ஆளப்பிறந்தவன் நீ
-தயாநிதி இன்றைய நவீன உலகில், தனி மனிதராய் செயல்படுவதைக் காட்டிலும் குழுவாய், குழுவில் அங்கமாய் செயல்படுவதே பெரிய வெற்றிகளை ஈட்டித் தருகிறது. நமது ஆளுமைத் திறனை நமது பணிகளில் செலுத்தும்போது, அதன் செயல்பாடும், விளைவும் நமது கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஆனால், நமக்கான பணிகளைச் செய்யுமாறு மற்றவர்களிடம் நாம் நமது ஆளுமைத் திறனைக் காட்டும்பொழுது, நாம் தவறானவர்களாக, … Continued
சேது சமுத்திரத் திட்டம்…
145ஆண்டுகளுக்குப் பிறகு சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுவதற்கான அரசாணை பிறந்திருக்கிறது. அந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்திருப்பதால் பொருளாதார நன்மை, வாழ்க்கைத் தரத்தில் மேம்பாடு, உலகளாவிய புதிய வாய்ப்புகள் போன்ற உயரிய நன்மைகள் மலர உள்ளன.
மாணவ மனசு! கோடை விடுமுறை
ரமேஷ்பிரபா ஒரு காலத்தில் கோடை விடுமுறை என்பது மாணவர்கள், பெற்றோர்கள் இருவருமே ஏங்கித் தவிக்கிற விஷயமாக, எப்போது வரும் என காத்திருக்கும் ஒன்றாக, பலமாத காலங்களுக்கு முன்பே திட்டமிடுகிற விஷயமாக, குடும்பத்தின் அனைவருமே கொண்டாடி மகிழுகிற தருணமாக இருந்து வந்தது என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால், இன்று அதே கோடை விடுமுறை இருக்கிறதா என்று கேட்டால், கண்டிப்பாக … Continued
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
– சினேகலதா best computer repair software சோர்வு என்பது பெரிய விஷயம் என்று தான் பலரும் நினைக்கிறோம். அதில் ஒரே எழுத்து மாறினால் போதும், 'தீர்வு' பிறந்து விடும்.
வெற்றிப் பாதை : புதிய பயணத்தின் பெருமை மிக்க ஆரம்பம்
– விழா அரங்கிலிருந்து பாணபத்திரன் நமது நம்பிக்கை மாத இதழ் மற்றும் பி.எஸ்.ஆர். சாரீஸ் இணைந்து நடத்தும் வெற்றிப்பாதை தொடர் பயிலரங்குகளின் தொடக்க விழா கோவை திவ்யோதயா அரங்கில் நடைபெற்றது.
எது உள்ளுணர்வு? எது சந்தேகம்?
– ராம் பிரகாஷ் எந்த ஒரு சிந்தனையாளரைக் கேளுங்கள் – “உங்கள் உள்ளுணர்வின் குரலுக்கு மதிப்புக் கொடுங்கள்” என்று திரும்பத் திரும்பச் சொல்வார்கள். ஒரு காரியத்தைத் தொடங்கலாமா வேண்டாமா என்று உள்ளுணர்வு உணர்த்துவது சரியாக இருக்கும் என்பார்கள்.
பொதுவாச் சொல்றேன்
புருஷோத்தமன் ஒரு விஷயம் கண்ணுக்குத் தெளிவாத் தெரியாத போது, பார்வையிலே இருக்கிறகுறைபாட்டுக்கு ஏற்றமாதிரி மூக்குக் கண்ணாடி போட்டக்கறோம். ரொம்ப ரொம்பச் சின்ன விஷயங்களை, பூதக்கண்ணாடி வைச்சுப் பார்க்கறோம். ஆனா, ஒவ்வொரு விஷயத்தையுமே பூதக்கண்ணாடியிலே பார்க்க ஆரம்பிச்சுட்டோம்னு வைச்சுக்கங்க! சின்ன விஷயத்தையும் பெரிசுபடுத்த ஆரம்பிச்சுட்டதா அர்த்தம்.
சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?
– சுந்தர மூர்த்தி நம்மில் பலருக்கு இந்த குணமிருக்கும். அல்லது, நம் நண்பர்களுக்காவது இருக்கும். மற்றவர்கள் நம்மை விமர்சிக்க வேண்டுமென்று கேட்போம். அவர்கள் தயங்குவார்கள். “சும்மா சொல்லுங்க! நல்லதுக்குதானே சொல்லப் போறீங்க என்று உற்சாகப்படுத்துவோம். அவர்கள் தயக்கத்துடன் சொல்லத் தொடங்குவார்கள்.
காப்பீட்டு முகவர்களே கவனியுங்கள்
-இரா. கோபிநாத், காலத்தை அதன் போக்கிலேயே விட்டுவிடாமல் படைப்பாற்றல் திறனால் காலத்தையே தமது போக்கிற்கு மாற்றியமைத்து வெற்றி கண்டவர்கள் பலர் உண்டு. இவர்களால் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்லாமல் நாட்டிற்கே பெரிய அளவில் லாபம் கிடைத்திருக்கிறது. டாக்டர் வர்கீஸ் குரியன், திரு நாராயண மூர்த்தி, டாக்டர் அஞ்சி ரெட்டி போன்றவர்களால் நம் சமுதாயம் அடைந்த லாபத்திற்கு அளவே … Continued
புதுக்கணக்கு
மரபின் மைந்தன் ம. முத்தையா மலையைப் புரட்டும் இலட்சியத்தோடு மனிதா தொடங்கு புதுக்கணக்கு; விலையாய் உழைப்பைக் கொடுத்தால் போதும் வளைந்து கொடுக்கும் விதிக்கணக்கு;