நமக்குளளே

நமது நம்பிக்கை துவங்கிய நாளிலிருந்து தொடர்ந்து படித்து வரும் வாசகர்களில் நானும் ஒருவன். நவம்பர் 2008ல் தலையங்கம் முதல் 16 தலைப்புகளும் வாசகர்களை இன்னும் சிறப்பாக வாழச் சொல்லும் விதத்தில் அமைந்துள்ளன. ‘நமது நம்பிக்கை’ மேலும் சிறப்படைய எனது வாழ்த்துக்கள்.
திரு.ஆர்.பாண்டியன், கரூர்.

நமது நம்பிக்கையின் நவம்பர் இதழ் மிக அருமை. மன அழுத்தம் நீங்க ஆசிரியர் கூறியுள்ள ஆலோசனைகள் மிகவும் பலன் அளிக்க கூடியதும், அதே சமயம் மிகவும் எளிமையானதுமான பயிற்சிகள். வாசிக்கும் போதே உற்சாகம் என்னைத் தொற்றுவதையும், மனம் லேசாவதையும் உணர்ந்தேன் நன்றி.
திரு.விவேகானந்தன், ஆண்டிப்பட்டி.

பல இழப்புகள், தோல்விகள்தான் அதிர்ஷ்டத்தின் படிக்கட்டுகள் என்பதை தே.சௌந்தரராஜன் பல மேற்கோள்களோடு விளக்கியிருப்பது நாமும் வெற்றிபெற புதிய எழுச்சியைக் கொடுக்கிறது.
திரு.ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணபுதூர்.

“நமது நம்பிக்கை” நவம்பர் 2008ல் வந்த அனைத்து பகுதிகளும் மிகவும் அருமை. குறிப்பாக அட்டைப்பட கட்டுரையான மனஅழுத்தம் நீங்க 30 வழிகள் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான வழிமுறைகளை உள்ளடக்கி இருந்தன. மற்றும் திரு.ம.திருவள்ளுவர் அவர்களின் சாதனை சதுரங்கம், தே.சௌந்தரராஜன் அவர்களின் அதிர்ஷ்டத்தின் திறவுகோல் பன்னிரண்டு, சோம வள்ளியப்பன் அவர்களின் நேர மேலாண்மை ரகசியம் போன்ற அனைத்து பகுதிகளும் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தன.
திரு.நா.காளிதாசன், காசிபாளையம்.

அதிர்ஷ்டத்தின் திறவுகோல் செய்யும் செயலை நன்றாகச் செய்தால் அதற்கான பயன் கைமேல் கிடைக்கும் என ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் குறள் மூலம் எடுத்துக்காட்டியது சிறப்பு. மன அழுத்தம் குறைய 30 வழிகள் பற்றி மரபின்மைந்தன் முத்தையா கூறிய கருத்துக்கள் எல்லாம் பின்பற்ற வேண்டியது கட்டாயத் தேவை. சவால்களைத் துணிவுடன் எதிர்கொண்டு முயன்றால் வெற்றி நிச்சயம் என்பது மிக அருமை. ‘வல்லமை தாராயோ’ என இராஜாராம் கூறியதில் பாரதியின் கருத்தும் எளிதாக வாழ்ந்திட வேண்டும் என்ற பட்டுக்கோட்டையின் கருத்தும் சிந்திக்கத் தக்கது.
திரு.இரா.தியாகராசன், இலால்குடி.

Leave a Reply

Your email address will not be published.