பள்ளி சென்ற சிறுமி திரும்புமுன் வானத்தை மேகங்கள் சூழ்ந்தன. மழை வந்தால் மகள் பயப்படுவாளே என்றெண்ணிய அன்னை, குடையுடன் ஓடும் முன்னே மழை கொட்டத் துவங்கிவிட்டது. பாதி தூரம் சென்றதும் பள்ளிக்கூடப்பையோடு மகள் வருவது தெரிந்தது.
மின்னல் வெட்டும் போதெல்லாம் ஆகாயத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் அவள். காரணம் கேட்டபோது களங்கமில்லாமல் பதில் வந்தது. “கடவுள் எவ்வளவு ஆசையாய் என்னை போட்டோ எடுக்கிறார். நான் சிரிக்கத்தானே வேண்டும் அம்மா” என்று. இயற்கையை நேசிக்கும் இதயத்தில் அச்சம் தோன்ற வாய்ப்பேது?
Leave a Reply