நமது பார்வை

புகைப்பிடித்தலுக்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கும் மத்திய அரசு, அடுத்துடுத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புகைப்பிடித்தலின் மூலம் ஏற்படும் நோய்களின் கொடுமையை விளக்கும் புகைப்படங்களை சிகரெட் பெட்டிகளில் அச்சிடுவது பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆலோசித்து வரவதாகத் தெரிகிறது. இது பாராட்ட வேண்டிய முயற்சி.

வெற்றிப் பாதை : வெற்றிக்கு ஒரு திட்டம்

நமது நம்பிக்கை மாத இதழும், பி..எஸ்.ஆர். சில்க் சாரீஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் ‘வெற்றிப் பாதை’ பயிலரங்கின் இரண்டாம் நிகழ்ச்சி கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள தாமோதர் சென்டர் அரங்கில் கடந்த 21.08.2005 அன்று நடைபெற்றது.

வெற்றி இரண்டு விதம்

– சினேகலதா discount oem software வழியில் வருகிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு வெற்றி காண்பது ஒரு விதம். மற்றவர்கள் கண்களுக்கு எளிமையாய்த் தென்படும் விஷயங்களில்கூடப் பெரிய வாய்ப்புகளைக் கண்டறிந்து, அதன் வழியே வெற்றிபெறுவது இன்னொருவிதம்.

மகிழ்ச்சியை வெல்வது எப்படி?

– எ. வெங்கட்ராமன் எனக்கு இருபத்திரெண்டு வயதானபோது, சீர்காழியில் என் திருமணம் நடைபெற்றது. பேராசிரியர் எம்.எஸ். துரைசாமி ஐயர் எனக்கு ஒரு அருமையான ஆங்கில நூலைப் பரிசளித்தார். அதன் பெயர் இஞசணமஉநப ஞஊ ஏஅடடஐசஉநந. பேரறிஞரும், தத்துவ ஞானியுமாகிய பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் பிரபு எழுதிய சிறந்த நூல் அது!

ஒரு நிர்வாகியின் டைரிக் குறிப்பு

– ஏ.ஜே. பராசரன் நிறைவுப் பகுதி.. நிர்வாகத்தில் எத்தனையோ அம்சங்களை முறைப்படுத்தி வைத்திருந்தாலும், அடிப்படையான தேவைகளில் ஒன்று, மனித உறவுகள். மனித உறவுகளைக் கையாளும்போது, அதில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன.

முடிவல்ல ஆரம்பம்!

– திரு.து.சா.ப. செல்வம் இந்தத் தொடரின் ஆசிரியர், திரு.து.சா.ப. செல்வம் அவர்கள் ‘ஏற்றுமதி உலகம்’ இதழின் பதிப்பாசிரியர். ‘நீங்களும் ஏற்றுமதி செய்யலாம்’ எனும் நூலுக்காக தமிழக அரசின் முதல் பரிசு பெற்றவர். ‘ஏற்றுமதி சுலபமே!’ ‘எல்லோருக்கும் ஏற்ற வியாபாரம்’ ‘வாருங்கள் முன்னேறலாம்’ போன்ற நூல்களின் ஆசிரியர்.

அரவணைப்பு : இந்த யுகத்தின் உடனடித் தேவை

– தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் எது ஆன்மீகம்? மனிதனுக்குள் மறைந்து இருக்கிற மனிதத்தை தெய்வீகமாக மாற்றுகின்ற செய்களம் எதுவோ அதுவே ஆன்மீகம். ஆனால், அதை விட்டுவிட்டு, ஆன்மீகம் என்பது இன்றைக்கு புரோகிதத்தின் கூடாரமாக ஆகிவிட்டது. கடவுளே எதிரே வந்தாலும் சற்று தள்ளி நில், நான் சடங்குகளை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்கிற பூசாரியைக் கடவுளாக … Continued

டாக்டர் குமாரபாபு அவர்களுடன் நேர்காணல்

டாக்டர் குமாரபாபு மருத்துவத் துறையில் 30 ஆண்டு கால அனுபவமுள்ள பிரபல மனநல மருத்துவ நிபுணர். இளைஞர்களுக்குள் இருக்கும் ஆற்றலைத் தூண்டி அவர்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக சிறப்புப் பயிற்சிகள் வழங்குபவர். அறிவியல், ஆன்மீகம் இரண்டிலும் ஆழ்ந்த ஈடுபாடும், தெளிந்த பார்வையும் கொண்டவர். மனநலம் குறித்து மருத்துவர்களுக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் பயிற்சி அழித்து வருபவர். அவருடன் ஓர் … Continued

ஆளப்பிறந்தவன் நீ

– தயாநிதி தொடர் 8 நமது உரிமைகளை உணர்ந்து கொள்ளுதலும், அவற்றிற்காகப் போராடுவதும் ஆளுமைத்திறன் என அறிந்துகொண்டோம். நமது உரிமை எதுவெனத் தெரிந்தால்தான், அதன்மீது பிறர் ஏறி நிற்க முயலும் போது அவர்களின் அத்துமீறலை எதிர்கொள்ள இயலும்.

சந்தைப் படுத்துவோம்… சாதனை குவிப்போம்!

– தி.க. சந்திரசேகரன் தொடர் 17 பொருளின் தேவை அதிகமாகவும், அதற்கேற்ப உற்பத்தித் திறனும் அதிகமாக இருக்கும்போது நிச்சயமாக அப்பொருளினைப் பரவலாக சந்தைப்படுத்த இடைமனிதர்கள் தேவை. அவர்களுக்குப் பல பெயர்கள் தரலாம். தரகர்கள் (ஆழ்ர்ந்ங்ழ்ள்) கமிஷன் ஏஜெண்டுகள், ஏகபோக விற்பனை ஏஜெண்டுகள் என்றெல்லாம் இடைநிலை மக்கள் இருக்கிறார்கள். இடையில் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கும்போது, விற்பனை செய்வோரும் … Continued