மனஅழுத்தம் நீங்க 30 வழிகள்

-மரபின்மைந்தன் ம. முத்தையா வாழ்வின் போக்கு பிடிபடும் வரையில் அழுத்தங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பலரும் ஆடிப்போய் விடுகிறார்கள். செய்த செயல் ஒன்றிற்கு எதிர்பார்த்த விளைவு ஏற்படாத போதும், எதிர்பாராத எதிர் விளைவுகள் ஏற்படும்போதும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

விரிவாக்கம் செய்ய இதுவே நேரம்

-பிரதாபன் உங்கள் தொழிலின் விரிவாக்கத்திற்கான நேரம் எது என்ற கேள்வி எப்போதெல்லாம் எழுகிறதோ, அப்போதெல்லாம் விரிவாக்கத்திற்கான நேரம் வந்து விட்டதாகவே அர்த்தம். தொழில் விரிவாக்கம் என்பது எப்போதுமே உங்கள் உற்பத்தியைப் பெருக்குவதாக மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை.

திரை கடலோடு திரவியம் தேடு

-இயகோகா சுப்பிரமணியம் ஒளிமயமான எதிர்காலம் இதோ! இதோ!” எனக் கனவுகண்டு, “வருங்கால வல்லரசுகளில் இந்தியா முதல்வரிசையில் நிற்கும்” என்ற நம்பிக்கையோடு, இந்தியா மட்டுமன்றி, திரைகடல் கடந்த நாடுகளிலும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி மிக வேகமாகப் பயணித்துக்கொண்டிருந்த இந்தத் துணைக்கண்டத்தின் முன்னேற்றம், “திடீரென்று” ஆட்டம் காண ஆரம்பித்திருக்கின்றது. உலகப் பொருளாதாரமே நிலையில்லாமல் தள்ளாடும்போது, இது தற்காலிகமானதுதான் என்று … Continued

விடாமுயற்சி -நமது துருப்புச் சீட்டு

– சாமிநாதன் எந்த ஒரு வேலையையும் தொடர்ந்து முயல்பவர்களின் விடாமுயற்சி, வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்றார் ஒருவர். இதைக் கேட்டதும் சிலருக்கு வியப்பு ஏற்படலாம். முயற்சிகள் தொடரும்போது அதனால் சலிப்பு ஏற்படுவதுதானே நிஜம் என்பது சிலரின் கேள்வியாக இருக்கலாம். ஆனால் சாதிக்கும் வெறி கொண்டவர்களின் கதையே வேறு.

அதிர்ஷ்டத்தின் திறவுகோல்கள் பன்னிரண்டு

– தே. சௌந்தர்ராஜன் TWELVE KEYS FOR LUCK “எதுவுமே சுலபமாவதற்கு முன் கடினமாக இருக்கிறது” – ஷிவ்கரோ அதிர்ஷ்டம்! நம் இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா? அது இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா?

சாதனைச் சதுரங்கம்

– திரு. ம. திருவள்ளுவர் இது ஒரு சாதனைத் தொடர்.. முதல் சதுரம் நம்மை நமக்குக் காட்ட உதவும் உன்னதம் நமக்கு என்னென்னவோ தெரியும்… பொது அறிவிலிருந்து, புது அறிவு வரை எல்லாம் தெரிகிறது.. எத்தனையோ இயல்கள் எத்தனையோ இசங்கள் எத்தனையோ புத்திகள் எத்தனையோ தத்துவங்கள் எத்தனையோ மொழிகள் – எல்லாம் அத்துப்படி..

கான்பிடன்ஸ் கார்னர் – 6

சின்ன விஷயங்களுக்குக்கூடப் பெரிதாய் அலட்டிக் கொள்ளும் பிரச்சினையிலிருந்து மீள மனவியல் நிபுணரை சந்திக்கச் சென்றார் ஒரு மனிதர். சிறிது நேரம் கண்களை மூடச் செய்துவிட்டு பெரிய கண்ணாடித் தடுப்புக்கு மறுபுறம் இருந்த பழத்தைக் காண்பித்து “இது என்ன பழம்” என்றார்.

கான்பிடன்ஸ் கார்னர் – 5

ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்று ஓர் இளைஞர் நண்பர்களிடம் கேட்டார். சிலர் சினிமாவுக்குப் போகச் சொன்னார்கள். சிலர் நண்பர்களுடன் செலவிடச் சொன்னார்கள். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு யோசனை வந்தது. பிறகு, நேர நிர்வாகவியல் நிபுணரை அழைத்து ஆலோசனை கேட்டார் இளைஞர்.

கான்பிடன்ஸ் கார்னர் – 4

பள்ளி சென்ற சிறுமி திரும்புமுன் வானத்தை மேகங்கள் சூழ்ந்தன. மழை வந்தால் மகள் பயப்படுவாளே என்றெண்ணிய அன்னை, குடையுடன் ஓடும் முன்னே மழை கொட்டத் துவங்கிவிட்டது. பாதி தூரம் சென்றதும் பள்ளிக்கூடப்பையோடு மகள் வருவது தெரிந்தது.

கான்பிடன்ஸ் கார்னர் – 3

அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டுவாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியர். ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது. மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.