நமக்குள்ளே..

கவிதாசன் காட்டும் திசைகளானது ஓசை இல்லாமல் பசையாக பவ்யமாக எங்கள் மனதில் ஒட்டிக்கொள்கிறது, விழும் போதெல்லாம் விஸ்வரூபம் எடு, நீ புண்படும்போதெல்லாம் புன்னகை செய்து கொண்டே முன்னேறு என்ற வரிகள் மிகவும் அருமை. ”சிரமங்கள் இல்லாமல் சிகரங்கள் இல்லை” என்பதை அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளருக்கு நன்றி. தே.கவியரசு, தருமபுரி.

வீட்டிற்கொரு பில்கேட்ஸ்

உங்கள் குழந்தை பில்கேட்ஸ் ஆகவேண்டுமா? -அத்வைத் சதானந்த் பத்து வருடத்திற்கு முன்னால் ஒரு பத்திரிகையில் படித்த செய்தி இன்றும் எனக்கு பளிச்சென்று நினைவில் இருக்கிறது. அவர் உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர். அவர் பணத்தை எப்படி செலவிடுவது? என்று சில யோசனைகளை அதில் சொல்லி இருந்தார்கள். அவரிடம் இருக்கும் பணத்தை கொண்டு 80 நாடுகளின் ஒட்டுமொத்த உற்பத்தியை … Continued

வேலைக்கு ஆட்கள் தேவையில்லை

பேப்பர் முழுக்க வேலைக்கு ஆட்கள் தேவை விளம்பரங்கள் வரும் காலத்தில், இனிவரும் நாட்களில் தலைப்பு செய்திகள் இப்படி இருக்கலாம் – எக்ஸ் நிறுவனத்திற்கு ஒரே நாளில், வேலைக்கு 20 பேர் கிடைத்திருக்கிறார்கள். நிச்சயம் அந்த தினசரி அன்று பரபரப்பாக விற்கும். அந்த அளவிற்கு வேலைக்கு ஆட்கள் இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. நிறுவனங்கள் நடத்துகிறவர்கள் வீட்டில் இருக்கும் … Continued

இரட்டைச் சம்பளம் வாங்குங்கள்

-கிருஷ்ண வரதராஜன் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட உட்கார்ந்தார் முல்லா நஸ்ரூதீன். சில்வர் டம்ளரை லொட் என்று வைத்து, அதில் தண்ணீர் ஊற்றியபடி, ‘என்ன சாப்பிடறீங்க?’ என்று அலட்சியமாக கேட்டார் சர்வர். முல்லா ஆர்டர் கொடுத்த ஐட்டங்கள் ஒவ்வொன்றும் அலட்சியமாகவே பரிமாறப் பட்டன. முல்லாவை பார்த்தால் டிப்ஸ் கொடுப்பவர் போல தெரியாததால் சர்வர் பில்லைக்கொண்டு வந்து டேபிளில் … Continued

வௌவால் வாழ்க்கை வாழுங்கள்

– சாதனா வௌவால் எப்படி இரவில் பறக்கிறது? டொனால்டு ஆர்.கிரிப்பின், ராபர்ட் கேலம்போஸ் என்ற இரு விலங்கியல் ஆய்வாளர்களுக்கு நீண்ட நாட்களாய் ஒரு சந்தேகம் இருந்து வந்தது. “கும்மிருட்டில் கூட எப்படி வௌவால்கள் எதிலும் மோதிக்கொள்ளாமல் பறக்கின்றன?” என்பதுதான் அவர்களின் சந்தேகம்.

வெற்றிப் பக்கங்கள்

-கிருஷ்ண வரதராஜன் உலகத்திலேயே, ‘அதிக உழைக்கும் திறன் உள்ளவர்கள், இந்தியர்கள்’ என்று ஒருவர் ஆய்வின் மூலம் கண்டறிந்தார். அந்த ஆய்வு முடிவை ஏற்றுக் கொள்ளாத அவரின் நண்பர்கள் கேலி செய்யும் பாவனையோடு கேள்வி கேட்டார்கள், ‘அப்படி யென்றால் இந்தியா இந்நேரம் வல்லரசாக வந்திருக்க வேண்டுமே?’

கான்பிடன்ஸ் கார்னர் – 6

சியோல் ஒலிம்பிக்ஸில் படகுப்போட்டி. இரண்டாம் இடத்தில் வந்து கொண்டிருந்தார், கனடாவைச் சேர்ந்த லாரன்ஸ் லெமிக்ஸ். கடும் காற்றில் படகிலிருந்து விழுந்த சிங்கப்பூர் அணி வீரர்களை மீட்க தண்ணீரில் குதித்தார். இருவரையும் காப்பாற்றும் முன் பலரும் லாரன்ஸைக் கடந்து போயிருந்தனர்.

கான்பிடன்ஸ் கார்னர் – 5

கைத்துப்பாக்கி வீரர் கரோலி டகாக்ஸ், லண்டனைச் சேர்ந்தவர். 1938இல், அவரது வலது கரத்தில் ஒரு கிரனேட் வெடித்து முற்றாகச் சிதைந்தது. மிக முயன்று இடது கையில் எல்லாம் செய்யப் பழகிக் கொண்டார். விபத்து நடந்து ஓராண்டில் ஹங்கேரி பிஸ்டல் கிளப்பில் சேர்ந்து பயிற்சிகளைத் தொடர்ந்தார்.

கான்பிடன்ஸ் கார்னர் – 4

1936 ஒலிம்பிக்ஸ். நீளம் தாண்டும் போட்டியில் முன்பே சாதனை படைத்திருந்த கறுப்பின வீரர் ஜெஸ்ஸி ஓவன்ஸ் பயிற்சிக்குப் போனார். அங்கே நாஜி இனத்தை சேர்ந்த வாட்டசாட்டமான வீரர் ஒருவரைக்கண்டு தயங்கினார்.

கான்பிடன்ஸ் கார்னர் – 3

பெர்லின் ஒலிம்பிக்ஸில் ஒரு விசித்திரமான தீர்ப்பு வெளிவந்தது. இரவு 10.30 மணிக்கு மேல் விளக்கொளி வெள்ளத்தில் நடந்த போல்வால்ட் போட்டியில் முதலாவதாக வந்தவரையும் நான்காவதாக வந்தவரையும் நடுவர்களால் இனங்காண முடிந்தது. இருவருமே அமெரிக்க வீரர்கள். ஆனால் இரண்டாவது இடத்திலும் மூன்றாவது இடத்திலும் இரண்டு ஜப்பானியர்கள்.