வீட்டிற்குள் வெற்றி

-கிருஷ்ண வரதராஜன்

புதிய தொடர்

இனியவர்களே! வணக்கம். வீட்டிற்குள் வெற்றி என்ற இந்தக் கட்டுரைத் தொடர் வாயிலாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நமது நம்பிக்கை வாசகர்கள் வெறும் சுவாரஸ்யத்திற்காக புத்தகம் படிப்பவர்கள் அல்ல என்பதை சிகரம் உங்கள் உயரம் நிகழ்ச்சியன்று உணர்ந்தேன்.

நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்வியும் ஆழமான வளரும் சிகரங்கள் சிலர் கேட்ட கேள்விகள்கூட அவர்கள் வளர்ந்த சிகரங்கள் என்பதையே எனக்கு உணர்த்தியது.

தரமான படிப்பாளிகளை சந்திப்பதில் ஒரு படைப்பாளனாய் மகிழ்கிறேன். வாய்ப்புக்கு நமது நம்பிக்கை ஆசிரியருக்கும், நிர்வாக ஆசிரியருக்கும் என் நன்றிகள் என்றென்றும்.

சிறப்பாக பணியாற்றி அலுவலகத்தில் வெற்றி பெறுவது போல, நல்ல மனிதர் என்று நண்பர்களிடத்தில், சமுதாயத்தில் வெற்றி பெறுவது போல சிறந்த பெற்றோர்கள் என்ற வெற்றியும் நாம் பெறவேண்டியிருக்கிறது. இதுவே வீட்டிற்குள் நாம் பெறவேண்டிய வெற்றி.

சிறந்த பெற்றோர்கள் என்ற பட்டத்தை எந்த ஒரு பல்கலைக்கழகத்திலும் பெறமுடியாது. அதை நம் குழந்தைகளிடம்தான் பெறமுடியும். அந்தப் பட்டத்தினைப் பெற நாம் படிக்க வேண்டிய சில பாடங்கள்தான் “வீட்டிற்குள் வெற்றி” தொடர்.

நம் குழந்தைகள் மற்றவர்களால் பாராட்டப்பட வேண்டும் என்று நினைக்கிறோம். தவிர, நாம் பாராட்ட வேண்டும் என்று நினைப்பதில்லை. அதனால் குழந்தைகளும் நம்மை பாராட்டுவதில்லை.

பாராட்டும்படி குழந்தைகளுக்காக பலவற்றை செய்யும் பெற்றோர்கள் குழந்தைகளிடம் பாராட்டு பெறாததற்கு காரணம், செய்யும் விதம்.

குழந்தைகளை வழி நடத்துகிறேன் பேர்வழி என்று பல நேரங்களில் நாம் உளியாக மாறி கொத்திவிடுகிறோம். தேவையில்லை. நாம் ஒளியாக மாறினால் போதும். வெளிச்சம் இருக்கிற இடத்தில் வழி நடத்த தேவையில்லை.

குழந்தைகளிடம் மாற்றம் ஏற்படுத்தி அவர்களை வெற்றிக்குத் தயார் செய்கிற பணியில் உளியாக அல்ல, ஒளியாக இருங்கள் என்பதை இதில் பேசப்போகிறோம். இது விடுமுறை காலம், வீட்டிற்குள் நீங்கள் வெற்றி பெற சரியான தருணம். வாருங்கள், நம் வெற்றிப்பயணத்தை துவக்குவோம்.

விட்டாச்சு லீவு:
கொலம்பஸ்! கொலம்பஸ்!
விட்டாச்சு லீவு..
கொண்டாட கண்டுபிடித்து கொண்டா ஓர் தீவு!

என்றெல்லாம் இன்று குழந்தைகள் பாடுவதில்லை. மாறாக அவர்கள் விடுமுறையை கொண்டாடுவதற்கென்று தனித்தீவை அவர்களே கண்டுபிடித்து கொள்வதோடு மட்டுமல்லாமல் அதில் காணாமலும் போய், அவர்களே தனித்தீவு ஆகிவிடுகிறார்கள். தீவு என்றதும் ஏதோ ஓர் இடம் என நினைத்துவிடாதீர்கள். அது உங்கள் வீட்டில்தான் இருக்கிறது. அதற்கு பெயர் டி.வி.

தேர்வு முடிந்தவுடன் எல்லா கட்டுப்பாடுகளிலிருந்தும் சுதந்திரம் கிடைத்துவிடுகிறது. இனி நேரத்திற்கு எழுந்திருக்க வேண்டியதில்லை. எப்போது வேண்டுமானாலும் குளிக்கலாம், சாப்பிடலாம், முக்கியமாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் டி.வி. பார்க்கலாம் என்று டி.வி.க்குள் ஐக்கியமாகிவிடுகிறார்கள். ஐக்கியமாகிவிடுவார்கள் என்றால் கூப்பிடுவது கூட காதில் விழாது என்கிற அளவிற்கு.

மற்ற நாட்கள் என்றால், புத்தகத்தை எடுத்துப்படி என்று கூறி டி.வி.யை அணைத்து வைக்கலாம். ஆனால் இது விடுமுறை காலம் என்பதால் அந்த பிரம்மாஸ்திரம் எடுபடாது. வெற்றிக்கான வேலைகள் எவ்வளவோ இருக்கிறது. என்பதை உணர்த்த அவர்களை டி.வி.யில் இருந்து மீட்டெடுப்பதுதான் வீட்டிற்குள் நாம் பெறப்போகிற முதல் வெற்றி.

டெலிவிஷமா? டெலிவரமா?

டி.வி. அதிகம் பார்ப்பது சரியா? தவறா? என்று முதலில் பார்ப்போம். அப்போதுதான் குழந்தைகளுக்கு அதைப் பற்றி புரிய வைக்க முடியும்.

டெலி வரம்:

டி.வி. மட்டும் இல்லை என்றால் ஒரு தமிழன் ஆஸ்கார் பெறுகிற அதே தருணத்தில் அதைப் பார்த்து சிலிர்த்திருக்க முடியாது. உலகத்தை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியாது. பல துறைகளை பற்றியும் அதன் வளர்ச்சியைப் பற்றியும் தெரிந்திருக்க முடியாது. முக்கியமாக உலகத்தை நம் வீட்டிற்குள் கொண்டு வந்து வைத்திருக்க முடியாது.

டெலி விஷம்:

நம் மூளையை மழுங்கடிக்கும் ஒரு விஷயத்தை விஷமென்று சொல்லாமல் வேறெப்படி சொல்வது. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு மிகச்சரியான உதாரணம் டி.வி.

டி.வி., மூளையின் செயல்திறனை குறைக்கிறது என்பதை கொஞ்சம் யோசித்தால் நீங்களே கூட புரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு நீங்கள் புத்தகம் படிக்கும்போது – அதில் உள்ள காட்சிகளை உங்கள் மனம் கற்பனை செய்யும். அதைப்பற்றி சிந்திக்கும். எனவே மூளை சுறுசுறுப்பாக இயங்கும். ஆனால் டி.வி. பார்க்கும்போது நீங்கள் எதையும் கற்பனை செய்ய முடியாது. திரையில் வரும் காட்சிகளை அப்படியே பார்த்துக் கொண்டு இருப்பீர்கள். டி.வி. பார்த்து முடிக்கும்வரை உங்கள் மனம் மரத்து போயிருக்கும். அதனால்தான் இந்நிலை (ஙண்ய்க் டஹழ்ஹப்ஹ்ள்ங்க்) மனதின் பக்கவாதம் என்கிறார்கள்.

விளம்பர வலை:

கருத்துக் கணிப்பு ஒன்றின்படி ஆண்டொன்றிற்குள் 20,000 விளம்பரங்களை குழந்தைகள் பார்க்கிறார்கள். இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம், கிட்டத்தட்ட விளம்பரத்தில் வரும் அனைத்தையுமே வாங்க ஆசைப் படுகிறார்கள்.

ஆசைக்கும் தேவைக்குமான இடைவெளி குறைந்து, காணும் அனைத்தையும் வாங்கத் துடிக்கும் மன அவசரத்தை டி.வி. ஏற்படுத்தி விடுகிறது. இதனால் குழந்தைகளின் மனமும் பெற்றோர்களின் பர்ஸும் காலியாகிவிடுகிறது.

டி.வி.யினால் ஏற்படும் பாதிப்புகள்:

மனதளவில் மட்டுமல்ல, உடலளவிலும் பாதிக்கப்படுகிறார்கள். அதிக நேரம் டி.வி. பார்க்கும்போது எதையாவது கொறிக்கத் தோன்றுகிறது. என்ன சாப்பிடுகிறோம்? எவ்வளவு சாப்பிடுகிறோம்? என்கிற உணர்வே இல்லாமல் கொழுப்பு நிறைந்த தின்பண்டங்களை சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் குண்டாகிறார்கள்.

டி.வி. பார்க்காத குழந்தைகளைவிட டி.வி. பார்க்கும் குழந்தைகளுக்கு (ஆஙஐ) பாடி மாஸ் இன்டெக்ஸ் அதிகமாக உள்ளது என கண்டறிந்திருக்கிறார்கள். அதாவது உயரத்திற்கு ஏற்ற எடையை விட அதிகமாக இருப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள்.

தேவைக்கு முன்பாகவே செக்ஸ் (ள்ங்ஷ்) பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்திவிடுவதால் உண்டாகும் மனப்பாதிப்புகள், அதிகநேரம் டி.வி. பார்ப்பதால் கண்ணெரிச்சல், உடல் சூடு அதிகரிப்பது என சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். டி.வி. டெலிவிஷமா? டெலிவரமா?

பாதிப்புகளை தெரிந்துகொள்வது மட்டுமே அதைவிட்டுவிட போதுமானதல்ல. சிகரெட் குடிக்கிற எல்லோருக்கும் அதன் தீமை தெரியும். பிறகேன் விடமுடியவில்லை? தன்னை கட்டுப்படுத்திக் கொள்கிற மன உறுதி இல்லை. அந்த மன உறுதியை குடும்பத்தில் உள்ள எல்லோரிடமும் வளர்க்க இதை கூட்டு முயற்சியாக்குங்கள்.

கூட்டு முயற்சி:

நீங்கள் குழந்தைகளை கட்டுப்படுத்தி அப்போதுதான் டி.வி.யை அணைத்திருப்பீர்கள். வீட்டில் இருப்பவர்கள் வேறு யாராவது வந்து டி.வி.யில் உட்காருவார்கள். குழந்தைகள் மறுபடியும் டி.வி.க்கு வந்துவிடும்.

எனவே டி.வி.யை எப்படி பயன் படுத்துவது? என்பதை விவாதமாக்குங்கள்.

எல்லோரும் விவாதத்தில் ஆர்வமாக பங்கேற்க, யார் எல்லோரும் ஏற்றுக்கொள்கிற மாதிரி அதிகமான கருத்துக்கள் சொல்கிறார்களோ, அவர்களுக்கு பரிசு என்று முதலிலேயே அறிவித்துவிடுங்கள்.

விவாதத்தில் மேற்கண்ட கருத்துக்களையும், சேர்த்துக்கொள்ளுங்கள். முடிவுகள் கீழ்க்கண்டவாறு அமையும்:

எடுக்க வேண்டிய முடிவுகள்:

ஒரு நாளைக்கு டி.வி. பார்க்க வேண்டிய நேரம், தவிர்க்க வேண்டிய நேரம் எது எது என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

போட்ட படத்தையே போட்டுக் கொண்டிருப்பார்கள். நாமும் அவர்களை திட்டிக் கொண்டே பார்த்த படத்தை பார்த்துக் கொண்டிருப்போம். இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். இரண்டாவது முறையாக எந்த நிகழ்ச்சியையும் பார்ப்பதில்லை என்று முடிவெடுங்கள்.

ஏதாவது ஒரு இட்ஹய்ய்ங்ப் பார்ப்பது என்று முடிவு எடுங்கள். எந்த நிகழ்ச்சிக்காக டி.வி.யை ர்ய் செய்தீர்களோ அது முடிந்தவுடன் அணைத்து விடவேண்டும்.

விளம்பர இடைவேளைகளில் இட்ஹய்ய்ங்ப் மாற்றி வேறு நிகழ்ச்சிகளை தேடக்கூடாது. இதனால் இந்த இட்ஹய்ய்ங்ப்லில் விளம்பரம் போடும்போது அந்த இட்ஹய்ய்ங்ப் , அந்த இட்ஹய்ய்ங்ப் லில் விளம்பரம் போடும்போது இந்த இட்ஹய்ய்ங்ப் என ஏக காலத்தில் 2 இட்ஹய்ய்ங்ப் பார்க்கும் தலைவலி கூடும்.

வாரத்தில் சில நாட்களுக்கு சர்ய்-யங்ஞ் க்கு அனுமதி கிடையாது என்பது போல வாரத்தில் சில நாட்கள் டி.வி. பார்க்க யாருக்கும் அனுமதியில்லை.

(அந்த நாட்கள் சுவாரஸ்யமானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் எடுத்த முடிவு இருக்குமிடம் தெரியாமல் போய்விடும். எனவே எச்சரிக்கை)

புத்தகம் படிக்கும் ஆரோக்கியமான பழக்கத்தை ஏற்படுத்த யாராக இருந்தாலும் ஒரு நாளுக்கு 30 பக்கம் படித்தால்தான் டி.வி. பார்க்க அனுமதி என்று முடிவு செய்யுங்கள்.

படுக்கப் போவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே டி.வியை அணைத்து விடுங்கள். காரணம் டி.வி. பார்த்துவிட்டு அப்படியே தூங்கப் போனால் பார்த்த காட்சிகள் மனதில் பதிந்து கனவுகளாக தூக்கத்தை தொந்தரவு செய்யும்.

டி.வி. பார்ப்பது ஒரு நாளின் கடைசி நிகழ்வாக இருக்கக்கூடாது. உணவுக்குப் பின் சிறிது நேரம் நடந்துவிட்டு வருவது என்பதும், அதன் பின் டி.வி. பார்ப்பதில்லை என்றுகூட முடிவு செய்து கொள்ளலாம்.

கட்டாயம் பார்க்க வேண்டியவைகள் என்று தரமான நிகழ்ச்சிகளை பட்டியலிடுங்கள். அந்த நேரத்தில் யார் டி.வி.யை போட்டாலும் அதைத்தான் பார்க்க வேண்டும் என்று முடிவெடுங்கள். மிகுந்த நன்மையை தரும் இந்த முடிவை அவசியம் எடுத்துவிடுங்கள்.

முடிவெடுப்பதில் அல்ல, அதை நிறைவேற்றுவதில் தான் வெற்றி இருக்கிறது.

அதை டி.வி.க்கு பக்கத்தில் மாட்டிவிடுங்கள்.

முடிவுகளை நடைமுறைப்படுத்த:

டி.வி.யை விட சுவாரஸ்யமானது வாழ்க்கை. அதை முதலில் புரிய வையுங்கள். அதற்கு டி.வி. பார்க்கக்கூடாது என்று முடிவெடுத்த நாளில் வீட்டின் உள் அலங்காரத்தை புதுமையாக மாற்றும்படி போட்டி வைத்து எல்லோரையும் அதில் ஈடுபடுத்துங்கள்.

டி.வி. பார்க்கும்போது எந்த வகை நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கிறார்கள் என்று கவனித்து, அத்துறை குறித்த புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். இதனால் டி.வி. பார்ப்பதற்கும் புத்தகம் படிப்பதற்கும் இடையே உள்ள சுவை வேறுபாட்டை அறிந்து கொள்வார்கள். மேலும் புத்தகங்கள் காந்தங்கள். தன்னை நோக்கி ஈர்க்கிற வேலையை அதுவே செய்யும்.

ஹாலில் வந்து உட்கார்ந்தாலே டி.வி. முன்னால்தான் உட்கார வேண்டும் என்பது போலில்லாமல் டி.வி இருக்கும் இடத்தை மாற்றி அமையுங்கள். டி.வி. பார்க்க வேண்டும் என்றால் திரும்பித்தான் பார்க்க வேண்டும் என்றிருக்கட்டும். இதன் மூலம் ஹாலில் உட்கார்ந்தாலே டி.வி. பார்க்க வேண்டும் என்ற எண்ணம் குறையும்.

அவர்கள் வாழ்க்கைக்கு எதெல்லாம் முக்கியம் என அவர்களை விட்டே ஒரு பட்டியல் தயாரிக்கச் சொல்லுங்கள். எந்த படிப்பில் சேர வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? எந்த வேலைக்கு செல்ல வேண்டும்? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஓர் அட்டவணை தயாரிக்கச் சொல்லுங்கள். இதன் மூலம் டி.வி.க்கு தன் வாழ்வில் எந்த இடம் தரவேண்டும் என்பது அவர்களுக்கே புரியும்.

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *