நமக்குளளே
நமது நம்பிக்கை துவங்கிய நாளிலிருந்து தொடர்ந்து படித்து வரும் வாசகர்களில் நானும் ஒருவன். நவம்பர் 2008ல் தலையங்கம் முதல் 16 தலைப்புகளும் வாசகர்களை இன்னும் சிறப்பாக வாழச் சொல்லும் விதத்தில் அமைந்துள்ளன. ‘நமது நம்பிக்கை’ மேலும் சிறப்படைய எனது வாழ்த்துக்கள். திரு.ஆர்.பாண்டியன், கரூர்.
எதிரியை வெல்வது எப்படி?
– தே. சௌந்தரராஜன் புல் சாதாரணமானதுதான். அற்பமானதுதான். ஆனால், எத்தனை அற்புதமானது , தெரியுமா? இந்த புல் யாரையும் காயப்படத்துவதுமில்லை. தான் யாராலும் காயப்படுவதுமில்லை. அகந்தை (Ego) இல்லாத வளைந்து கொடுக்கும் அதன் தன்மையால் அது அழிந்துவிடாமல் நிலைத்து நிற்கிறது.” – முனைவர் பர்வின் சுல்தானா
செங்கோல்
இரா.கோபிநாத் Gopinath@go-past.com மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி சென்ற இதழில் பொறுப்புகளைப் பகிர்ந்தளிப்பதற்குச் சில தலைவர்கள் அஞ்சுவது ஏன் என்று அலசினோம். அந்தப் பயத்தின் ஒரு காரணமென்னவென்றால் ஒருவேளை அவர்கள் இந்தப் பொறுப்பை மிகவும் சிறப்பாகச் செய்துகாட்டிப் பெயர் தட்டிக்கொண்டு போய்விட்டால், நமது நிலைக்கே ஆபத்து வந்துவிடுமோ என்பது.
நமது பார்வை
தன்னை வெட்டுபவர்களைக் கூடத் தாங்குகிறது நிலம் என்பதனால் “அகழ்வாரைத் தாங்கும் நிலம்” என்றார் திருவள்ளுவர்.
கான்ஃபிடன்ஸ் கார்னர்-6
தன் பலவீனங்களை விட்டுவிட முடியவில்லை என்றபுகாருடன் ஒரு துறவியைத் தேடிப்போனார் ஓர் இளைஞர். “சிறிது தூரம் உலாவிவிட்டு வருவோம்” என்று துறவி அழைத்தார். வழியில் தென்பட்ட மரமொன்றைஇறுகக் கட்டிக்கொண்ட துறவி, “இந்த மரம் என்னை விடமாட்டேன் என்கிறது” என்றலறி ஆர்ப்பாட்டம் செய்தார்.
கான்ஃபிடன்ஸ் கார்னர்-5
பொது விடுதி ஒன்றில் புகழ்பெற்றபியானோ கலைஞர் ஒருவர் தொடர்ந்து வாசிப்பது வழக்கம். அவர் இசைப்பதைக் கேட்பதற்காகவே ரசிகர்கள் கூடுவார்கள். விடுதிக்கு தொடர்ந்து வரும் செல்வந்தர் ஒருவர் நிறைய நன்கொடை தருபவர்.
கான்ஃபிடன்ஸ் கார்னர்-4
அலெக்ஸொந்தர் கிரஹாம்பெல் குறித்து இன்னொரு செய்தி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். தந்திகள் வழியே செய்திகள் அனுப்புவது எப்படி என்பது அவர் அடிமனதில் இருந்த கேள்வி. அவர் சிறந்த பியானோ கலைஞர்.
கான்ஃபிடன்ஸ் கார்னர்-3
நல்ல நோக்கம் ஒன்று நிலையான சாதனைக்கு அடித்தளமாய் அமைகிறது. காது கேளாதவர்களுக்குத் துணைசெய்யும் நோக்கில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவர் அதன் நீட்சியாகத் தொலைபேசியைக் கண்டு பிடித்தார்.
கான்ஃபிடன்ஸ் கார்னர்-2
ஏதாவது சொன்னால், “என்ன பெரிய புடலங்காய்” என்பது வழக்கம். இதற்கொரு காரணமுண்டு. சிலருக்கு, சின்ன வயதில் புடலங்காய் பிடிக்காது. வளர்ந்த பிறகும் அதே வெறுப்பு நீடிக்கும். நெருக்கமான யாராவது “சாப்பிட்டுப் பாருங்களேன்” என்று வற்புறுத்தியதும் சுவைத்துப் பார்த்தால் பிடித்துப் போகும்.
கான்ஃபிடன்ஸ் கார்னர்-1
தன் கணவனை திடீர் மாரடைப்பில் பலிகொடுத்த அந்த ஆசிரியை, வாழ்வின் நுட்பத்தை அந்த இழப்பில் உணர்ந்தார். ஒரு வாரத்திற்குப் பிறகு வகுப்பில் மாணவர்களிடம் சொன்னார், “வாழ்க்கை என்பதே நேசிப்பதற்கும், உணர்வதற்கும், பகிர்வதற்கும் தரப்பட்டுள்ள வாய்ப்பு. இது எத்தனை காலம் நீடிக்குமோ தெரியாது. ஒவ்வொரு நாளும் வாழ்வின் சில அழகான அம்சங்களை உணருங்கள்.