கவனமாகக் கையாளுங்கள்
எம்பார்ட் தெரிந்திருக்கும். யு.எஸ். தேசத்தின் கால்பந்தாட்ட குழுவிற்கு பயிற்சியாளராக வெகுகாலம் இருந்தவர். மிகக் கடுமையான பயிற்சியாளர். ஒரு பந்தயத்தில் யு.எஸ். அணி தோல்வி கண்டது. பயிற்சியாளர் என்ற முறையில் அவரிடம், என்ன காரணம் என்று கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில், ‘எங்கள் அணி சிறப்பாகத்தான் ஆடியது. நாங்கள்
மேலும் சில கோல்கள் போட்டு வெற்றி பெற்றிருப்போம். என்ன செய்ய, அதற்குள் ஆட்டம் முடிந்துவிட்டது. எங்கள் அணிக்கு நேரம் போதவில்லை’.
எப்படி இருக்கிறது பதில்? சாமர்த்தியமான பதில்.
முதல் பாதி 40 நிமிடங்கள். அடுத்த பாதி 40 நிமிடங்கள் தேவைப்பட்டால் மேலும் பத்து பத்து நிமிடங்கள், கூடுதல் நேரம் (எக்ஸ்ட்ரா டைம்). இதுதான் ஆட்டத்தின் விதி. அதற்குள் எவ்வளவு கோல்கள் போடுகிறோமோ, அதுதான் கணக்கு. அதனை வைத்துத்தான் வெற்றி தோல்விகள் முடிவு செய்யப்படும். குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிக எண்ணிக்கையில் கோல்கள் போடும் அணிக்குத்தான் வெற்றி.
பள்ளி கல்லூரி தேர்வுகள் என்றால் மூன்று மணிநேரம். இஅப, நஅப, எதஉ, எ ஙஅப, மடநஇ என்று எந்த கம்படிட்டிவ் தேர்வுக்கும் என்று குறிப்பிட்ட கால அளவு உண்டு. அதற்குள், என்ன எழுத முடியுமோ. அவைதான் மதிப்பெண்கள் பெற்றுத்தரும். எல்லா கணக்கும் எனக்குத் தெரிந்ததுதான். ஆனால் கடைசி இரண்டு கணக்குகளை போடமுடியவில்லை. அதற்குள் மணி அடித்து விட்டார்கள். அடிப்பார்கள் தான். பேப்பரை பிடுங்கி விட்டார்கள். வாங்கிக் கொண்டு விடுவார்கள்தான்.
இந்த மாதம் உற்பத்தி இலக்கினை (புரொடக்ஷன் டார்கெட்) அடையவில்லை. அல்லது விற்பனை இலக்கினை அடையவில்லை. ஏன் என்று கேட்கிறார்கள். ‘இந்த மாதத்தில் வேலைநாட்கள் குறைவு. அதிகமான விடுமுறை நாட்கள் வந்துவிட்டன. அல்லது இது பிப்ரவரி மாதம். மாத நாட்களே குறைவு’. சொல்ல முடியுமா? சொன்னால் ஏற்றுக் கொள்ளுவார்களா?
திறமைகள் இருந்தால் போதாது. அதனை வேண்டிய காலக்கெடுவிற்குள் முடிக்கவேண்டும். அந்தத் திறனும் அவசியம்.
வேகமாக செய்ய வேண்டும் என்பது தெரிந்த செய்திதான். இதற்கும் ஒரு மறுபக்கம் உண்டு. வெற்றிகளை தவறவிடாமல் இருப்பதற்கு அதனையும் தெரிந்துகொள்ள வேண்டும். எதிர்விளைவுதரும் மறுபக்கத்தினை, ஆங்கிலத்தில் ஊப்ண்ல் ள்ண்க்ங் (ஃபிலிப் சைடு) என்பார்கள். மிக வேகமாக செய்வதன் ஃபிலிப் சைடு என்ன?
தொலைக்காட்சிகளில் ஒரு செய்தி பார்த்திருப்பீர்கள். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் அறிவிக்கப்பட்டன. கடந்த ஆண்டு, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் மிகப்பெரும் வரவேற்பினைப் பெற்றன. இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக வரவேற்பு பெறும். அதில் செய்யக்கூடிய வியாபார வாய்ப்புகளை தவற விடக்கூடாது என்று பல வியாபாரிகள் முடிவு செய்தார்கள்.
அவர்கள் செய்யக்கூடிய வியாபார வேலைகளை உடனடியாக தொடங்கினார்கள். மற்றவர்களை முந்த வேண்டும். முதலில் ஆயத்தமாகி நல்லதுதான் அவர்களின் நோக்கம். கொல்கத்தா நகரில் இருக்கும் அவர்களில் சிலர் செய்தது, குறிப்பிட்ட மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் என்பதுபோல அணிகளின் பெயர்ளைப் போட்டு, வண்ண வண்ண டி-சர்ட்டுகள் தயாரித்ததுதான். பெரிய எண்ணிக்கைகளில் தயாரித்து விட்டார்கள்.
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படுகிறது. தேதிகள் முடிவாகின்றன. ‘தேர்தல் நேரத்தில் லட்சக் கணக்கானவர்கள் குழுமும் போட்டிகனை நடத்துகிறேன் என்கிறீர்களே, தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கும் நேரமாக அது இருக்குமே! அரசால் இரண்டு மிகப்பெரிய நிகழ்வுகளுக்கும் போதிய அளவு பாதுகாப்பு கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. கிரிக்கெட் போட்டிகளின் தேதிகளை மாற்றிக் கொள்ளுங்கள்’ என்றது மத்திய அரசு.
தேதி மாற்றினால், பல்வேறு தேசங்களைச் சேர்ந்த வீரர்கள் ஆடும் ஆட்டங்களில் பல சிக்கல்கள் வரும். அதனால் அதே நாட்களில் நடத்திக்கொள்ளுகிறோம். இந்தியாவில் இல்லை. தென் ஆப்பிரிக்காவில் என்று முடிவெடுத்தது ஐ.பி.எல். நிர்வாகம். அரசும், ஐ.பி.எல். நிர்வாகமும் முடிவுகள் அவர்களுக்கு ஒத்துவரும் என்று முடிவெடுத்தார்கள்.
அதனால் பாதிக்கப்பட்டது, நேரடியாக கண்டுகளிக்க அரங்குகளில் மிகப்பெரிய கூட்டம் குழுமுமென்று யோசித்து டி-சர்ட் தயாரித்தவர்கள்தான். மிகப்பெரிய வருத்தத்தில் இருக்கிறார்கள். குறிப்பிட்ட நிகழ்வு மற்றும் அணி பற்றிய தகவல்களுடன் தயாரிக்கப்பட்ட டி சர்டுகள். அந்த நிகழ்விற்குப் பிறகு எப்படி விற்பனையாகும்? தள்ளுபடியில்தான் தள்ள வேண்டும். வேறு வழி?
வேகமாக செய்ததனால் வந்த நட்டம்!
நி
அது மும்பையை தலைமையிடமாகக் கொண்டு நடக்கும் நிறுவனம். அதன் கிளைகள், அலுவலகங்கள் பல ஊர்களிலும் உண்டு. ஹைதராபாத் கிளை அலுவலகத்தில் இருந்து தலைமை அலுவலகத்திற்கு ஒரு செய்தி வந்தது.
‘நேற்று இரவு நமது கிளை அலுவலகமிருக்கும் வளாகத்தில் திருட்டு நடந்திருக்கிறது. நம் அலுவலகம் உட்பட, மொத்தம் ஏழு அலுவலக கதவுகளை உடைத்து கொள்ளையடித்திருக்கிறார்கள். சேஃப்ட்டி லாக்கரையும் திறந்து ரொக்கப் பணத்தினையும் எடுத்துச் சென்றுவிட்டார்கள். நாம் வைத்திருந்தது அன்றைய கலெக்ஷன், ரூபாய் 80 ஆயிரம்.’
‘அடடா! நாம் காப்பீடு (பர்க்லரி இன்சூரன்ஸ்) செய்திருக்கிறோமில்லையா?’
‘ஆமாம்’
‘அப்படியென்றால் நட்ட ஈடு கிடைக்குமல்லவா?’
‘ஆமாம்’
‘இரண்டு நாட்கள் கழித்து கிடைத்த தகவல், ‘நமக்கு காப்பீடு நிறுவனம் இழப்பீடு தொகை தராது’
‘ஏன்?’
‘நாம் காப்பீடு செய்திருக்கிறோம் தான். ஆனால் 24 மணி நேர காவலுக்கு ஏற்பாடு செய்திருக்கவில்லை. அலுவலக நேரமான பகல் பொழுதில் மட்டும் தான், நம் அலுவலகத்தில் செக்யூரிட்டி இருக்கிறார். அதனால் இழப்பீடு தரமாட்டார்கள்’.
‘இதென்ன புது செய்தியாக இருக்கிறது!’
‘இல்லை. முன்பே காப்பீடு எடுக்கும் போதே, அவர்களுடைய நிபந்தனைகளில் ஒன்றாக இதுவும் இருந்திருக்கிறது’.
‘நமக்குத் தெரியாதா?’
‘சிறிய எழுத்துக்களில் அதுவும் பல்வேறு நிபந்தனைகளில் ஒன்றாக இருந்ததனால் கவனிக்கவில்லை’.
கடந்த பல ஆண்டுகளாக பிரீமியம் கட்டி வருகிறார்கள். தற்சமயம் நிகழ்ந்திருப்பதுபோல், ஒரு திருட்டு/கொள்ளை நடந்தால், அந்த நட்டத்தினை தவிர்ப்பதற்காகவே கட்டப்பட்டு வந்த தொகை. ஆனால் பலன் இல்லாமல் வீணாகிவிட்டது. வீணாகிப்போனது கொள்ளை போன பணம் மட்டுமல்ல. அதுவரை கட்டி வந்த காப்பீட்டு பிரீமியத் தொகையும்தான்.
எல்லோரும் செய்வதை செய்துவிட்டேன். எப்போதோ எடுத்து விட்டேன். தொடர்ந்து விடாமல் செய்து வருகிறேனே! இவை எதுவுமே பலன் தரவில்லை.
Leave a Reply