ஒலிம்பிக் பந்தயங்களில் உலகம் காட்டும் ஈடுபாடும், வெற்றியாளர்களுக்கு அரசாங்கம் ஊக்குவிக்கும் விதமாகப் பரிசுகள் வழங்குவதும் புரிந்துகொள்ளக் கூடியதே.
பிந்த்ரா போன்ற பெரும் செல்வம் படைத்த வீரர்களுக்குப் பாராட்டுத் தெரிவிப்பதோடு நின்று கொள்ளலாம். அல்லது அன்பின் அடையாளமாய் ஒரு பரிசுத் தரலாம். மாநில – மத்திய அரசுகள் அறிவிக்கும் நிதியில் வெற்றி பெறும் வீரர் பெயரிலேயே ஓர் அறக்கட்டளை நிறுவி அதன் சார்பாக வளரும் வீரர்களுக்கு நிதியுதவி தரலாம்
ஒரு துறையில் இன்னும் பல சாதனையாளர்கள் உருவாக என்ன வழியென்று சிந்திப்பதும், அதற்காக மேலும் நிதி ஒதுக்கி நல்ல பயிற்சிகளைத் தருவதுமே திறமைகளை வளர்க்க உதவும்.
ஒரு வெற்றியைக் கொண்டாட மிகச் சிறந்த வழி பல வெற்றியாளர்களை உருவாக்குவதே.
Leave a Reply