அந்த விருந்தில் எளிய ஆடைகளுடன் நுழைந்தார் ஒரு கவிஞர். பலரும் கண்டுகொள்ளவில்லை. பகட்டான ஆடையணிந்து வந்தார். பலரும் எதிர்கொண்டு வரவேற்றனர். அவர் கவிதைகளைப் படிக்காமலேயே புகழ்ந்தனர். உணவுண்ண அழைத்ததும், உணவு வகைகள் ஒவ்வொன்றாய் எடுத்து உடைகளில் தெளித்துக் கொண்டார். அதிர்ந்து நின்றவர்களிடம் அமைதியாகச் சொன்னார்,
“ஆடைகளை வைத்துத்தானே ஆளை மதிக்கிறீர்கள். எனவே, பகட்டான ஆடைகளுக்குப் பந்தி வைக்கிறேன்.” அவர்தான் கவிஞர் ஷேக் சாலைதி.
Leave a Reply