகுமுன், நான் இதைத் தெரிந்தே தீருவேன் என மிகுந்த ஆவலோடு … Continued

செங்கோல்: நேரம் நல்ல நேரம்

– இரா. கோபிநாத் பதவி உயரும்போது, வருமானமும் வளரும், வசதிகளும் வளரும், கூடவே பொறுப்புக்களும் வளரும். நமது குழுவின் அளவும் வளரும். முன்னைவிட அதிக மக்களோடு தொடர்பு ஏற்படும். இவை எல்லாம் வளர்ந்து வரும்போது, முக்கியமான உபகரணமான, நேரம் மட்டும் வளர்வதில்லை. முன்னமும் 24 மணிநேரம்தான், இப்போதும் அவ்வளவேதான். அதனால் மிகுந்த அழுத்தம் ஏற்படுகிறது. குறைந்த … Continued

இந்த உலகம் நல்லவர்களால் நிரம்பியிருக்கிறது.

சிறுவனாயிருந்த போதே லாரி விபத்தொன்றில் தன் இரண்டு கால்களையும் இழந்த நாக நரேஷ் என்ற இளைஞர், சென்னை ஐ.ஐ.டி.யில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்த கையோடு பெங்களூரிலுள்ள கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். வாழ்க்கை மீதும் மனிதர்கள் மீதும் இவருக்கிருக்கும் நல்லெண்ணமும், ஆரோக்கியமான அணுகு முறையுமே, தொடர் வெற்றிகள் பலவற்றை அவருக்குப் பரிசாகத் தந்து வருகிறது. … Continued

திரைகடலோடு திரவியம் தேடு

– இயகோகா சுப்பிரமணியன் இரண்டு மாதங்களுக்கு முன்னால், சைனாவைச் சேர்ந்த ஒருவர் என்னைக் காண்பதற்காக அலுவலகம் வந்திருந்தார். பஞ்சாலை மற்றும் பல தொழில்களுக்கான இயந்திரங்களைத் தயாரிக்கும் “சைனா” நிறுவனத்தின் தென்னிந்தியப் பிரதிநிதியாகக் கோவையிலேயே தங்கிப் பணிபுரிந்து வருகின்றார்.