சந்தைப் படுத்துவோம் சாதனை குவிப்போம்

தி.க. சந்திரசேகரன்

பப்ளிசிட்டி அன்ட் புரமோஷன் என்ற இரண்டு ஆங்கிலச் சொற்களும் அடிக்கடி நாம் பயன்படுத்தும் சொற்கள்.

விளம்பரமும் -முன்னிலைப் படுத்தலும் என்று அச்சொற்களைத் தமிழ்ப்படுத்தலாம்.விளம்பரங்களின் தன்மைகளைப் பற்றி இதுவரை கண்டோம். விளம்பரங்களின் முதல் நோக்கம் இப்படி ஒரு பொருள் சந்தையில் இருக்கிறது என்று மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதே! இரண்டாம் நோக்கம் அப்பொருளை மக்கள் வாங்க வேண்டும் என்பது.சி.ஆர்.ஐ பம்பே என்று சர்தார்ஜியும் – பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அவர்களுக்கே உரிய உச்சரிப்பில் கூறியதன் விளைவாக தொலைக்காட்சி பார்க்கும் அத்தனை மிலியன் மக்களுக்கும் இதஐ டன்ம்ல் பற்றித் தெரியும். ஆனால், நம்மில் எத்தனை பேர் அதனை வாங்கினோம்? – நிச்சயமாக நான் வாங்கவில்லை.விளம்பரங்களின் மூலம் அந்தப் பொருள் ஏன் மனத்தில் பதிந்து விட்டது.விளம்பரம் அந்த வேலையைச் செய்யும். முன்னிலைப்படுத்துதல் அந்தப் பொருள் விலையாவதற்குக் காரணமாக இருக்கும். பொதுவாக பெரிய வெற்றிகரமான நிறுவனங்கள், தங்களுடைய பொருள் சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் போது அவ்வப்போது விளம்பரம் செய்வதோடு நிறுத்திக் கொள்வார்கள்.

புதிய நிறுவனங்கள், புதிய பொருளை சந்தைக்குக் கொண்டுவரும் நிறுவனங்கள், கடுமையான போட்டியில் சற்று தடுமாற்றங்களை சந்திக்கின்ற நிறுவனங்கள், ஏற்கனவே போதுமான இலாபத்தை ஈட்டிவிட்ட நிலையில் மேலும் சரக்குகளை கையிருப்பு வைத்திருக்கிற நிறுவனங்கள் இவையெல்லாம் முன்னிலைப்படுத்தும் முயற்சியில் இறங்கும்.
முன்னிலைப்படுத்துதல் என்றால் என்ன?
விளம்பர முறைகளைத் தவிர்த்து, வேறு ஏதாவது ஒரு வகையில் ஒரு பொருளை எப்படியாவது வாங்கத் தூண்டும் முயற்சிகளுக்கு முன்னிலைப் படுத்துதல் என்று பெயர்.இது உங்களுக்குப் புரியவில்லை என்றால் வீட்டில் இருக்கும் உங்கள் 9 வயது மகனைக் கேட்டுப்பாருங்கள்; விடை கிடைக்கும்.இதுவரை ஹார்லிக்ஸ் தானே கேட்பாய், இப்போது ஏன் காம்ப்ளான் கேட்கிறாய்?”காம்ப்ளான் வாங்கினால் இரண்டு ஸ்டிக்கர் ப்ரீ!ஒரு பொருளை வாங்க வைக்க கையாளும் நுணுக்கங்களே முன்னிலைப்படுத்துதல்.பெஸ்ட் கண்ணா பெஸ்ட் என்று விளம்பரம் செய்யும் குங்குமம் இதழை ஒவ்வொரு வாரமும் வாங்குவதற்கு காரணம் குங்குமம் இதழ் மட்டுமல்ல… அதனுடன் இலவசமாகக் கிடைக்கும் ‘ஷாம்பூ’-‘பற்பசை’ போன்ற பொருள்களும் கூட.ஏன் முன்னிலைப்படுத்த வேண்டும்?

(அ) ஒரு புதிய நிறுவனம் சந்தைக்கு வருகிறது; அந்த நிறுவனத்தையே யாருக்கும் தெரியாது; நிச்சயமாக அதன் பொருள்களையும் தெரியாது. எடுத்த எடுப்பிலேயே பெரிய அளவில் விளம்பரம் செய்ய பொருளாதார வசதியும் இருக்காது. இந்த சூழ்நிலையில் முன்னிலைப்படுத்துவது தேவை.(ஆ) ஏற்கனவே மக்களுக்கு அறிமுகமான நிறுவனமாக இருக்கலாம், ஆனாலும் அது ஒரு புதிய பொருளை அறிமுகப்படுத்தும் போது முன்னிலைப்படுத்துவது அவசியமாகிறது.(இ) ஒரே பொருளை நான்கைந்து நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. போட்டி மிகக் கடுமையாக இருக்கிறது. கொஞ்சம் ஏமாந்தாலும் போட்டியில் தோற்று விடுவோமோ என்ற அச்சம் வரும்போது முன்னிலைப்படுத்த வேண்டியுள்ளது.

(ஈ) அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு பொருளை சந்தைக்குக் கொண்டு வரும்போது மிக அதிகமான எண்ணிக்கையில் பொருட்களைக் கொண்டு வருவார்கள். எடுத்துக்காட்டாக 10 இலட்சம் பிரஷர் குக்கர்களை சந்தைக்குக் கொண்டு வருவதாக வைத்துக் கொள்வோம். ஒரு குக்கரின் விலை 50 டாலர் எனக் கொள்வோம். 5 இலட்சம் குக்கர்களை விற்றாலே அந்த நிறுவனம் இலாபம் அடைகிறது என்றால், விற்று முடியும் வரை காத்திருப்பார்கள். 5 இலட்சம் குக்கர்கள் விற்றாகிவிட்டது. இலாபம் வந்து விட்டது. இனி 5 இலட்சம் குக்கர்கள் சந்தையில் தேங்கியிருக்கிறது. நஅகஉ என்று விளம்பரம் செய்து ஒரு குக்கர் விலை 20 டாலர்ஞி10 டாலர் என்று போட்டு மீதி 5 இலட்சம் குக்கரையும் ஒரு வாரத்திற்குள் விற்று முடித்து விடுவார்கள். அதிலே தனியாக 1 கோடி 50 இலட்சம் டாலர் இலாபம் வந்துவிடும். இப்படிப்பட்ட நுணுக்கமான அணுகுமுறைகளுக்கு முன்னிலைப்படுத்தும் முயற்சிகள் தேவைப்படுகின்றன.(உ) சில நிறுவனங்களில் பொருள்கள் தங்கிவிடும். பொதுவாக ஜவுளி நிறுவனங்களில் தீபாவளிக்கு என்று வரவழைக்கப்பட்ட துணி வகைகளுள் ஒரு பகுதி தீபாவளிக்குப் பிறகும் விற்பனையாகாமல் தேங்கிவிடும். அதற்குள் நாகரீகம் மாறி, புதிய டிசைன்கள் சந்தைக்கு வந்துகொண்டேயிருக்கும்.

பழைய துணிகள் தங்கிவிட்டால் அவை மங்கிப்போகும் அதை வாங்கச் செலவழித்த பணத்துக்கு வட்டி கூடிக்கொண்டே போகும். இதுவரை வந்த இலாபம், இந்த வட்டியால் இழக்கப்படும். (ண்ண்ண்) வணிக நிலையத்தில் அதிக இடத்தை அடைத்துக் கொள்ளும். நாளாக நாளாக இது பழைய டிசைன்’ என்ற நிலை உருவாகி யாரும் வாங்கமாட்டார்கள் விற்பனை செய்பவர்களுக்கு பழைய டிசைன் என்றவுடன் விற்கும் ஆர்வம் குறைந்துவிடும்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில்தான் ஆடித் தள்ளுபடி என்ற பெயரில் 10% முதல் 50% வரை தள்ளுபடி என்று விலையைக் குறைத்து பழைய சரக்குகளை விற்றுவிடலாம்.

எப்படி முன்னிலைப்படுத்தலாம்?
அமெரிக்க நாட்டு வணிக நிறுவனங்கள் சந்தைப்படுத்துவதற்காக செய்யும் செலவில் 64.4% முன்னிலைப்படுத்துவதற்காகவும், 35.6% விளம்பரத்திற்காகவும் ஒதுக்கப்படுகிறது என்று ஆராய்ச்சி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பொருள்கள் விற்பனையாவதற்கென்றே இருக்கும் போது, விலையாகாமல் தங்கிவிடும்போது, எப்படியாவது விற்க வேண்டுமென்றால் முன்னிலைப்படுத்த 64.4% செலவு செய்வதில் வியப்பில்லை.’எப்படியெல்லாம் முன்னிலைப்படுத்தலாம்?’ என்று காணலாம்.
(அ) எக்ஸ்சேஞ்ச் மேளா
இந்த விழாக்களை நீங்கள் நகரிலேயே அடிக்கடி பார்த்திருக்கலாம்.நீங்கள் உங்களுடைய இரு சக்கர வண்டிகளைக் கொண்டுவந்து கொடுத்தால், விலைக்கு வாங்கிக் கொண்டு, உங்களிடம் நிறுவனம் எஞ்சிய பணத்தை வாங்கிக் கொண்டு, அவர்களுடைய புதிய வண்டியை விற்றுவிடுவார்கள்.

நீங்கள் எந்த நிறுவனத்தின் வண்டியைக் கொடுத்தாலும், எடுத்துக்கொண்டு, அவர்கள் வண்டியைத் தரும்போது இரண்டு செய்திகள் நடக்கின்றன. ஒன்று அவர்களுடைய வண்டி விலையாகிறது; இரண்டு சாலையில் போட்டியாளர் களுடைய வண்டி ஓடுவது குறைந்து விடுகிறது.

(ஆ) கண்காட்சிகள்ஆங்காங்கே நடக்கும் கண்காட்சிகளில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தங்கள் பொருட்களை விற்பனை செய்வதும், முன்னிலைப் படுத்துவதுதான்.
(இ) இலவசம்
ஏதேனும் ஒரு பொருளை வாங்கும்போது, அதனுடன் வேறு பொருட்களை இலவசமாகத் தருவதும் முன்னிலைப்படுத்துவதே! இதனால் ஒரு பொருள் விலையாவதுடன், இலவசமாக வழங்கப்படும் பொருளும் மக்கள் பழக்கத்திற்கு வந்துவிடுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் கோலாலம்பூரில் ஒரு நிறுவனம் ‘இருப்புப் பாதை வண்டிகளை அறிமுகப்படுத்தியது. ஓட்டுநர்-நடத்துனர் யாருமில்லாமல் கணிப்பொறியின் கட்டுப்பாட்டில் தானாக இயங்கும் வண்டிகள் அவை. அறிமுகப்படுத்திய முதல் ஒரு மாதம் வரை அந்த வண்டிகளில் யார் வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று அறிவித்தார்கள்.

இலவசப் பயணத்தின் சுகத்தையும், பலன்களையும் அனுபவித்தவர்கள் சலுகைக் காலம் முடிந்த பின்னரும், இன்றுவரை தொடர்ந்து பயணம் செய்கிறார்கள்.இலவசமாகப் பொருளைத் தருவதும் அல்லது வேறுபொருளுக்கு இலவச இணைப்பாகச் செல்லுவதும் பொருள் அதிக அளவில் விற்பனையாக உதவும்.
(ஈ) அழகாக எடுத்து வைத்தல்
சில நேரங்களில் சில கடைகளில் சோப்புக் கட்டிகள் போன்ற பொருட்களை அழகாக அடுக்கி வைத்திருப்பதைக் காண்கிறோம். பொருளின் உற்பத்தியாளர்கள் போட்டிகளை உண்டாக்கி எந்த விற்பனை நிலையம் மிக அழகாக ‘அடுக்கி வைக்கிறதோ’ அதற்குப் பரிசு என அறிவிக்கிறார்கள்.கடைக்கு வரும் மக்கள், அலங்கரிப்பில் மயங்கிப் பொருட்களை விலை கொடுத்து வாங்குகின்றனர்.
(உ) கூப்பன்கள்
ஒரு குறிப்பிட்ட அளவு விலையுள்ள பொருட்களை வாங்கும்போது ஒரு கூப்பன் வழங்குவது. இப்படிச் சேர்த்த கூப்பன்களைக் கொடுத்துவிட்டு வேறு பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வது போன்ற திட்டங்களை சில நிறுவனங்கள் நடத்துகின்றன. இதுவும் ஒரு வகையாக பொருளை முன்னிலைப்படுத்துவதே!(ஊ) போட்டிகள்
சில நிறுவனங்கள் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கி வாடிக்கையாளரைக் கவர்ந்திழுக் கின்றன. பல ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி ஆரெம்கேவி நிறுவனம் சன் தொலைக்காட்சியில் ‘ஜோடிப் பொருத்தம்’ போட்டி நிகழ்ச்சி நடத்தியதும், வெற்றி பெற்றவர்களுக்கு மாருதி கார், 365 பட்டுப் புடவைகள் என பரிசுகள் வழங்கியதும் குறிப்பிடத்தகுந்தது.
(எ) பரிசுகள்
இரண்டு பொருட்கள் வாங்கினால் ஒரு பொருள் இலவசமாக (பரிசாக) வழங்குவது போன்ற பரிசுத் திட்டங்களும் முன்னிலைப்படுத்த உதவுகின்றன.(ஏ) சங்கங்கள்-உறுப்பினர்கள்
சில நிறுவனங்கள் வாடிக்கையாளர் சங்கங்களை அமைத்து உறுப்பினர்களை சேர்த்து அவர்களுக்குத் தனி சலுகைகளைத் தருகின்றன.
இந்தியன் ஏர்லைன்ஸ்-ஏர் இந்தியா இவை இரண்டும் சேர்ந் அமைப்பை உருவாக்கியுள்ளன. மலேசியன் ஏர்லைன்ஸ் ‘என்ரிச்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது.இப்படிப் பல விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் உறுப்பினர்களைச் சேர்த்து அவற்றின் உறுப்பினர்களுக்கு பயணம் செல்லும் போதெல்லாம் ‘புள்ளிகள்’ கொடுத்து, குறிப்பிட்ட காலத்தில் எடுத்த புள்ளிகளுக்கு ஏற்ப வேறு சலுகைளைத் தருகின்றன.
(ஐ) தள்ளுபடிகள்
ஆடித்தள்ளுபடி, விழாக்காலத் தள்ளுபடி, 25% முதல் 50% வரை தள்ளுபடி, இருப்பு தீரும்வரை தள்ளுபடி என்று பலவிதமான தள்ளுபடிகளைத் தருவதும் முன்னிலைப் படுத்துவதே!முன்னிலைப்படுத்துவதில் உள்ள சிறப்புகளையும், குறைகளையும் அடுத்த இதழில் காண்போம்!

…….(வளரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *