வெற்றி நம் கைகளில்

பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் !

கதவு திறந்தால் கனவு பலிக்கும்! – கவியரசு கண்ணதாசனின் வரிகள் மிகச் சுலபமாக வெற்றி எப்படிப் பெறுவது என்று சொல்கிறது. முயற்சி, தொடர் பயிற்சி இரண்டும் கலந்து பயணிக்கையில் நம் ஆளுமைக் கதவுகள் திறக்கின்றன. ஆளுமைப் பண்பு உச்ச நிலைக்குச் செல்லும் போது வெற்றிக் கனவாக இல்லாது நனவாக மாறிவிடுகிறது.

ஒவ்வொரு பறவைக்கும் கடவுள் உணவு தருவார். கூட்டில் அல்ல, வெளியில். தேடுவது பறவையின் வேலை. தேடல் இருந்தால் போதும் சார்! வெற்றி நம் பக்கம்தான். நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒருபுறம் பட்ட வலிகள்! மறுபுறம் வெற்றிக்கான முயற்சிகள். பேசுவதற்கு முன்பு குழந்தை தன் தாயின் பேச்சை கருவாக இருந்தபோது கேட்டு, 1 1/2 வயது வரை கேட்டுக் கொண்டு இருந்து பின்தான் பேச ஆரம்பிக்கும். வாழ்வில் ஏற்படுகின்ற சில சறுக்கல்கள் கூட அப்படித்தான்! வெற்றிக்கான ஓடுதளம் அது!

நாம் போட்டுக் கொண்டிருக்கின்ற சில முகமூடிகளை எடுத்துவிட்டால் போதும், நம் சுயம் வெளி வந்துவிடும். இயல்பாக இருக்கப் பழகி, நம் ரசனைகளை மேம்படுத்தி சக மனிதரிடம் புன்னகையை பரிமாறிக் கொண்டு, நம் முயற்சிகளையும் பயிற்சிகளையும் தொடர்ந்து கொண்டிருந்தால் வெற்றி நம் கைகளில்தான்.

கற்பனைகளும் கனவுகளும் எப்பொழுதுமே தவறானவை அல்ல! அவை சரியாக இருக்கும் பட்சத்தில்! நம்மைச் சுற்றிலும் சிறந்த மனிதர்களும் வெற்றியாளர்களும் வாழ்வதாகவும் இருப்பதாகவும் ஒரு கற்பனை எண்ணத்தை வைத்துக் கொள்வோம். பின் என்ன? அந்த எண்ணமும் அவர்களின் ஆளுமையும் நமக்கான நட்பாக மாறிவிட வெற்றி என்கிற மணி மகுடம் நம்மிடம்தான்.

இமெயிலும் ஆன்லைனும் உலகை நம் விரல் நுனிக்குக் கொண்டு வந்துவிட்டது உண்மை. உயில்களை முத்திரைத் தாள்களில் பத்திரப் படுத்திய காலம் போய், இறப்புக்குப் பிறகு இமெயில் தங்கள் ரகசியப் பதிவுக்கான இணைய தளம் வந்துவிட்டது. இதோ! ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ச்ஹழ்ஹஜ்ஹஹ்ச்ண்ள்ட்.ஸ்ரீர்ம் என்கிற இணைய தளத்தின் சிறப்பம்சம் நம் குறிப்பைக் கொண்டு நம் வாழ்நாட்காலம் நிர்ணயிப்பது. நாட்களாக அல்ல நொடிகளாக! நாம் பார்த்துக் கொண்டிருக்கையிலே நாம் இருக்கப் போகும் நொடிகள் குறைந்து கொண்டு வருவது பிரமிப்பாகத்தான் இருக்கிறது. நொடிகள் குறைய குறைய நாம் செய்ய வேண்டிய, முடிக்க வேண்டிய செயல்களின் வேகத்தை அதிகரிக்க வேண்டும். அதற்கான பயிற்சி பட்டறை இது!

சென்னை செல்லும் இரயிலில் எல்லாப் பெட்டியும் தானே சென்னை செல்லும் என நினைத்து, எப்பொழுதுமே அரக்க பரக்க ஓடி முன்பதிவு இல்லாமல் சென்று, அக்கம் பக்கத்திலிருப்பவரைத் திட்டித் தீர்த்து வேர்த்து விறுவிறுத்து, பாதி வலிமையுடன் சென்னையில் நீங்கள் இறங்குகிறீர்கள் என்றால், அந்தப் பயணம் உடன்பாடானது அல்ல. திடீர்ப் பயணம் என்றால் பரவாயில்லை, முன்பே தெரிந்த பயணத்திற்கு முன்னேற்பாட்டுடன் செல்வதுதான் விவேகம். வாழ்வும் இப்படியே!

எண்ணிய முடிதல் வேண்டும்! வெற்றியே என எண்ணல் வேண்டும் இந்த வரிகளுக்கு உதாரணமாக 37 வயதில் மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஈழ். உமா வேல் பாண்டியனை (ங.ஆ.ஆ.ந., ஙஈ, ஊதஇஅ, டட்.ஈ.) சொல்லலாம். நடுத்தர குடும்பத்தில் பிறந்து, கோவை மருத்துவ கல்லூரியில் ங.ஆ.ஆ.ந. பயின்று, 11 தங்கப்பதக்கங்கள் குவித்து, பட்ட மேற்படிப்பில் 3 தங்கங்களை பெற்று, லண்டனில் ஊதஇஅ முடித்து, ‘கருவிலிருக்கும் குழந்தைக்கு மாரடைப்பு’ என்பது குறித்த தன் ஆய்வை அமெரிக்காவில் சமர்ப்பித்து வெற்றி பெற்றிருக்கும் ஈழ். உமாவின் எதிர்கால இலட்சியம், “இன்னும் நான்கு வருடங்களில் இந்தியா திரும்புவேன்! நிரந்தரமான மருத்துவத் தீர்வுகளை தருவேன். மாரடைப்புகள் குறைந்த இந்தியாவாக மாற்றுவது என் லட்சியம்” இது போதும் சார்! தன் இருத்தலை ஒரு மனிதன் காட்டுவதற்கு!

நாம் மிகச் சரியானவர்கள் என்பது வரை சரி! ஆனால் மற்றவர்கள் சரியில்லை என்று விமர்சனம் தேவை இல்லாத ஒன்று. நமக்காக நாம் வாழ்வோம்! சில நேரங்களில் நாம் எடுத்த காரியம் முடியாதது போல் ஒரு கானல் நீர் தோற்றத்தை ஏற்படுத்தும். மிரட்சியை உண்டு பண்ணும். இதோ! கார்லைல் அவர்களின் வரிகளைப் பாருங்களேன்.

உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாதது போன்று தோன்றும். – கார்லைல்.

வெற்றி நிச்சயம்! அது சர்வ நிச்சயம்!

  1. Life Direction Network

    எவர் மனதையும் எளிதில் தொடும் அழகான பதிவு, அரிய விசயத்தை புரியும்படி எளிமையாக சொல்லியுள்ளீர்கள். பயனுள்ள நல்ல பதிவு, வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published.