தமிழகத்தில் உள்ள மின்வெட்டு பரவலாக ஏற்படுத்தியுள்ள அதிருப்தியும் அது தொடர்பாக எழும் விவாதங்களும் வளர்ந்து கொண்டே போகின்றன. இந்தியாவின் பல பகுதிகளில் இதே நிலைதான் என்று அரசு சொல்கிறது. தேசம் முழுவதும் மின்சாரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் சமச்சீரான விநியோகம் நிகழுமெனில் அதுவே நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.
மின்வெட்டின் அறிவிக்கப்பட்ட அறிவிக்கப்படாத நேரங்களில் தொழில்துறைக்கு ஏற்பட்டிருக்கும் பலகோடி ரூபாய் இழப்பும் அன்றாடப் பணிகளில் அலுவலகங்கலும் இல்லங்களும் காணும் சிரமமும் ஈடு செய்ய இயலாதவை.
எதிர்பார்த்த வளர்ச்சியைத் தேசம் எட்டவேண்டுமெனில், இந்நிலை மாறவேண்டும் அடிப்படைக் கட்டமைப்புகளில் சுணக்கம் இல்லாத தேசம்தான் வல்லரசாய் வளரும். ஏனெனில் இருளைக் கிழித்து வெளிவர வேண்டியது நிகழ்காலம் மட்டுமல்ல எதிர்காலமும்தான்.
Leave a Reply