வல்லமை தாராயோ : வருவது தானே வரும்; வருவதுதானே வரும்!

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம், “நமது நம்பிக்கை” மாத இதழுடன் இணைந்து 17.08.2008 அன்று திருச்சியில் நடத்திய வல்லமை தாராயோ நிகழ்ச்சி வாசகர் வெள்ளமும் மழை வெள்ளமும் சங்கமித்த அபூர்வ சம்பவமாய் அமைந்தது. “நமது நம்பிக்கை” மாத இதழ் ஆசிரியர் திரு. மரபின் மைந்தன் முத்தையா, திரைப்படக் கலைஞர் திரு. டெல்லி கணேஷ் ஆகியோர் உரை … Continued

புதியதோர் உலகம் செய்வோம்

– தே. சௌந்தர்ராஜன் ஒரு மனிதனுக்கு நீண்ட நாட்களாக ஓர் ஆசை. சொர்க்கம் எப்படி இருக்கும், நரகம் எப்படி இருக்கும்? என்பதைத் தன் உயிர் உள்ளபோதே தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே அந்த ஆசை. இந்த பூத உடல் மண்ணில் மாயும் முன், இந்த கட்டை வேகுமுன், நான் இதைத் தெரிந்தே தீருவேன் என மிகுந்த ஆவலோடு … Continued

செங்கோல்: நேரம் நல்ல நேரம்

– இரா. கோபிநாத் பதவி உயரும்போது, வருமானமும் வளரும், வசதிகளும் வளரும், கூடவே பொறுப்புக்களும் வளரும். நமது குழுவின் அளவும் வளரும். முன்னைவிட அதிக மக்களோடு தொடர்பு ஏற்படும். இவை எல்லாம் வளர்ந்து வரும்போது, முக்கியமான உபகரணமான, நேரம் மட்டும் வளர்வதில்லை. முன்னமும் 24 மணிநேரம்தான், இப்போதும் அவ்வளவேதான். அதனால் மிகுந்த அழுத்தம் ஏற்படுகிறது. குறைந்த … Continued

இந்த உலகம் நல்லவர்களால் நிரம்பியிருக்கிறது.

சிறுவனாயிருந்த போதே லாரி விபத்தொன்றில் தன் இரண்டு கால்களையும் இழந்த நாக நரேஷ் என்ற இளைஞர், சென்னை ஐ.ஐ.டி.யில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்த கையோடு பெங்களூரிலுள்ள கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். வாழ்க்கை மீதும் மனிதர்கள் மீதும் இவருக்கிருக்கும் நல்லெண்ணமும், ஆரோக்கியமான அணுகு முறையுமே, தொடர் வெற்றிகள் பலவற்றை அவருக்குப் பரிசாகத் தந்து வருகிறது. … Continued

திரைகடலோடு திரவியம் தேடு

– இயகோகா சுப்பிரமணியன் இரண்டு மாதங்களுக்கு முன்னால், சைனாவைச் சேர்ந்த ஒருவர் என்னைக் காண்பதற்காக அலுவலகம் வந்திருந்தார். பஞ்சாலை மற்றும் பல தொழில்களுக்கான இயந்திரங்களைத் தயாரிக்கும் “சைனா” நிறுவனத்தின் தென்னிந்தியப் பிரதிநிதியாகக் கோவையிலேயே தங்கிப் பணிபுரிந்து வருகின்றார்.

நம்பிக்கையே வீரத்தின் சாரம்

– மகேஸ்வரி சற்குரு “நம்பிக்கையே வீரத்தின் சாரம்!” என்ற எமர்சனின் வார்த்தைகள், உடல் பலத்தால்தான் ஒருவன் வீரன் என்பதை நிரூபிப்பான் என்றில்லை, நம்பிக்கைதான் அவனை வழிநடத்திச் செல்கின்றது என்பதை சொல்லாமல் சொல்கின்ற உண்மை பாருங்களேன். அதனால்தான் நம்பினோர் கெடுவதில்லை என்பது நான்கு மறை தீர்ப்பாக இருக்கிறது.

நல்ல எண்ணங்கள் கடவுள்; தீய எண்ணங்கள் பேய்!

– கவிப்பேரரசு வைரமுத்து அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் 98வது பிறந்தநாள் விழா ஆழியாறு அறிவுத் திருக்கோயிலில் நடைபெற்றது. அறிவுத் திருக்கோயில் நிர்வாக அறங்காவலரும் பண்ணாரியம்மன் குழு நிறுவனங்களின் தலைவருமான டாக்டர் எஸ்.வி. பாலசுப்ரமணியம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

நமது பார்வை

ஒலிம்பிக் பந்தயங்களில் உலகம் காட்டும் ஈடுபாடும், வெற்றியாளர்களுக்கு அரசாங்கம் ஊக்குவிக்கும் விதமாகப் பரிசுகள் வழங்குவதும் புரிந்துகொள்ளக் கூடியதே.

கான்பிடன்ஸ் கார்னர் : 6

நெடுநாளுக்குப் பின் சந்தித்த உறவினர் ஒருவர் கேட்டார், “ஏன் சோகமாயிருக்கிறீர்கள்?” இவர் சொன்னார், “மூன்று வாரங்களுக்கு முன் என் தாத்தா இறந்தார். அவரது சொத்து ஐம்பது லட்சம் எனக்கு வந்தது” பிறகு ஏன் சோகம் –

கான்பிடன்ஸ் கார்னர் : 5

அந்தச்சிறுவனுக்கு சந்தேகம். அக்காவிடம் கேட்டான். “கடவுளை நாம் பார்க்க முடியுமா?” அக்கா சொன்னாள், “அவரெங்கோ சொர்க்கத்திலிருக்கிறார். நாமெங்கே பார்க்க முடியும்?”அப்புறம் அம்மாவிடம் கேட்டான், “அவர் நம் இதயத்துக்குள்தான் இருக்கிறார். நாம் பார்க்க முடியாது”. பையனுக்கோ ஏமாற்றம். பிறகு,