– மரபின் மைந்தன் ம. முத்தையா
ஆகஸ்ட் 15ற்கு ஆயத்தமாகிறது நாடு. கொடியேற்றங்களும் கோலாகலங்களுமாய் அமர்க்களப்படும். அறிக்கைகள், உறுதி மொழிகளுக்குப் பஞ்சமிராது. அரசாங்கம் ஒருபுறம் கொண்டாட்டங்களில் மூழ்கிக் கிடக்க, சராசரி இந்தியன் தொலைக்காட்சி முன்னர் பக்திப்பரவசமாய்த் தவமிருப்பான்.
முன்னொரு காலத்தில் மக்களெல்லாம் கூடி முயன்று பெற்றதுதான் சுதந்திரம். அந்த சுதந்திரத் திருநாள், சராசரிக் குடிமகனுக்கு சம்பந்தமில்லாத சம்பவம்போல் நடைபெறுவது வருத்தத்திற்குரியது. குறைந்த பட்சம், குடும்பத்துக்குள்ளாவது தேச விடுதலைப் போர் பற்றிக் குழந்தைகளுக்குச் சொல்லவும், இந்தியாவின் எதிர்காலம் பற்றிக் கலந்து பேசவுமாவது விடுதலைத்திருநாளில் முயல வேண்டும்.
வெறும் விடுமுறைக்கல்ல விடுதலை!
Leave a Reply