இரட்டைச் சம்பளம் வாங்குங்கள்

– கிருஷ்ண வரதராஜன்

தொடர்

மேலதிக விபரங்களுக்கு: பிரபல நிறுவனம் ஒன்று தங்கள் பணியாளர்களை உற்சாகப்படுத்த ஒரு செயல் திட்டம் வகுத்துத்தருமாறு எங்கள் கன்சல்டன்ஸியிடம் கேட்டிருந்தது.

அதற்கு நாங்கள் வகுத்தளித்த திட்டம்தான் இரட்டைச்சம்பளம்.

ஒவ்வொரு பிரிவிலும் மிகச்சிறப்பாக வேலை செய்யும் ஒருவருக்கு அவர் வாங்கும் சம்பளத்தை போல இன்னொரு மடங்கு பரிசு. அதாவது இரட்டைச்சம்பளம் வழங்கப்படும்.

இந்தத் திட்டம் உங்கள் நிறுவனத்தில் கூட ஒரு நாள் நடைமுறைப்படுத்தப்படலாம். அது வரை காத்திருக்காமல் இப்போதே இரட்டை சம்பளம் பெறுவது எப்படி? என்று யோசிப்போம்.

ஒரு சிலர் வேலைக்கு சேரும்போது என்ன சம்பளம் வாங்கினார்களோ அதே அளவிலேயே கடைசி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பார்கள். ஒரு சிலர் வேலைக்கு சேர்ந்த அடுத்த மாதமே நன்றாக வேலை செய்கிறார் என்ற பெயரோடு கூடுதல் சம்பளத்தையும் பெறுவார்கள்.

சம்பள உயர்வை எதிர்பார்க்கும் முன் உங்களை நீங்களே ஒரு கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள், ‘என் வேலைத்திறனில் எவ்வளவு உயர்வு ஏற்பட்டிருக்கிறது?’

அடுத்து எதற்காக சம்பளம் வழங்கப் படுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதற்கு, எல்லோரும் சம்பளம் செய்யும் வேலைக்காக வழங்கப்படுகிறது என்று சொல்வார்கள். உண்மையில் சம்பளம் செய்யும் வேலைக்காக மட்டுமல்ல காட்டும் விசுவாசத்திற்காகவும் வழங்கப்படுகிறது.

உங்கள் வளர்ச்சியை மட்டும் யோசிக்காமல் நிறுவன வளர்ச்சியையும் யோசியுங்கள். அப்படி யோசித்து செயல்பட்டால் மட்டுமே அது உங்கள் விசுவாசத்தின் வளர்ச்சியாக இருக்கும்.

இப்படியெல்லாம் செயல்பட்டால் உங்கள் சம்பள உயர்வுக்கு உங்கள் நிறுவனத்தில் இருக்கும் அத்தனை பேரும் பேசுவார்கள்.

உங்களின் சம்பள உயர்விற்காக மற்றவர்கள் பேசும் அளவிற்கு நீங்கள் உழைத்திருந்தால் உங்களுக்கு இரட்டை சம்பளம் உறுதி.

சம்பள உயர்வை கையில் வாங்கியவுடன் சந்தோஷப்படுபவர்கள் அடுத்த நிமிடம் யாருடனாவது ஒப்பிட்டுப்பார்த்து கவலைப்பட ஆரம்பித்து விடுவார்கள். அதனால்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் சம்பளத்தை முழுவதும் ரகசியமாக்கிவிட்டது.

உங்களுக்கு இரட்டை சம்பளம் வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் எப்போதும் மற்றவர்களின் திறமையோடு ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். சம்பளத்தோடு ஒப்பிட்டு போட்டி போடாதீர்கள். உங்கள் திறமை வளர வளர உங்கள் சம்பளமும் உயரும்.

நிறுவனத்தில் வேலை செய்யும் நேரத்தினை கணக்கு பார்த்து வேலை செய்யாதீர்கள் அப்படி செய்தால் நிறுவனமும் உங்கள் சம்பளத்தில் கணக்கு பார்க்கும்.

மற்றவர்களோடு ஒப்பிடும்போது உங்களுக்கு குறைவாக இருந்தால் சம்பள உயர்விற்காக பேசும் போது ஒருபோதும் கோபமாக அல்லது ஆதங்கமாக பேசாதீர்கள். மற்றவர்களை ஒப்பிட்டும் கேட்காதீர்கள்.

“இருபதாயிரம் சம்பளம் வாங்குமளவிற்கு நான் உழைத்து உயர வேண்டும் என்று நினைக்கிறேன். இன்னும் நான் கூடுதல் பணிகள் செய்யத்தயாராக இருக்கிறேன். இன்னும் என்னை என்ன மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது போல கேளுங்கள்.

இப்படி கேட்டால், தன்மையாக நீங்கள் நடந்து கொண்ட விதத்திலேயே நீங்கள் கேட்டது கிடைக்கும்.

நிறுவனம் எதிர்பார்க்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டு சம்பள உயர்விற்குத் தயாராகுங்கள். உங்கள் சம்பளம் இரட்டைச் சம்பளமாக வாழ்த்துக்கள்.

  1. சுரேஷ் குமார்

    Good morning ,

    Really super information , i change my attitude i will buy double salary

    Thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *