-மரபின்மைந்தன் ம. முத்தையா
காகிதம் போன்றது நம் மனம்
காவியம் கூட எழுதலாம்
ஓவியத் தூரிகை நம் மனம்
உயிரோவியமே வரையலாம்
வெற்றுக் கரியைப் பூசவும்
வாய்ப்புகள் உண்டு தோழனே
சற்றே கவனம் சிதறினால்
செயலின் அடிப்படை மாறுமே!
கல்லில் செதுக்கிய சிற்பமாய்க்
காரியம் ஆற்றிடத் தோன்றினோம்
சொல்லில் செயலில் புதுமைகள்
செய்து காட்டிடப் போகிறோம்
ஒவ்வொரு நிமிடமும் வாய்ப்புகள்
ஒவ்வொரு விதத்தில் கிடைக்கலாம்
கவ்வி இழுத்திடத் தயங்கினால்
கைகளைவிட்டு நழுவலாம்
வெற்றிக்கு ஆசைகள் வளர்த்திடு
வேட்கையை தவமாய் மலர்த்திடு
உற்றிடும் உத்திகள் பழகிடு
உலகத்தில் உன்பெயர் பதித்திடு!
Leave a Reply