சிந்தனை செய் மனமே…

– இரா. கோபிநாத்

தொடர் 3

“பகல் கனவு காணவேண்டாம்” என்றது அந்தக் காலம். பகலோ இரவோ கனவு காணுங்கள் என்பதுதான் இன்றைய நடைமுறை. என்னைப் பொருத்தவரையில் கனவுகள் இல்லாத மனிதன் ஒரு பிணம்தான். வாழ்க்கைக்கு உயிரோட்டம் தருவதே கனவுகள்தான். ஒரு மனிதர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்று உறுதிப்படுத்த மருத்துவர், நாடிபிடித்துப் பார்ப்பார், இதயத் துடிப்பைச் சோதித்துப் பார்த்துத் தனது முடிவைச் சொல்வார்.

என்னிடம் அழைத்து வந்தால், நான் அவருக்கு கனவுகள் இருக்கின்றனவா என்றுக் கேட்டுத்தான் முடிவெடுப்பேன். கனவு இருந்தால் அவர் உயிரோடிருக்கிறார், இல்லையென்றால் அவர் போய்ச் சேர்ந்துவிட்டார் என்பேன். ஆண்டவன் கனவுகாணும் இந்த அற்புத ஆற்றலை மனிதனுக்கு வழங்கியிருப்பதே மனித இனத்தினை மேம்படுத்த வேண்டும் என்ற ஆசையில்தான்.

ஐம்புலன்கள் மூலமாக நமது மனதிற்குத் தகவல்கள் வந்தடைகின்றன என்பது குறித்து முன்பு பார்த்தோம். இதைத் தவிர வேறு ஒரு வழியும் இருக்கின்றது. அதுதான் “கற்பனை” அல்லது “கனவு” என்னும் வழி. இதன் மூலமாகவும் மனதிற்குத் தகவல்கள் வந்தடைகின்றன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், நம் மனம் கற்பனையில் வரும் தகவல்களுக்கும், ஐம்புலன்கள் வழியாகக் கிடைக்கும் தகவல்களுக்கும் வித்தியாசம் பாராட்டாது. இதையும் மெய்யான தகவல் என்று பாவித்து, பதப்படுத்தி எண்ணங்களாக மாற்றித் தரும்.

நண்பர் ஒருவர் பாசமலர் சினிமாப் படம் பார்த்துவிட்டு வந்தார். அவர் கண்கள் சிவந்து வீங்கியிருந்தன. படம் பார்த்து அங்கேயே அழுதிருக்கிறார். மூன்றாம் முறையாக அதே படத்தைப் பார்க்கிறாராம். நான் கேட்டேன், “அய்யா உங்களுக்கு அந்தப் படத்தின் முடிவு தெரியும்தானே, பின்பு மூன்றாம் முறையாகப் பார்க்கும்போதும் ஏன் அழுகிறீர்கள்?” என்று. அவர் சொன்னார், “ஐயா எனக்கு அந்தக் கதையின் முடிவு தெரியும்தான். ஆனாலும், என்ன செய்வது, அந்த சோகக் காட்சிகள் வரும்போது, என்னையும் அறியாது அழுது விடுகிறேன்” என்று.

பாருங்கள், அது வெள்ளித்திரையில் தோன்றும் காட்சி. அது உண்மையானது அல்ல என்று தெரிந்திருந்தும் கூட நமது மனம் அந்தத் தகவலைப் புறக்கணிப்பதில்லை. (அந்தப் படத்தில் சிவாஜி மற்றும் சாவித்திரி அவர்களின் நடிப்பு யார் மனதையும் உருக்கிவிடும் என்பது உண்மைதான் என்றாலும்) வெள்ளித்திரையில் தோன்றும் காட்சிக்கே இப்படியென்றால், மனத்திரையில் தோன்றும் காட்சிக்கு எவ்வளவு பாதிப்பு இருக்கும்?

மனத்திரையில் தோன்றும் இந்த காட்சிகள் நமது கற்பனையால் உருவாக்கப்படுகின்றன. இதனைக் கனவு என்று கூடச் சொல்வார்கள். இந்தக் கனவுகள்தான் நமது வாழ்க்கையில் முன்னேற்றத் திற்கான ஆரம்பப் படிகளாக அமைகின்றன. இந்தக் கனவுகள் பல பெரிய மனிதர்களின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்திருக்கின்றன. இவர்களின் சுயசரிதைகள் இந்த உண்மையைத் தெரியப் படுத்துகின்றன. அதனால்தான் கனவு காண வேண்டும் என்று ஊக்கப்படுத்துகிறேன்.

தகவல்கள் நமது மனதில் மூலப் பொருள்களாக நுழைந்து எண்ணங்களாக உருவெடுக்கின்றன. அதே வகையில், கற்பனையில் உருவாகும் விஷயங்கள் கூடத் தகவல்களாக மனதை வந்தடைகிறன.

ஐம்புலன்கள் மூலமாக வரும் தகவல்களைக் கட்டுப்படுத்துவது குறித்து முன்பு பார்த்தோம். இப்படித் தகவல்களைக் கட்டுப்படுத்தினால், எண்ணங்களைக் கட்டுப்படுத்தலாம். அதன் வழியாக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தலாம். விளைவுகளை நமக்குச் சாதகமாக அமைத்துக் கொள்ளலாம் என்று கண்டறிந்தோம்.

இதுபோலத்தான் கனவில் வரும் தகவல்களும். அதனால்தான் நல்ல கனவுகள் காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். நான் இங்கு குறிப்பிடுவது, பகலில் நாம் காணும் கனவுகள். கண்களைத் திறந்துகொண்டு, எதிர்காலத்தைப் பற்றி நாம் ஏற்படுத்திக் கொள்ளும் கற்பனைகள். சுயமாகத் தயாரிக்கப்பட்ட கனவுகள். பகல் கனவு காணுங்கள்; அது கண்டிப்பாக நிறைவேறும்.
“பகல் கனவு காணவேண்டாம்” என்றது அந்தக் காலம். பகலோ இரவோ கனவு காணுங்கள் என்பதுதான் இன்றைய நடைமுறை. என்னைப் பொருத்தவரையில் கனவுகள் இல்லாத மனிதன் ஒரு பிணம்தான். வாழ்க்கைக்கு உயிரோட்டம் தருவதே கனவுகள்தான். ஒரு மனிதர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்று உறுதிப்படுத்த மருத்துவர், நாடி பிடித்துப் பார்ப்பார், இதயத் துடிப்பைச் சோதித்துப் பார்த்துத் தனது முடிவைச் சொல்வார். என்னிடம் அழைத்து வந்தால், நான் அவருக்கு கனவுகள் இருக்கின்றனவா என்று கேட்டுத்தான் முடிவெடுப்பேன். கனவு இருந்தால் அவர் உயிரோடிருக்கிறார், இல்லையென்றால் அவர் போய்ச் சேர்ந்துவிட்டார் என்பேன். அவரைத் தூக்கிச் செல்ல நான்கு பேருக்காகத்தான் காத்திருக்கிறார். ஆண்டவன் கனவு காணும் இந்த அற்புத ஆற்றலை மனிதனுக்கு வழங்கியிருப்பதே மனித இனத்தினை மேம்படுத்த வேண்டும் என்ற ஆசையில்தான் என்பது எனது கருத்து.

பலர் தங்களின் வாழ்க்கையில் பெரும் பகுதியைத் தொலைக்காட்சிப் பெட்டி முன்பே கழித்து விடுகிறார்கள். இதனால் நிஜ வாழ்க்கையில் பெரிய சாதனைகள் ஏதும் செய்யக்கூடிய வாய்ப்பை இழந்து விடுகிறார்கள்.ஆண்டவன் நம்முள்ளேயே ஒரு தொலைக் காட்சிப் பெட்டி வைத்திருக்கிறான். நமது மனம் என்னும் திரை. நமது கற்பனை சக்தியால் இதில் நாம் எதை வேண்டுமானாலும் பார்க்கலாம். பயயில் அவர்கள் காட்டுவதை மாத்திரம்தான் பார்க்க முடியும். நமது மனத்திரையில் நாம் எதைப் பார்க்க விரும்புகிறோமோ அதைப் பார்க்கமுடியும். பயயில் ஒரு குறிப்பிட்ட ஸ்ரீட்ஹய்ய்ங்ப்ள் தான் இருக்கும், ஆனால் மனதிற்கு இப்படியொரு எல்லையெல்லாம் இல்லை, அளவுக்கடங்காத ஸ்ரீட்ஹய்ய்ங்ப்ள் இருக்கின்றன.

பயயில் வரும் காட்சிகளுக்கு இயக்குனர், கதாசிரியர், இசையமைப்பாளர் என்று பலர் இருப்பர். இவர்கள் விருப்பப்படிதான் கதை நகரும். கதாநாயகன் நடிக்க வேண்டும், இப்படி நிகழ்வுகள் அமையும். ஆனால், நம் மனக்காட்சிக்கு, நாம்தான் இயக்குனர், கதாசிரியர் எல்லாமே. நமது விருப்பப்படி நிகழ்வுகளை அமைத்துக் கொள்ளலாம். இங்கு மின்சாரத் தடையில்லை, கோளாறுகள் இல்லை, தடங்கலுக்கு வருந்தத் தேவையில்ல

பயயில் காட்சிகளின் ஆரம்பத்தில் “இந்தக் கதையில் வரும் பாத்திரங்கள் கற்பனையானவை, நிஜத்தில் இப்படி யாரும் இருந்தாலும் அது ஒரு ஏதேச்சைதான்” என்றெல்லாம் அறிவிப்பார்கள். நமது மனக்காட்சியில் அப்படியெல்லாம் செய்யத் தேவையில்லை. இது உண்மைக் கதை, இதில் வரும் பாத்திரங்கள் யாவும் உண்மையானவைதான் என்று அறிவித்துவிட்டுப் பிறகு கனவு காணலாம்.

பகல் கனவுகள் நிஜமாகும். பகல் கனவுகள் தான் நிஜமாகும். இந்தக் கனவுகளில் வரும் தகவல்கள் நமது மனதை மீண்டும் மீண்டும் அடைந்து, நமக்கு நல்ல எண்ணங்களைத் தயார் செய்துகொடுக்கும். அதன் விளைவாக நமது முயற்சியில் பெரிய மாறுதல் ஏற்படும். வெற்றி வாய்ப்புகள் பெருகும்.

நீங்கள் துணிகரமான கனவுகள் காணுங்கள். உங்கள் கனவுகள் பிரம்மாண்டமானவைகளாக அமையட்டும். நீங்கள் அதில் கதாநாயகனாக/ கதாநாயகியாக பல சாதனைகளை நடத்துங்கள். அனைவரும் உங்களைப் போற்றும் அந்தக் காட்சியைக் கண்டு மகிழுங்கள். பாராட்டுக்களைக் கேட்டு சந்தோஷப்படுங்கள்.

கனவுகளுக்கு என்று ஒரு இலக்கணம் இருக்கின்றது. அதைச் சரிவரக் கடைப்பிடித்தால் தான் அவை நமது வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும். இல்லையென்றால் ஏமாற்றத்தைத்தான் கொண்டுவரும். முக்கியமாகக் கனவுகளில் 3 விதிமுறைகளை அனுசரிக்கவேண்டும்.

1. கனவுகள் அதாவது கற்பனைக் காட்சி துல்லியமானதாக இருக்கவேண்டும்.2. மீண்டும் மீண்டும் அந்தக் காட்சியை மனதில் தருவித்து கண்டு களிக்கவேண்டும்.3. அந்தக் காட்சியோடு உணர்ச்சிபூர்வமாகக் கலந்துவிட வேண்டும்.

காட்சி துல்லியமாக அமையாவிட்டால், மனம் அந்தத் தகவலை நிராகரித்துவிடும், ஏற்றுக் கொள்ளாது. எப்படி சரியாகக் குறிபார்க்காமல் எடுத்த புகைப்படம், தெளிவில்லாமல் அமைந்து விடுகிறதோ அது போலத்தான் இதுவும்.

நாம் ஒரு வெற்றியைச் சாதிக்க விரும்பினால் அந்தச் சாதனைக்கான அளவுகோலை துல்லியமாக நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். பிறகு அந்த அளவைச் சாதித்துவிட்டதாகக் கனவு காண வேண்டும். பெரிய, மிகப்பெரிய, நிறைய, ஆகக்குறைந்த என்பது போன்ற வார்த்தைகள் தோராயமானவை, துல்லியமானவை அல்ல. இவற்றை மனம் ஒரு தகவலாக உணராது. உதாரணத்திற்கு, ஒரு மாணவன் சிறந்த மதிப்பெண் பெறவேண்டும் என்றால் ஒரு துல்லியமான இலக்கை வைத்துக்கொள்ள வேண்டும். 100% எடுக்க வேண்டும் அல்லது 90%க்கும் அதிகமாகப் பெறவேண்டும் என்று நிர்ணயம் செய்தால் அந்தத் தகவலை மனம் ஏற்றுக்கொள்ளும். அதுவே நிறைய மதிப்பெண் பெறவேண்டும் என்று நிர்ணயம் செய்தால், அந்தத் தகவலை மனம் பொருட்படுத்தாது.

இன்ன சாதனை செய்யவேண்டும் என்று தீர்மானித்த பிறகு, அதைச் செய்து முடித்துவிட்ட நிலையில் ஏற்படும் சந்தோஷ நிலையை மனதில் கற்பனை செய்து பார்க்கும்போது மனம் அந்தத் தகவலைப் பதப்படுத்தி வெற்றி எண்ணத்தைத் தயார் செய்து தருகிறது. ஆனால், அந்த எண்ணம் தீவிரம் அடையவேண்டும் என்றால், ஒருமுறை கற்பனை செய்தால் போதாது, மீண்டும் மீண்டும் அந்த வெற்றிச் சித்திரத்தை மனதில் திரையிட்டுப் பார்க்க வேண்டும்.

அடிக்கடி இந்தக் காட்சி நமது மனத் திரையில் ஓடும்போது, ‘வெற்றி’ தகவல் மீண்டும் மீண்டும் மனதில் திணிக்கப்படுகிறது. அடிக்கடி இப்படி ஒரு கனவு நிலைக்குச் சென்றுவிட வேண்டும். நிஜ வாழ்க்கையில் வெற்றியைச் சந்திக்கும் முன்பே அதைச் சாதித்துவிட்ட மனநிலையை அடைந்துவிட வேண்டும்.

அப்படி ஒரு நிலையை அடைவதற்கு உணர்ச்சிகள் கற்பனையோடு பிணைந்திருப்பது அவசியம். உணர்ச்சிப்பூர்வமாக அந்தக் கனவுக் காட்சியில் லயித்துவிடும்போது இந்த எண்ணம் மிக ஆழமாகப் பதிந்துவிடுகிறது. இடையில் ஏற்படும் சிக்கல்களால் இந்த ஆழமான எண்ணத்தை அசைத்துக்கூடப் பார்க்க முடியாது. மேலோட்டமான எண்ணங்களால் சிக்கல்களை எதிர்க்க முடியாது. பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்தித்துத் தாக்குபிடிக்க முடியாது. அதனால் கனவோடு உணர்ச்சிபூர்வமாக லயித்துவிட வேண்டும்.

ஆண்டாள் மனிதப் பெண்ணாகப் பிறந்து, கடவுளான கண்ணணையே கணவனாக அடைய வேண்டும் என்று கனவு கண்டாள். உலகத்தவர் அனைவரும் இது ஈடேறாது என்று எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவள் அதைப் பொருட் படுத்தவில்லை. அந்தக் கனவிலேயே லயித்திருந்தாள். கண்ணணுக்கும் தனக்கும் நடக்கவிருக்கும் திருமணக் கோலாகலத்தைத் தனது கற்பனையில் துல்லியமாகக் கண்டுகளிக்கிறாள்.

“வாரணமாயிரம்…” என்று துவங்கி திருமண வைபவத்தில் தனக்கும் கண்ணணுக்கும் நடக்கும் (நடக்கவிருக்கும்) ஒவ்வொரு சடங்கையும் கற்பனையில் விவரித்துப் பார்க்கிறாள். “மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத, முத்துடைத் தாமங்கள் நிறைந் தாழ்ந்த பந்தர்க் கீழ் மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்”.
மனித வாழ்க்கையில் நடக்கவே வாய்ப்பில்லாத அந்தத் தெய்வத் திருமணத்தைக் கூடத் தனது கனவினால் சாதித்துக் காட்டினாள் ஆண்டாள். இறைவன் அவளது பக்திக்குத் தலைவணங்கி அவளை ஏற்றுக்கொண்டார். அவள் கனவில் கண்ட அத்தனை நிகழ்வுகளும் நினைவிலும் நடந்தேறின. துல்லியமாக, மீண்டும் மீண்டும், உணர்ச்சிபூர்வமாக அவள் கண்ட கனவு வெற்றி பெற்றது.

“கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்” என்றார் மகாகவி பாரதி. கிட்டத்தட்ட அவரது கனவுகள் அனைத்துமே இன்று நிஜமாகிவிட்டன.

எப்படி நமது மனம் என்னும் தொழிற்சாலை ஐம்புலங்களின் வாயிலாக வரும் தகவல்களை உள்வாங்கி, பதப்படுத்தி எண்ணங்ளைத் தயார் செய்கிறதோ அதேபோலக் கற்பனையில் வரும் நிகழ்வுகளையும் உள்வாங்கி அதிலிருந்தும் எண்ணங்களை உற்பத்தி செய்கிறது. இந்த எண்ணங்களால் நமது நடவடிக்கைகள் திறம்படுகின்றன, வெற்றியடைகிறோம்.

இதுவரை நாம் சேர்த்த முத்துக்கள்:

முதல் முத்து: நமது முயற்சிகள் வெற்றியடைய முக்கிய காரணம், நமது மனநிலைதான்.

இரண்டாம் முத்து: நாம் உள்வாங்கும் தகவல்களைக் கட்டுப்படுத்தினால், நமது எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியும்.

மூன்றாம் முத்து: கனவு காணுங்கள், கனவுகள் நமது மனதில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால், இலக்கணத்துடன் (துல்லியமாக, மீண்டும் மீண்டும் உணர்ச்சிபூர்வமாக) அதனை அமைத்துக்கொள்ளுங்கள்.

மனப்பான்மை எப்படி உருவாகிறது? வெற்றி மனப்பான்மையை நாம் சுயமாக தயார் செய்யமுடியுமா? அல்லது ஆண்டவனின் படைப்புத்தானா? இவை குறித்து வரும் இதழ்களில் பார்ப்போம். சென்ற இதழின் முடிவில் கொடுத்த பயிற்சியைத் தொடர்ந்து செய்து வருகிறீர்கள் என்று நம்புகிறேன். இந்த இதழின் முடிவிலும் ஒரு பயிற்சியை விவரித்திருக்கிறேன், உங்களது தேவைக்கேற்ப இதனைப் பயின்று பாருங்கள். மேலும் இந்த பயிற்சிகள் குறித்து ஏதேனும் விவரங்கள் தேவைப்பட்டால் என்னுடன், எந்தத் தயக்கமும் இல்லாமல், தொடர்பு கொள்ளுங்கள்.

பயிற்சி:

பெற்றோர்களும், ஆசிரியர்களும் பிள்ளைகளைக் கனவு காண ஊக்கப்படுத்திப் பாருங்கள். மருத்துவராக ஆக விழையும் பிள்ளைகளை, அது குறித்துக் கற்பனை செய்யப் பழக்குங்கள். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவர்கள் நடந்துகொள்ளும் விதத்தை அவர்கள் கண்டு ரசி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *