நமக்குள்ளே

நமது நம்பிக்கை பிப்ரவரி 2009 இதழில், “மனிதன் தன்னுடைய தனித்தன்மையால் ஒருவனிடமிருந்து இன்னொருவன் வித்தியாசப்பட்டு நிற்கின்றான். தனித்து நிற்பவனே பாராட்டப்படுவான்” என்னும் வரிகளில் மனிதனின் மகத்துவத்தை விவரித்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் உரை மிக அருமை.
திரு.த.சூரியதாஸ், சிலட்டூர்.

பிப்ரவரி இதழில் ஆசிரியரின் அட்டைப்படக் கட்டுரை மிகவும் அருமை எப்போதோ செய்கிற உதவி நிகரற்ற நன்மைகளாகத் திரும்ப வரும். முக்கிய இலக்கில் மட்டும் கவனம் செலுத்துதல் போன்ற வரிகளை பின்பற்றுபவர்கள் ஜெயிப்பது நிச்சயம்! சாதனை சதுரங்கள் தேவகோட்டை திருவள்ளுவர் நான்கு சதுரங்களை சரியாக விளக்கியது என்னை மிகவும் கவர்ந்தது. ரகுவரனின் “எப்போதும் முயற்சிக்கலாம்” கட்டுரை நமக்கு உற்சாகமூட்டியது. நமது நம்பிக்கை இதழ் இளைஞர்களின் வாழ்வில் வழிகாட்டி. இதழ் மேலும் மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
திரு.ஜி.மணிகண்டன், ஒசூர்.

சாதனை சதுரம் திரு.திருவள்ளுவர் தொடர் ஒவ்வொருவரும் பலமுறை படித்து மனதில் வைத்துக் கொள்ளவேண்டியது அவசியம். சுந்தர ஆவுடையப்பன் அவர்களின் வல்லமை இருந்தால், ஒளி இருந்தால், நம்பிக்கை இருந்தால் வல்லமை தானாக வரும். வாய்ப்புக்கள் நம் வாசலில் மண்டியிட்டுக் கிடக்கும் என்பது அருமையான வார்த்தைகள். மரபின்மைந்தன் முத்தையா நமக்கு கிடைத்த ஒரு புதையல்.
திரு.இரா.இலக்குமணப் பெருமாள், மணப்பாறை

கடந்த நம்பிக்கை இதழில் “எல்லை என்பதே இல்லை” என்னும் தலைப்பில் திருமதி.பாரதி பாஸ்கர் உரை மிகவும் அருமை. ராம்ராஜ் அதிபரைப்பற்றி குறிப்பிட்டு இருந்தார்கள். மனம் நெகிழ்ந்து போனேன். நமது நம்பிக்கை இதழுக்கு நன்றி.
அரிமா.அ.சிதம்பரநாதன், திருநெல்வேலி

வெற்றிபெற வழிகள் பற்றி மரபின்மைந்தன் கூறியது புதிய மனிதர்களையும், சூழல்களையும் எதிர்கொள்வது மற்றவர்களின் விமர்சனங்களைப் பொருட்படுத்தக் கூடாது உண்மையான வெற்றியாளர்களைப் பின்பற்றவேண்டும் என்பது சரியானது. எதிர்பார்ப்புகளை வளர்ப்பது போல் பொறுமையையும் வளர்க்க வேண்டும் . ஆயிரம் ஆண்டுகள் வாழ சௌந்ததரராசன் கூறிய 4 வழிகளைப் பின்பற்றவேண்டும்.
திரு.தியாகராசன், இலால்குடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *