ஹலோ! ஹலோ! தலைப்பைப் பார்த்ததுமே, “உங்களுக்கு வேலை உண்டா”ன்னு கேக்கறதா தப்பா எடுத்துக்காதீங்க! உத்தியோகம், அப்படீங்கறது நாம பார்க்கறவேலைதான் ஒத்துக்கறேன். ஆனா, நம் வேலையை காலையிலேருந்து மாலை வரை ஒரே மாதிரி செய்துகிட்டே போனா, உற்சாகமாகவும் இருக்காது. புதுசா எதையும் செய்யவும் முடியாது.
அதனாலதான் பல வெற்றியாளர்கள், தங்கள் வேலைகளிலே புதிய புதிய உத்திகளைப் புகுத்திகிட்டே இருப்பாங்க. புதிய உத்திகளைப் புகுத்தறயோகம் உங்களுக்கு இருந்ததுன்னா, உங்களுக்கு ‘உத்தி-யோகம்’ இருக்கறதா அர்த்தம்.
உங்கள் முதலீடு இலக்கு, உற்பத்தித் திறன் எல்லாவற்றையுமே வெற்றிகரமா ஆக்கறது புதிய புதிய யோசனைகள்தான். போட்டியாளர் ஒரு புதுமை செய்தா, அதை முறியடிக்கிற மாதிரி புதிய யோசனை, புதிய உத்தி நமக்கு வரணும். அது வேலையை இன்னும் சுவாரசியமா ஆக்கறதோட, ஆதாயத்தையும் கொடுக்கும்.
நீங்க உங்க அலுவலகத்திலேயோ உற்பத்தி இடத்திலேயோ, ஒரே மாதிரியான பணிகளை வைச்சிருந்தா, பணியாளர்களுக்கு பெரிய பரபரப்பு இருக்காது. ஆனா, உத்திகள் புதுசு புதுசா உருவாகிறபோது பணியாளர்களும் உற்சாகமா தங்களை நிறுவன வளர்ச்சிக்கு ஈடுபடுத்திக்க முடியும்.
அப்புறமென்ன? அடிக்கடி புதுப்புது உத்திகளைப் புகுத்துங்க! வளர்ச்சி ‘விறுவிறு’ன்னு வரும் பாருங்க!
Leave a Reply