வாழ நினைத்தால் வாழலாம் நிகழ்ச்சியில் ருத்ரன் பதில்கள்
ஒரு மனிதனின் புத்திசாலித்தனம் என்பது ஜீன்களின் மூலம் வருவதா? பயிற்சிகளின் மூலம் வருவதா? அடிப்படையில் அறிவு ஒன்றுதான். அதை நாம் எப்படி திறம்பட பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் அது மெருகேறுகிறது. நம் கணக்குப்படி இருநூறுக்கு இருநூறு வாங்கும் குழந்தை புத்திசாலி என்று நினைக்கிறோம். அந்தக் குழந்தைக்கு இருநூறுக்கு நூறு வாங்கிவிட்டு டெஸ்ட் மேட்சில் செஞ்சுரி அடிப்பது … Continued
மனமே உலகின் முதல் கணினி
என்.எல்.பி. நிபுணர் திரு. ஜெயசேகரன் எழுதும் புதுமைத் தொடர் தமிழில்: கனகதூரிகா கணினி, இன்று இயந்திரம் என்பதை தாண்டி மனிதர்களின் இயக்கமாகவே மாறிவிட்ட வேளையில், கணினியை கண்டறிந்தவர்கள் யார்? அது எப்படி இருந்தது? என்று ரிஷிமூலம் தேடி பலரும் பயணப்படுகின்றனர். நம்முடைய மனம்தான் உலகின் முதல் கணினி என்பதை நாம் அனுபவ பூர்வமாக உணரும் இடமிது.
புத்தகம் பிடிக்கும்..
விஜயா பதிப்பகம் திரு. வேலாயுதம் நேர்காணல் நேர்காணல்: கனகலஷ்மி இன்று கோவையின் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலை ஒவ்வொரு குடும்பமும் தயாரிக்கிறபோது அரிசி, பருப்பு என்ற வரிசையில் புத்தகத்தையும் சேர்த்த பெருமை, ”அறிவுலகவாதிகளின் அட்சயபாத்திரம்” எனும் கோவை விஜயா பதிப்பகத்திற்கு உண்டு. புத்தகங்கள் ஒவ்வொரு முறை படிக்கிறபோதும் பல புதிய அனுபவங்களை தந்து கொண்டேயிருக்கும். அதுபோலத்தான் திரு. … Continued
பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள்..
இந்த மாதம் ரமேஷ் பிரபா (இன்று புகழின் உச்சியைத் தொட்டவர்களும் தங்களுக்கான நம்பிக்கையை எங்கிருந்தோ பெற்றிருப்பார்கள். அந்த அனுபவங்கள் குறித்து உதவி ஆசிரியர் கனகலட்சுமியுடன் உரையாடுகிறார்கள் பிரபலங்கள்) நான் எனது வாழ்க்கையில் நம்பிக்கை பெற்ற நொடிகளைப் பற்றி பேசுவதை விட மற்றவர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய நொடிகளை பேசுவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். காரணம் எனது … Continued
கற்பனைக்கு மேனி தந்து
அதிசயங்கள் சாத்தியம் என்கிறது அடோரா மல்டிமீடியா ‘கற்பனைக்கு மேனிதந்து கால்சதங்கை போட்டுவிட்டேன்!’ என்றொரு பாடல் உண்டு. ‘கற்பனைக்கு மேனிதந்து கால்சராய்’ கூடப் போடலாம் என்று சொல்கிறது, கிராபிக்ஸ் அனிமேஷன் மல்டி மீடியா துறை. புதுமைகள் புகுந்து வருவதற்கான வாசல் களைத் திறந்து கொண்டேயிருக்கும் கிராஃபிக்ஸ் அனிமேஷன் துறையில் இன்று விரல் நுனியில் நிகழ்கின்றன வியப்பூட்டும் ஜாலங்கள்.
திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்..!
-சிந்தனைக்கவிஞர் கவிதாசன் முதன்முதலாக எனது மேடைப் பேச்சு, கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில்தான் அரங்கேறியது. உலகநாடுகளிடையே இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறதா? நிற்கவில்லையா? என்பதுதான் தலைப்பு. ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் இருவர் கலந்துகொண்டு ஒருவர் தலைப்பை ஒட்டியும் மற்றவர் வெட்டியும் பேச வேண்டும் என்பதுதான் நிபந்தனை.
நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும்
– ருக்மணி பன்னீர்செல்வம் அடிகுழாயில் ஊற்றப்படும் நீர்போல் நம்முடைய புலன்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளும், உள்வாங்கும் அறிவை எல்லாம் அப்படியே உள்ளிருப்பாய் வைத்திருப்பதில் பயன் ஒன்றும் இல்லை. (சிலர் அறிந்து கொள்வதுமில்லை, வைத்திருப்பதும் இல்லை என்பது வேறு விஷயம்). உள்ளே ஊற்றிய நீர் கீழிறங்கி விசையின் மூலம் பூமிக்கடியில் இருக்கும் ஊற்று நீரை வெளியே … Continued
அறிய வேண்டிய ஆளுமைகள்
-மரபின்மைந்தன் ம. முத்தையா மைக்கேல் சௌல் டேல் சின்னதாய் ஒரு வணிகம் செய்து, இரண்டாயிரம் டாலர்கள் சம்பாதித்தபோது, டெல்லுக்கு வயது 12. சின்ன வயதிலேயே புத்திசாலித் தனம் பளிச்சிட வளர்ந்த டெல், படிப்பில் அதிக அக்கறை காட்டவில்லை. எட்டுவயதில், பள்ளி இறுதிப்படிப்பிற்கு நிகரான தேர்வொன்றை எழுதியே ஆக வேண்டுமென அடம்பிடித்த டெல்லை, அந்தத் தேர்வுக்கு அனுப்ப … Continued
உறியடி வாழ்க்கை
– மரபின் மைந்தன் ம. முத்தையா குறிக்கோள் நோக்கிப் பயணம் போகையில் கனவுகள் குதிரைகள் ஆகும் குதிரையை சுண்டிக் கிளம்பிடு தோழா கருதிய எதுவும் கைகூடும் மறிக்கும் தடைகளை அகற்றும் சக்தி மனிதனின் கனவுக்குண்டு மயக்கம்- தயக்கம் முற்றிலும் நீக்கி முயன்றால் வெற்றிகள் உண்டு
நமக்குள்ளே…
ஜுன் 2011 இதழில் துணை ஆட்சியர் திரு.ங.எ.ராஜமாணிக்கம் அவர்களின் பேச்சு, தூங்கும் நெஞ்சங்களை தட்டி எழுப்பும் தன்மையுடன் வெளிவந்தது அருமை. கல்யாணப் பரிசு தொடர் நமது தினசரி வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆசிரியருக்கு நன்றி!! ஜெ.ச.நித்யா, மதுரை.