கூடுதல் வருமானம்

முதல் வருமானம் வருகிறபோதே கூடுதல் வருமானம் வருவதற்கு சில வழிமுறைகளைக் கையாள்வது அவசியம். மாலை நேரங்களில் வீட்டில் டியூஷன் எடுப்பதில் தொடங்கி, குடும்பத்தில் யாரோ ஒருவரைப் பார்த்துக் கொள்ளச் செய்யும் தொழில் வரை அதற்கு எத்தனையோ வழிமுறைகள் உண்டு. ஆனால், கூடுதல் வருமானம் பெற சில ஆதாரமான பொதுவிதிகள் உண்டு:

உங்கள் திறமைகள்:
தொழில் செய்வதிலோ டியூஷன் எடுப்பதிலோ உங்களுக்கிருக்கும் திறமை என்னவென்பதைக் கண்டறியுங்கள். அதனை ஆதாரமாகக் கொண்டே இதனை உங்களால் செய்ய முடியும்.

உங்கள் திறமைக்கு ஊரில் உள்ள தேவை:
உங்கள் திறமையை யார் பயன்படுத்துவார்கள் என்று பாருங்கள். உங்களுக்கு சங்கீதம் தெரியும் என்றால், ஓய்வு நேரங்களில் யாருக்கு சங்கீதம் சொல்த் தரலாம் என்றும், ஏதேனும் பொருளை உற்பத்தி செய்வதென்றால், அது யாருக்குத் தேவை என்றும் தெளிவாக நிர்ணயம் செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் ஒதுக்கக்கூடிய நேரம்:
உங்களுக்கு முதன்மை வருமானம் தரக்கூடிய உங்கள் அன்றாடப் பணிகளுக்காக ஒதுக்கியது போக, இந்தப் பணிக்கு நீங்கள் எவ்வளவு நேரம் ஒதுக்கவேண்டும் என்பதையும், எவ்வளவு நேரம் ஒதுக்க உங்களால் முடியும் என்பதையும் தெளிவாகத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

இடம் – பொருள் – ஏவல்:
உபரி வருமானத்துக்கான தொழிலை செய்கிற இடம் – அதற்கு வேண்டிய பொருள் – துணை நிற்கக் கூடியவைகள் எல்லாம் சரியாக இருந்தால்தான் பகுதி நேரத் தொழிலும் பயன்மிக்க முறையில் வளரும்.

தொழில் செய்யும் ஆசை:
பணப் பற்றாக் குறைக்காக மட்டுமில்லாமல், இந்த உபரித் தொழிலை உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செய்கிறபோது அது பொவாகவும் வளமாகவும் வளர்வதற்கு வாய்ப்புண்டு. எனவே ஆசையும் ஆர்வமும் உந்தித் தள்ளினால் மட்டுமே உபரித் தொழில் செய்யுங்கள்.

  1. தங்கவேல் மாணிக்கம்

    கூடுதல் வருமானத்தை மனிதர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவஸ்தை தான்.

Leave a Reply

Your email address will not be published.