மகிழ்ச்சியை வெல்வது எப்படி?

– எ. வெங்கட்ராமன்

எனக்கு இருபத்திரெண்டு வயதானபோது, சீர்காழியில் என் திருமணம் நடைபெற்றது. பேராசிரியர் எம்.எஸ். துரைசாமி ஐயர் எனக்கு ஒரு அருமையான ஆங்கில நூலைப் பரிசளித்தார். அதன் பெயர் இஞசணமஉநப ஞஊ ஏஅடடஐசஉநந. பேரறிஞரும், தத்துவ ஞானியுமாகிய பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் பிரபு எழுதிய சிறந்த நூல் அது!


அதில் அவர் சொல்கிறார் : “ஓரளவு பணம்; ஓரளவு புத்திசாலித்தனம்; நல்ல ஆரோக்கியம்; மனதுக்குப் பிடித்த வேலை; நல்லதொரு பொழுது போக்கு இவை இருந்தால் எல்லோருமே மகிழ்ச்சியுடன் வாழலாம்” என்று.

ரஸ்ஸல் பிரபு நாத்திகர் ஆனபடியால் “தெய்வபக்தி”யைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அவருடைய கோட்பாட்டின்படியே நான் இதுவரையில் வாழ்ந்து வந்தேன்.

வாழ்க்கை என்பது மேடு, பள்ளங்கள் நிறைந்தது. இன்பத்தை நாம் அனுபவிக்க வேண்டுமானால், துயரம், துக்கம், துன்பம் இவற்றை விலையாகக் கொடுக்க வேண்டும்.
நம்மிடம் எது இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் எப்படிப் படைக்கப்பட்டிருக்கிறோமோ அதையும் நிறைவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கை ஓட்டத்தை அதன் போக்கில் ஏற்றுக்கொண்டு வாழ்வில் பெரும்பகுதியை மகிழ்வுடன் கழிக்க வேண்டும்.

வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாகவே இருக்க யாராலும் முடியாது. சந்தோஷத்தை நாம் பாடுபட்டுத்தான் சம்பாதிக்க முடியும். அதற்காக நாம் தீவிர முனைப்புடன் செயல்பட வேண்டும். ரசனை உணர்வுடன் வாழ்வாகிய மதுவைச் சிறிது சிறிதாக உறிஞ்சவேண்டும்.

வாழ்வில் பெரும்பகுதியும் நிறைவுடன் இருக்க அறிஞர் வெண்டி மக்ரீடி கூறும் வழிமுறைகள் பின்வருமாறு:

1) சிந்தனை முறையை மாற்று:
ஒவ்வொரு நாளையும், அதுவே வாழ்வின் கடைசி நாள் என்பது போல் எண்ணிக் கொண்டு வாழ்ந்து பார்.

கொடிய நோய்வாய்ப்பட்டு மீண்டவர்கள்; பயங்கரமான விபத்திலிருந்து தப்பியவர்கள்; கோரமான ஒரு நிகழ்ச்சியை நேரில் கண்டவர்கள்; உயிருக்கு மேலாக நேசித்தவர்களை மரணதேவனிடம் இழந்தவர்கள், இவர்கள் அனைவருமே வாழ்க்கையை முற்றிலும் புதிய கோணத்திலிருந்து பார்க்கிறார்கள். நாளைக்கு என்று எதையும் ஒத்திப் போடுவதில்லை இவர்கள். இன்றே, இங்கேயே, இப்பொழுதே – என்பது அவர்கள் கொள்கை முழக்கம்!

2) நாட்குறிப்பு எழுதுங்கள்:

அன்றாடம் நடைபெறும் நல்ல விஷயங்களை அதில் இரவு தோறும் எழுதுங்கள் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கத் தேவையில்லை. மூளை என்பது குப்பைத் தொட்டி அல்ல! நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தினால் பிரச்னைகள் சில தாமாகவே தீர்கின்றன. மனத்தின் அடித்தளத்தில் உறுத்தும் தீய நினைவுகள் தீய்ந்து போகின்றன. எழுதிப் பாருங்கள்-விரைவில் பலன் தெரியும்!

3) விஷயங்களுக்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுத்தல்:

உங்களைப் பற்றி மற்றவர்கள் எவ்விதமாக நினைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? அன்புள்ள நல்ல மனிதர் என்றுதானே? அப்படியானால் யாரையும், எதற்காகவும் குறை கூறாதீர்கள். மற்றவர்களின் சிறிய குறைபாடுகளைப் பெரிதுபடுத்தாதீர்கள். பிறருடைய கருத்துக்களுக்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுங்கள். யாரையும் உதாசீனப்படுத்தாதீர்கள்.

4) வாழ்க்கையின் போக்கில் ஏற்படும் சிறிய தடங்கல்களுக்காக எரிச்சல் அடைந்து, கோபத்துடன் வார்த்தைகளைக் கொட்டி, உங்கள் சக்தியை வீணாக்க வேண்டாம்.பிறருடைய அசட்டுத்தனத்தினால் உங்கள் காரியங்களில் தடை அல்லது தாமதம் ஏற்பட்டால், மெல்லிய புன்னகையுடன் அதைச் சமாளியுங்கள்.

குறிப்பிட்ட ரயிலையோ, பஸ்சையோ தவறவிட்டால் எரிமலையாகி வெடிக்காதீர்கள்.
அடுத்த வண்டிக்காகக் காத்திருக்கும் போது காபியை அல்லது தேநீரைச் சுவைத்து நிதானமாகப் பருகுங்கள். உயர்ந்த நூல்களை மனம் ஒன்றிப் படியுங்கள்.

5) உங்களுக்கு விருப்பம் இல்லாத, அல்லது கஷ்டமான வேலைகளை நாளைக்கென்று தள்ளிப்போடாமல், இப்போதே செய்யுங்கள். ஒத்திப்போடும் பழக்கம் நமது சக்தியை உறிஞ்சுகிறது. மனத்தில் சுமை ஏறுகிறது. அதைச் செய்ய வேண்டுமே என்று கவலைப்படுவதை விட்டுவிட்டு உடனே அந்த வேலையைச் செய்யத் துவங்குங்கள். மனம் இலேசாவதையும், உடல் வலிமையடைவதையும் உடனடியாக உணரலாம்.

6) மாமூலான வாழ்க்கையைத் திடீரென்று மாற்றுங்கள்.

தினமும் செய்த வேலையையே திரும்பத் திரும்பச் செய்யும்போது நம்மையறியாமல் சலிப்பும், வெறுப்பும், அலுப்பும் ஏற்படுவது இயல்பே. வாழ்வில் உற்சாகம் உண்டாக வேண்டுமானால், புதிய விஷயங்களில் அக்கறை காட்டவேண்டும். அலுவலகத்துக்கு வழக்கமாகச் செல்லும் பாதையை மாற்றிப் பாருங்கள். புதிய மனிதர்களுடன் வலியச் சென்று பேசுங்கள். புதிய ஓட்டலுக்குச் செல்லுங்கள். புதிய உணவு வகைகளை ருசி பாருங்கள். புதிய நூல்களைப் படியுங்கள். புதிய இசை நிகழ்ச்சிகளைக் கேளுங்கள். புதிய திரைப்படங்களைப் பாருங்கள். புதிய இடங்களுக்குச் சென்று திரும்புங்கள்.

7) மிக மிக முக்கியமான விஷயம் – அண்டை அயலார்களைப் பார்த்துக் காப்பி அடிக்காதீர்கள். அவர்களுக்குப் பெரிய பங்களா இருக்கிறதா? இருக்கட்டுமே! பெரிய, இறக்குமதி செய்யப்பட்ட கப்பல் போன்ற கார் இருக்கிறதா? இருக்கட்டுமே! கோடிக்கணக்கில் பாங்கில் அவர்களுக்குப் பணம் இருக்கிறதா? இருக்கட்டுமே! செல்வம் எவ்வளவு இருக்கிறதோ, அதற்கு நேர்விகிதத்தில் பிரச்சினைகளும் இருக்கும். நமக்கு உள்ளது போதும். வேண்டியது மனநிம்மதிதான். பிறரைப் பார்த்துப் பொறாமைப்படும்போது, நாம்தான் நமது இறக்கைகளை எரித்துக் கொள்வோம்.

8) மாதம் ஒருமுறை உங்கள் அலமாரிகளையும், பீரோக்களையும், பெட்டிகளையும் சுத்தப்படுத்துங்கள். பழைய உடைகளையும், பழைய பாத்திரங்களையும், பழைய தட்டுமுட்டு சாமான்களையும், பழைய புத்தகங்களையும் தகுந்த மனிதர்களுக்குத் தருமம் செய்யுங்கள். இதனால் மனம் நிறைவு பெறுகிறது. உங்கள் வீடும் தூய்மைஅடைகிறது. வீட்டு வேலையும் குறைகிறது. சீன அழகியல் கலையான பெங் ஷ?91;ி (ஊஉசஎ நஏமஐ) உங்கள் வீட்டை அலங்கரிக்கும்.

9) பிறருடைய எல்லா வேண்டுகோள்களுக்கும் சரி என்று தலைஆட்டாதீர்கள். “முடியாது, இல்லை, வேண்டாம்” என்று சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள். நமக்கு ஏற்கனவே ஏகப்பட்ட பணிகள் காத்துக்கிடக்கின்றன. நம்முடைய நியாயமான கடமைகளைச் செய்துமுடிக்கவே நமக்கு நேரம் போதுமானதாக இல்லை. எனவே பிறர் சுயநலத்துடன் நம்மைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும்போது நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் நாம் மன உறுதியுடன் பிறருடைய வேண்டுகோள்களை மறுக்கும்போது, அவர் மதிப்பில் நாம் உயருவோம். தலைஆட்டிப் பொம்மைகளை யாருமே மதிக்கமாட்டார்கள்!

10) எப்போது பார்த்தாலும் வேலை, வேலை என்று பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அலையாதீர்கள். குடும்பத்தினரிடம் – குறிப்பாக உங்கள் மனைவி, மக்களிடம் அன்பும், அக்கறையும் செலுத்துங்கள். அவர்களை பேசவிட்டுக் கவனமாகக் கேளுங்கள். அவர்களது பிரச்னைகளைத் தெரிந்து கொண்டு, முடிந்த வரையில் உதவி செய்யுங்கள். தனது குடும்பத்தைப் புறக்கணித்துவிட்டு எவரும் மனநிம்மதியுடன் இருக்க முடியாதென்பதை உணருங்கள்.

11) உங்களது நண்பர்களைச் சந்திக்கும்போது, வாய்ப்புக் கிடைக்கும் சமயங்களில் எல்லாம் அவர்ளை நீங்கள் விரும்புவதாகச் சொல்லுங்கள். அவர்களுடைய எந்தப் பண்பு அல்லது செயல் உங்களை மகிழ்வித்தது என்று குறிப்பிட்டுச் சொல்வது மிகவும் நல்லது.

12) உங்களுக்கு அறிமுகமானவர்களில் சிலர் உதவாக்கரைகளாகவும் இருக்கக்கூடும். அவர்களாக வரவழைத்துக் கொள்ளும் தேவையற்ற சிக்கல்களில் நீங்கள் மூக்கை நுழைக்காதீர்கள். சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் அறிமுகங்களிடமிருந்து கூடியவரை விலகியே இருங்கள். மோசமான நண்பனைவிடப் புத்திசாலியான பகைவனே தேவலாம்.

13) வாழ்க்கையின் ஓட்டத்தில் நாம் வெவ்வேறு ஊர்களுக்கு மாறிச் செல்ல நேரலாம். அப்போது பழைய நண்பர்களைப் பிரிய நேரிடும் அல்லவா? அவர்களை மறவாதீர்கள். மாதம் ஒருமுறை எழுதுங்கள். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது போனில் பேசுங்கள். பழைய உடைகள், பழைய காலணிகளைப் போல் பழைய நண்பர்களும் உள்ளத்துக்கு இதமானவர்கள்.

14) உங்கள் இல்லம் சிறியதாக இருந்தாலும் கூட அதை அழகாக வைத்திருங்கள் – சிறிய பூந்தொட்டிகளில் வண்ண மலர்களை வளருங்கள். பசுமையான கொடிகள் மாடியில் வளரட்டும் பசுமையும், வண்ணங்களும் உங்களது மனநிலையை உற்சாகப்படுத்தும்.

15) உங்கள் ஊர் கடற்கரை அருகில் இருந்தால், அடிக்கடி கடற்கரைக்குச் செல்லுங்கள். சில சமயம் தனியாகவும், சில சமயம் மனதுக்குப் பிடித்த தோழர்களுடனும், சில சமயம் குடும்பத்தினரோடும் அங்கே இரண்டு மணி நேரம் பொழுது போக்குவது நல்லது. கடல்காற்று உடலுக்கு நல்லது. கடல் அலைகள் தெய்வீகமான சிந்தனைகளைத் தூண்டும்.

16) சுயமாகப் படைப்புத் தொழிலில் ஈடுபடுங்கள். திறமை இருந்தால் சிற்பம் செதுக்குங்கள்; ஓவியம் வரையுங்கள்; கவிதை புனையுங்கள். திறமை இல்லாவிடில் சமையுங்கள் – தோட்ட வேலை செய்யுங்கள். எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், சோம்பேறித்தனமாகப் பகற்கனவு மட்டும் காணாதீர்கள்.

17) இரண்டு கிலோ மீட்டர் தூரம் வேகமாக நடவுங்கள். உடல் பயிற்சி உடலுக்கு மட்டும் அல்ல, உள்ளத்துக்கும் உறுதி தரும். நாளுக்கு நாள் உடல் வலிவடைவதையும், உள்ளம் உற்சாகம் அடைவதையும் உணர்வீர்கள்.

18) இரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை, இரண்டு வாரகாலம் வெளியூர்களுக்குச் சென்று வாருங்கள். மாதம் ஒருமுறை உறவினருடன் போனில் பேசுங்கள். முடியுமானால் விருந்துக்கு அழையுங்கள்.

19) புன்னகை செய்யுங்கள். தெரிந்தவரைச் சந்திக்கும்போது ஹலோ சொல்லுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *